திருப்பூவணப் புராணம் – (15)

0

கி.காளைராசன்

பத்தாவது

இலக்குமிசாபமோசனச்சருக்கம்

 

786      பான்மைசேருலகம்பரிந்துகாத்தளிக்கும் பகவனும்படர்சிறையளிசெந்

தேன்விருந்துண்ணுஞ் செய்யபூங்கோயிற்றிருவுமீங்குற்றதென்னெனலு

நான்மறைதினமுநாவிளையாடுநற்சவுனகமுனிகேளென்

றானனமலர்ந்தேயருந்தவத்துறைபோமழகியசூதன்பின்மொழிவான்

787      முன்னொர்நாளுலகமூடிருய்விழுங்குமுழுமணிக்கிரணமொய்த்தெழுசெம்

பொன்னினாற்சமைத்தபித்திகைதொறுநற்பொங்கொளிபுதுவெயிலெறிப்பத்

துன்னியெண்டிசையுஞ்சுடர்விடுசிகரச்சோதிவான்முகடுபோழ்ந்தவிரு

மன்னுமண்டபத்தின்மத்தியின்முடங்குவாலுளைமடங்கலாசனத்தில்

 

788      தலைமைசேர்மகுடந்தடமுடிதயங்கச்சங்குசக்கரக்கைநின்றிலங்க

வுலகிருளோடவிலகொளிபரப்புமொருமணிகிடந்துமார்பொளிரப்

பலகதிரவிர்பொற்படாமரைவயங்கப்படிமிசையளந்ததாள்விளங்க

மலர்மகளோடுமரகதமலைபோல்வைகினன்வைகுண்டமூர்த்தி

 

789      மாறின்முக்கோடிமருவியவேலைவைகும்வைகுண்டலோகத்தி

னேறியசெங்கையிலங்கியசங்குமெரிசுடராழியுமேந்து

நூறொருகோடிநாரணர்சூழ்ந்துநுணங்கியகேள்வியின்வணங்கி

வேறுவேறாயமிக்கநற்றுதியின்விரும்பியாங்கவரவர்விளம்ப

 

790      வில்லுமிழ்மாலைமிக்கதந்திரிசேர்வீணைநல்விஞ்சையர்பாட

நல்லெழிலரம்பைமெல்லியலார்கணாட்டியநின்றுமுன்னடிப்பச்

சொல்லிடுந்தடக்கைசுமந்திடுஞ் சூரற்றுளங்கு கஞ்சுகியர்கடுதிப்பப்

பல்லியந்துவைப்பப்பண்டருவேதபராயணர்பணிந்துமுன்பரவ

 

791      அந்தநற்சமயமண்டபமதனிலளிக்குலங்களிக்கும்வண்பொகுட்டுக்

கந்தமாமலரில்வந்துதிக்கின்றகடவுளர்பதின்மருமோரேழ்

மந்திரகோடிநாதரும்வயிரவச்சிரத்தடக்கைவான்றருநே

ரிந்திரனிமையோரியாவருமீண்டியிருமருங்கிறைஞ்சிநின்றேத்த

 

792      திருமலர்ப்பொகுட்டுச் செய்யபீடிகையிற்றிசைமுகன்வரவருள்புரிந்தா

னருமறைமுநிவர்க்கமுதநற்கிரணவழகொழுகானனமலர்ந்தான்

மருவியகுலிசவானவன்றனக்குமணிமுடிதுளக்கினனேனைக்

கரிலிலதாயகடவுளர்தமக்குக்காண்டகுகடைக்கணோக்களித்தான்

 

793      பங்கயத்தவன்மேற்பார்வையங்கிருத்திப்படைத்திடுந்தொழினலனெவனாற்

றுங்கநற்சுரபூபதிபுகழ்நினதுதூயபொற்பதிநலனேவ

னிங்கெமக்குணர்த்தியெனுமொழியிசைத்தாங்கெண்ணரும்பண்ணவர்நீவிர்

நுங்கடம்பணியுநும்வரன்முறையுநுவலுமென்றனனுனித்துணர்வோரின்

 

794      வேதநான்முகனேயாதிவிண்ணவர்கண்மேகவண்ணன்கழலிறைஞ்சி

யோதுநின்னருளாலுற்றவெம்பதங்கட்கோரொருகுறையுமோவின்றாற்

றாதையுந்தாயுந்தானருள்புரியத்தநயர்கடளர்வரோவென்னாப்

பாததாமரையின்முறைமுறைதொழுதுபரிந்துமுன்பரவமேயினரால்

 

795      வனமிகுசிகரமந்தரகிரியைமத்தெனநிறுவியோர்தாம்பாப்

பனகநற்றுத்திப்பணாமணிபிதுங்கப்பிணித்துநற்கச்சபவுருவாய்க்

கனைகடல்வயிறுகலங்கிடக்கடைந்துகடவுளர்க்கமுதுநன்களித்து

தினகரனெனவேசெஞ்சுடர்பரப்புந்திருமிகுமொருமணிமார்பா

 

796      திகழ்தருநாரசிங்கமதாகிச்செம்பொன்மேனியன்றனையுகிராற்

புகழ்பெறமார்புகீண்டணிவாகைபுனைதிருக்கரவரவிந்த

விகழ்தலிலிருகோட்டேனமதாகியேழ்நிலமேந்தியவெந்தாய்

சுகமிகவுயிர்க்குத்துணிந்தருள்புரியுந்தொல்லருட்சோதிவானவனே

 

797      உறுதினமுலர்ந்தவுகாந்தகாலத்திலுததிகளேழுமொன்றாகி

மறுகுறக்கண்டுமன்னுயிர்க்கிரங்கிமாற்றருந்திருவுருமாற்றி

யறைவரிதாயதிறலுடனோங்கியஞ்சலென்றாங்கொர்செஞ்சேலாய்ச்

சிறுசெலுப்புரையிற்சிந்துவேழடக்குந்தீதறுதிகழ்சதுர்வேதா

 

798      மன்னிவுலகில்வயப்பரியாகிவருங்கருணாகரமூர்த்தீ

தன்னிகராயசதுர்மறைவிளக்கந்தந்திடவந்ததம்பிரானே

பன்னுநல்லன்பர்பவந்தனைச்சாடிப்பரிவினாண்டருள்புரிபரம

நின்மலஞானவீடருள்கருணைநீர்பொழிநீண்டமாமுகிலே

 

799      வாமனவுருவமாகிமாவலியைவன்சிறைவைத்திடும்வள்ளால்

பூமலர்வரளிகொண்டுபூங்கழைவிற்பூட்டியேயுலகெலாங்காம

காமியைநல்குங்காமனைத்தந்தகண்ணகாயாமலர்வண்ண

நேமியும்வளையுநின்றிலங்கியகைநேரிலரநின்மலமூர்த்தி

 

800      ஒருபடியண்டமுண்டதையன்றியோரடியாலுலகளந்தோய்

கருமுகிலெனவேகண்படுத்தருளுங்கட்செவிக்கணபணாடவியின்

பருமணியெறிக்கும்பயோததிநாப்பட்பன்னகப்பாயனீத்தயோத்தித்

திருநகருலகமருள்செயவந்ததீதறுசீதரமூர்த்தீ

 

801      விசிதரங்கறங்குவேலைசூழ்ஞாலமேவியபொதுக்கடிந்தருளுந்

தசரதன்மதலையாகவந்திராமசந்திரனெனும்பெயர்தாங்கி

வசையறுதவத்துக்கவுசிகன்பின்போய்மன்னுதாடகையுயிர்வாங்கித்

திசைதொறுமுரியவிசைநிறுவியமெய்திகழ்ந்திடுந்திருமறுமார்பா

 

802      காதலிற்றவங்கூர்கவுசிகன்வேள்விகாத்தெதிர்சுவாகுயிர்பதைப்ப

மேதினிப்படுத்திவிலகரிதாமைம்புலப்பகைவென்றருண்மேலாங்

கோதிலாக்குணக்குன்றனையகோதமன்சொல்கொடியிடைகொடியகற்சாபம்

பாதநுண்டுகளாற்படவுருவளித்தபாதபஞ்சாயுதநாதா

 

803      வனமிகுந்தோங்குவரிசிலைகுனித்துவான்முகடதிர்தரமுரித்துச்

சனகர்கோன்றந்தசானகியின்றன்றனிமணமிதிலையில்வேட்டுப்

பனகநற்றுத்திப்பணாமுடிகிடந்தபடிநடுங்கிடப்பரசுராமன்

றனதுவிற்குனித்தவனமிகுமலர்செந்தாமரைத்தடக்கைநாயகனே

 

804      மன்னியவசிட்டமாமுனிசெம்பொன்மணிமுடிகவித்திடும்வேலை

பன்னுகைகேசிபண்டுகொள்வரத்தாற்பரவருந்தாதைசொற்றவறா

தன்னமன்னவளோடரியதம்பியுடனணைந்துநற்குகணைநண்புவந்து

பொன்னுலகேத்தத்தன்னிகர்வனத்திற்போதுபொற்பாதபுண்டரீகா

 

805      அணைந்தபின்கானத்தணைந்தவான்றந்தைக்கந்தியக்கடன்முறையாற்றிப்

பணிந்துபின்சென்றபரதனுக்குரியபரிவுடன்பாதுகையுதவி

வணங்குறுசரபங்கனுக்குயர்ந்தோங்குவான்பதமளித்துயிர்விராதன்

றணந்திடத்தடிந்ததண்டுழாயலங்கற்றாங்கியபூந்தடந்தோளாய்

 

806      மாற்றருஞ்சடாயுவுடன்மகிழ்கூர்ந்துமாயமாரீசனைவதைத்துக்

கூற்றெனவந்தச்சானகிதன்னைக்கொடியராவணன்கொடுபோத

வேற்றமர்பொருதேயிறந்தபின்றந்தைக்கீறுசெய்கடனிழைத்தளவி

லாற்றல்சேர்கவந்தனாருயிர்கொண்டவலைகடலச்சுதானந்தா

 

807      தராதலத்தொடுவான்றடவிடுமருத்துத்தந்தருண்மைந்தனைக்கண்டு

பராவருகிரணப்பரிதிசேய்கமலப்பதம்பணிந்தேத்தவேழ்பராரை

மராமரமுருவவாளிதொட்டுலையாவாலிமெய்பதைத்திடவதைத்த

வராவணைமீதினாழியினாப்பணாநந்தத்தறிதுயிலமர்வோய்

 

808      வானரசேனைதன்னொடுமேகிமறிதிரைக்கடற்கரைகட்டி

யீனமின்மேன்மைவிபீடணனன்பினேய்ந்திடவிலங்கையையீந்து

தானவர்கிளையைவேரொடுந்தடிந்துதசமுகன்றன்சிரமரிந்தாங்

கானசானகிதன்சிறைவிடுத்தருச்சித்தயோத்திவந்தணிமுடிபுனைந்தோய்

 

809      என்னவேபன்னியின்னனவிமையோரேத்திடவெம்பிரான்மகிழ்ந்தா

னன்னவர்தமக்குவேண்டியவரங்களளப்பிலாதனவளித்தருளிப்

பன்னருந்திறல்சேர்பண்ணவர்தமக்குப்பரிவுடன்விடைகொடுத்ததன்பின்

றன்னிகர்மணிப்பொற்சயனமண்டபத்திற்சார்ந்தனன்சக்கரக்கடவுள்

 

வேறு

810      விஞ்சுசோதவியன்மணிமண்டப

மஞ்சின்மீதுமலர்த்திருமாதரா

ளஞ்சியேபொன்னடிவருடத்திருக்

கஞ்சமாமலர்க்கண்வளர்ந்தானரோ

 

811      ஆதியந்தமிலாதவருளின்வாழ்

போதரைந்துபுலன்களடக்கினோர்

கோதிலாதகுணத்தர்குரோதமின்

மேதகுந்திறல்வேதபராயணர்

 

812      குறளுரூபரங்குட்டத்தளவினர்

பொறையினீண்டினர்பொங்கெழின்மெய்முக

மிறையுநேர்கிலரெண்ணருமாதவத்

துறையின்மேவினர்தத்துவசுத்தியோர்

 

813      சீலநற்சயன்றீதில்விசயன்சேர்

மூலவேதமுழங்கிடுமுன்றில்வாய்

நீலமேனிநிமலனைநேடிய

வாலகில்லியர்வந்துபொருந்தினார்

 

814      வந்துசேர்ந்தமணிக்கடைவாயிலிற்

றந்துகாவலர்தாமெதிர்தாழ்ந்தெழீஇச்

சிந்தையார்வந்தெவிட்டமுன்மண்டபத்

தந்தமாதவர்க்காதனநல்கியே

 

815      அருக்கியத்தொடருச்சனையாற்றியே

பொருக்கெனப்பணிவுற்றுப்புகழ்ந்துநன்

கிருத்தியின்பத்திருவருமேகியே

திருக்குலாமணிமுன்றிலிற்சென்றனர்

 

816      சென்றுபையவச்சேடியர்தங்களை

வென்றிமேவுநர்மெல்லவிளித்தரு

டுன்றுமாதவர்தொக்கனரெம்பிராற்

கொன்றுமன்பினுரைக்குதிரென்னவே

 

வேறு

817      பிருகுமாமுனிதவப்பேற்றின்வந்தருண்

முருகுலாவியமுகைவிண்டமுண்டகத்

திருமிகவிளங்குசெல்வத்தின்செல்வமே

தருணமண்டலங்கொள்சந்திரசகோதரி

 

818      மண்ணடையுயிரெலாம்வளர்த்திடுந்திருக்

கண்ணனுக்குத்திருக்கண்களாகிய

பெண்ணமுதேதவப்பெற்றியோர்கட

நுண்ணியவுணர்வினானுகருந்தேறலே

 

819      சங்கரிதனையிணைசாற்றிற்பாதிமெய்

மங்கலவாணிநின்மருகியாகுநே

ரங்கனையவர்க்குனையறைதுமென்னில்யா

மிங்குனக்கிணையெவரியம்பலாவதே

 

820      மணிதிகழவிரொளிவடங்கொண்மென்முலைப்

பணிமொழிப்படவரவல்குற்பாவையா

ரணிதருமணிக்குநல்லழகுசெய்யுநின்

றுணைமலர்ப்பதந்தனைத்தொழுதல்செய்தனம்

 

821      ஓர்மொழியுரைப்பதொன்றுடையமெய்த்தவ

நேர்தருமந்தணர்நீள்கடைத்தலை

சேர்தருமண்டபஞ்செறிந்துவைகுநர்

நீர்முகில்வணற்குநீநிகழ்த்துமென்றனர்

 

822      என்னலுமலர்திருவெழுந்துமுன்றில்சென்

றன்னவர்தமைத்திருவழகிலாமையான்

முன்னவமதிப்பினான்முத்தங்கான்றிரு

நன்னிலவெறித்திடநகைத்திட்டாளரோ

 

823      பெண்டகைமதிகொடுபெருகுமோகையா

லொண்டொடிநகைத்தல்கேட்டுறுவர்யாவரும்

விண்டுவைமதித்திடார்வெகுண்டுசெல்லவை

குண்டநீத்தருநெறிகுறிக்கொண்டாரரோ

 

824      அச்சுதன்றுயிலுணர்ந்தவற்றைநாடியே

மெய்ச்சரோருகத்திருமின்னைநோக்குறாச்

சிச்சியந்தணர்க்கவமதிசெய்கிற்றிநின்

னிச்சையினேகெனாவெடுத்தியம்புவான்

 

825      துன்றுமீதெழுந்தலைசுருட்டுமாழிசூழ்

வென்றிசேருலகினில்வேதபாரகர்க்

கென்றுநல்லன்பனென்றியம்புநம்பெய

ருன்றனாலின்றமூதொழிந்ததாலரோ

 

826      கோதிலாவருங்குலத்துதித்தகொள்கையாற்

காதல்கூர்கருமநற்கணவற்காற்றினும்

வேதியர்க்கவமதிவிளைக்கினாங்கவள்

கேதமிலக்குலக்கேடியாகுமால்

 

827      என்றவன்சபித்தலுமிரங்கியிந்திரை

தென்றிருப்பூவணந்தன்னிற்சென்றலர்க்

கொன்றையஞ்சடைமுடிக்குழகனைப்பணிந்

தொன்றியமாதவமுழந்துவைகினாள்

 

828      மாயவனஞ்சிப்பின்மஞ்சநீங்கிநற்

சேயதாமரைப்பதஞ்சென்னிசூட்டியா

னேயெனுமுன்னரிங்கிருத்துவேனெனாத்

தூயவேதியர்கடஞ்சூழலேகினான்

 

829      வார்கொள்பூண்முலைத்திருமயிலைநீக்கியே

கார்கொள்வண்ணத்தினான்வரவுகண்ணுறீஇப்

பேர்விலந்தணர்பதம்பெயர்த்திடாமலே

சீர்கொள்வைகுண்டமத்தியினினின்றனர்

 

830      நின்றவந்தணர்தமைநேமிவானவன்

மன்றல்சேர்மலர்ப்பதம்வணங்கிவல்லையி

னொன்றியவன்புடனொடுங்கியேயெதிர்

நின்றுநன்மொழியினைநிகழ்த்தலுற்றனன்

 

831      பன்னருமாதவம்பயிலுமந்தணீர்

மன்னியதனாதுபெண்மதியினாலடைந்

தன்னவணகைத்தனளடியனேன்பொருட்

டின்னதோர்பிழைபொறுத்திரங்கல்வேண்டுமால்

 

832      அந்தணரரியபாதாரவிந்தமேல்

வந்தவன்சிரமுறீஇவண்டர்மொய்த்திடு

சுந்தரக்கழற்றுகள்சுகந்தகுங்கும

சந்திரதிலகமேதானதாகுமால்

 

833      ஆங்கவரறைந்தசொல்லனைத்துமின்பமாத்

தாங்கருமன்புசேர்தந்தைதாயுரை

யோங்குநல்லந்தணருரைத்தவாசக

மீங்கிவையிருத்துகேனெனதுசென்னிமேல்

 

834      வேதமெய்நெறிவழாதுமேதகுநன்னீராடிப்

பூதிசாதனமணிந்துபொருவருமந்திரத்தா

னாதனையருச்சித்தேத்திநாடொறுமெரிவளர்க்கு

மாதவர்சீறினந்தம்வைகுண்டமில்லைமாதோ

 

835      சதுர்மறைவேள்வியாளர்தமைச்சரண்புகுவதன்றி

நொதுமலர்தம்மைவேண்டேனுவலருநும்மைநோக்கிக்

கதுமெனநகைத்தலால்யான்கட்டுரைசெய்தசாபம்

பதுமபீடிகைமான்பெற்றுப்படர்புவியிடம்படர்ந்தாள்

 

836      ஆதலாலறவிர்காளோவருஞ்சினமகன்றுநீவி

ரேதமில்வைகுண்டத்தினினிதமர்ந்திருத்திர்மன்ற

போதுகேன்பொருந்துதிக்கினென்றருட்புனிதமூர்த்தி

யோதிடவுறுவரானோருவப்புடனுரைப்பதானார்

 

837      கொண்டல்வண்ணத்தயாமேகூர்ந்தனங்கருணைநின்னாற்

புண்டரிகப்பூங்கோயிற்பொருந்துகற்பரசியாமப்

பெண்கொடிதனைநீவிட்டுப்பெயர்ந்திடிற்பிரிதலாற்றா

யொண்டொடிதனாதுசாபமொழிவதுமொழிகுவாமால்

 

838      புண்ணியப்பொருளாய்மேலாய்ப்புனிதமாய்ப்பூர்வமாகி

வண்ணமாம்பாரிசாதமரத்திருநீழறன்னிற்

கண்ணகன்ஞாலம்போற்றுங்கனலிமுன்னருச்சித்தேத்த

வுண்மகிழ்வரங்கணல்குமொருசிவலிங்கமுண்டால்

 

839      அன்னதொல்பூவணத்தினலர்ந்தசெம்மலர்ப்பூங்கோதை

பன்னிருவருடமந்தப்பண்டைநன்மணிகுண்டத்திற்

றன்னிகர்தவஞ்சாரப்பின்சார்ந்தரன்பூசையாற்றி

மன்னியதிருவினோடுவைகுண்டமருவிவாழ்வாய்

 

840      செம்மையொன்றின்றியாஞ்செய்தீமையைப்பொறுத்தியாவர்

மம்மர்மாந்தரினரன்றாள்வணங்கில்யாம்வணங்கற்பாலா

ரம்மநீயரனன்பர்க்குளதிகமாமாதலாலே

யெம்மனோர்தமக்குமேலாமென்பதற்கையமின்றால்

 

841      ஆதலாலோதுவங்கேளலர்ந்தசெந்தாமரைக்கண்

மாதவமாயாகாயாமலர்வண்ணாநினதுமெய்யு

மோதிடுமெமதுமெய்யுமோர்ந்திடினொன்றேயாகு

நீதியினெம்மைக்காத்தியென்றனர்நெறியினின்றோர்

 

842      இங்குநீரடைந்தபான்மையென்னெனவினவலோடும்

வெங்கனல்வேள்விசெய்வான்விழைந்துனைவேண்டப்போந்தா

மங்கதுகாத்திநீயென்றந்தணராசிகூறப்

பங்கயச்செழுங்கண்ணானும்பரிந்தவர்வேள்விகாத்தான்

 

843      காத்தவர்விடைபெற்றன்னோன்ககனகூடத்தின்காறும்

வாய்த்தவைகுண்டம்வைகிவருடமீராறுமாளப்

பூத்திகழ்திருவினாசைபுந்தியிற்பொறானாய்ப்பூமா

தேத்திடும்பூவணத்தினின்பத்தினிழிந்துமன்னோ

 

844      மாவணங்குற்றசாபமாண்டிடவேண்டியந்தப்

பூவணங்கோயில்கொண்டபொருவிடைப்பாகன்றன்னைக்

கோவணவுடையினானைக்கோதிலாக்குழகன்றன்னைக்

தீவணச்சடையினானைச்சிவலிங்கந்தனிற்பூசித்தான்

 

845      பூசனைப்பலத்தினாலேபூமகள்சாபநீங்க

வாசையினவட்கண்டங்கேயருமணமுடித்துமீண்டு

மீசனைவழிபட்டேத்தியிந்திரையோடும்பின்ன

ரோசைகொள்வைகுண்டத்தினுலகெலாம்போற்றவுற்றான்

 

846      அந்தணர்தம்மைப்பூமாதவமதிசெய்ததோட

மந்தநற்பூவணத்தினன்றியேயகலாதென்றா

லந்தநற்சிவலிங்கந்தானருண்மேனிதரித்துவந்த

வந்தநற்றலத்தின்மேலாமருந்தலமொன்றுமின்றாம்

 

வேறு

847      தேவர்வந்துசேவிக்கநிருதிதிக்

கியாவர்கட்குநன்கினிதுநல்குவான்

கூவிளிக்கிசைகொண்டவெல்லையின்

மேவுபாதியின்வேணவாவினால்

 

848      அன்றுதொட்டுநன்காதிகேசவன்

மன்றவித்தலமான்மியத்தினாற்

கொன்றையஞ்சடைக்குழகனைப்பணிந்

தென்றுமெதிர்முகந்தரவிருந்தரோ

 

849      பூர்வலிங்கநேர்போற்றுபச்சிமத்

தேர்கொளம்பிரண்டேகுமெல்லைவாய்ச்

சார்பெரும்புகழ்த்தன்றனாமத்தா

லோரிலிங்முண்டாக்கினானரோ

 

850      தந்தலிங்கத்தின்சந்நிதிக்கணே

சிந்தைகொண்டிடுதீர்த்தங்கண்டன

னந்தநான்முகத்தயனையன்றுதன்

னுந்திபூத்தருளும்பர்தம்பிரான்

 

851      ஓங்குநல்லுலகுண்டவெம்பிரான்

பாங்கினால்வழிபாடுசெய்பரன்

பூங்கழற்பதங்கண்டுபோற்றினோர்

தாங்குபாவவெஞ்சட்டைநீங்குவார்

 

852      உரைகொண்மாயனுக்குத்தரத்திசை

யரைகொளம்பிடுதூரத்தாழ்கிணற்

றுருவமாகியேயோங்கிடும்புகழ்

விரவுமந்தநல்விண்டுதீர்த்தத்தில்

 

853      மண்டுகாதலின்வந்துமூழ்கியே

விண்டுலிங்கத்தைக்கண்டுமேவினோர்

பண்டுசெய்கொடும்பாவநீங்கியே

யெண்டருஞ்சிவலோகத்தேறுவார்

 

854      இடபத்திங்களிலிந்துமேவுநாட்

டொடருமன்புடன்சொல்லிலிங்கத்தி

னடியிறைஞ்சினோராற்றிடும்பவ

நொடியினீங்கிடுநுணங்குகேள்வியாய்

 

855      செப்புகின்றவத்திங்களிற்றின

மொப்பிலாதபனுதிக்குமுன்னரே

யப்புனற்படிவோரரும்பல

னிப்பரிசெனவியம்பவொண்ணுமோ

 

856      மின்னுமாமணிவிமானமேவியே

துன்னரம்பையர்சூழ்ந்துபோற்றவே

தென்னுறுந்திசைசேர்தராமலே

மன்னுபேரின்பமருவிவாழ்வரே

 

857      கழறுமப்ரமகைவருத்தத்தி

னெழுபதின்கடையிட்டவெட்டதா

மழிவிலத்தியாயம்மதாமரோ

வழுவின்மாதவமதித்துக்காண்டியால்

 

வேறு

858      பங்கயத்திருமங்கைசாபந்தவிர்த்திடுகாதைதான்

றங்குநற்சொல்பகர்ந்துளோர்தஞ்செவிக்கொடுநாடுவோர்

துங்கமிக்கபலன்கள்சீர்துன்றுளத்தருள்கூரவே

மங்கலத்தினினந்திநேர்வந்துரைக்கினுமரிதரோ

இலக்குமிசாபமோசனச்சருக்கமுற்றியது

ஆகச்செய்யுள் 857

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *