திருப்பூவணப் புராணம் – பகுதி – (23)

கி.காளைராசன்

6.3. சுந்தரர் பாடியது

பண் – இந்தளம்

திருச்சிற்றம்பலம்

திருவுடை யார்திரு மால  ய னாலு

முருவுடை யாருமை யாளையொர் பாகம்

பரிவுடை யா ரடை வார்வினை தீர்க்கும்

புரிவுடை யாருறை பூவண மீதோ.             (1)

எண்ணி யிருந்து கிடந்து நடந்து

மண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்

பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்

புண்ணிய  னாருறை  பூவண  மீதோ.                    (2)

 

​தெள்ளிய பேய்பல பூதம வற்றோடு

நள்ளிரு  ணட்டம தாட  ந வின்றோர்

புள்ளுவ ராகு  மவர்க்கவர் தாமும்

புள்ளுவ னாருறை பூவண  மீதோ.                         (3)

 

நிலனுடை மான்மறி கையது தெய்வக்

கனலுடை மாமழு வேந்தியோர் கையி

லனலுடை யா  ரழ கார்தரு சென்னிப்

புனலுடை யாருறை பூவண மீதோ.                       (4)

 

நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்

கடைகடை தோறிடு மின்பலி  யென்பார்

துடியிடை நன்மட வாளொடு மார்பிற்

பொடியணி வாருறை பூவண மீதோ.                     (5)

 

மின்னனை யாடிரு மேனிவி ளங்கவொர்

தன்னமர் பாகம தாகிய சங்கரன்

முன்னினை யார்புர மூன்றெரி  யூட்டிய

பொன்னனை யானுறை பூவண மீதோ                 (6)

 

மிக்கிறை யேயவ றுன்மதியால் விட

நக்கிறை யேவிர லாலிற  வூன்றி

நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்

புக்குறை வானுறை பூவண  மீதோ                        (7)

 

(பாடல் 8-9 கிடைக்கப்பெறவில்லை)

 

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவண

மாரவி ருப்பிட மாவுறை வானை

யூர  னுரைத்த சொன்மாலைகள் பத்திவை

பாரி  லுறைப்பவர் பாவ மறுப்பரே                        (10)

 

திருச்சிற்றம்பலம்

*****

 

 

 

 

6.4. திருவாசகத்தில் திருப்பூவணம்

திருப்பூவணத்திற்கு வடக்கே சுமார் 18 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாதவூர்.   இவ்வூரில் பிறந்தவர் மாணிக்கவாசகர்.  அதனால் அவருக்குத் திருவாதவூரர் என்னும் பெயர் அமைந்தது.  அவருடைய கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் ஆகிய சிறப்புக்களைப் பற்றிக் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அவரைத் தனது தலைமை மந்திரியாக நியமனம் செய்தான்.  அவரது ஆட்சித் திறமையைக் கண்டு “தென்னவன் பிரமராயன்” என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கினான்.

மாணிக்கவாசகர் பொருட்டு இறைவன் நேரில் எழுந்தருளி நரிகளைப் பரிகளாக்கியும், பின்னர் பரிகளை நரிகளாக்கியும் திருவிளையாடற் புரிந்தருளினான்.

 

(1) மாணிக்கவாசகப் பெருமான் கீர்த்தித் திருவகவலில்

 

“இந்திர ஞாலம் காட்டிய இயல்பினாய் போற்றி

உத்தரகோச மங்கை வித்தக வேடா போற்றி

பூவண மதனிற் தூவண மேனி காட்டிய தொன்மையோய்  போற்றி

வாதவூரில் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பா போற்றி

திருவார் பெருந்துறை செல்வா போற்றி்

என்று திருப்பூவணநாதரின் தொன்மைகளையும் அருளும் தன்மையையும் பாடியுள்ளார்.

 

(2) “அரனே போற்றி,            அந்தணர்தம் சிந்தையானே போற்றி் – என்று ஆரம்பிக்கும் திருமுறைத்திரட்டில்,

“…    …

வெண்காட்டில் உறைவா போற்றி

விடைகாட்டும் கொடியா போற்றி

சக்கரம்  மாலுக்கு ஈந்தாய் போற்றி

சலந்தரனைப் பிளந்தாய் போற்றி

பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவாய் போற்றி

…   …”

“தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி

திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி

 

“மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி

மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி

பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி்

 

“விண்ணுலகம் ஈந்தவிறல் போற்றி

மண்ணின்மேல் காளத்தி போற்றி கயிலைமலை போற்றி

சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்

ஆழி கொடுத்த பேரருள் போற்றி்

 

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி

தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலம்

கொடுத்த  திருவுளம் போற்றி்

 

“சிறுவனுக்கு அழியா வாழ்நாள் அளித்து அருள் செய்தி போற்றி

சலந்தரன் உடல் கீண்ட சக்கரப் படையாய் போற்றி

வலம்தரு அதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி

அலர்ந்த செங்கமலப் புத்தேள் நடுச் சிரம் அரிந்தாய் போற்றி்

 

என்று திருப்பூவணநாதர் பெருமாளுக்குச் சக்கராயுதம் வழங்கிய செய்தியைப் பாடியுள்ளார்.  இச்செய்தி, திருப்பூவணப் புராணத்திலே, சிதம்பர உபதேச சருக்கத்திலே விரிவாக எடுத்துக் கூறப் பெற்றுள்ளது.

 

(3) போற்றித் திருவகவலில்,

“…    …   …

திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி!

பொருப்பமர் பூவணத்தரனே போற்றி!

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி!

…    …   … ” என்று திருப்பூவணநாதரைப் போற்றி வணங்கியுள்ளார்.

 

*****

 

6.5. கருவூர்த் தேவர் பாடியது

 

ஒன்பதாம் திருமுறை

பண் – பஞ்சமம்

 

திருச்சிற்றம்பலம்

 

திருவருள் புரிந்தா  ளாண்டு கொண் டிங்ஙன்

சிறியனுக் கினயது காட்டிப்

பெரிதருள் புரிந்தா னந்தமே தருநின்

பெருமையிற் பெரியதொன் றுளதே

மருதர சிருங்கோங் ககின்மரஞ் சாடி

வரைவளங் கவர்ந்திழி வைகைப்

பொருதிரை மருங்கோங் காவண வீதிப்

பூவணங் கோயில்கொண் டாயே.  (பாடல் – 144)

 

பாம்பணைத் துயின்றோ னயன்முதற் றேவர்

பன்னெடுங் காலநிற் காண்பா

னேம்பலித் திருக்க வென்னுளம் புகுந்த

வெளிமையை யென்றுநான் மறக்கேன்

தேம்புனற் பொய்கை வானளவாய் மடுப்பத்

​தெளிதரு தேறல்பாய்ந் தொழுகும்

பூம்பணைச் சோலை யாவண வீதிப்

பூவணங் கோயில்கொண் டாயே.  (பாடல் – 145)

 

கரைகட லொலியிற் றமருகத் தரையிற்

கையினிற் கட்டிய கயிற்றா

லிருதலை யொருநா வியங்கவந் தொருநா

ளிருந்திடா  யெங்கள்கண் முகப்பே

விரிதிகழ் விழவின் பின்செல்வோர் பாடல்

வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த

புரிசடை துகுக்கு  மாவணவீதிப்

பூவணங் கோயில்கொண் டாயே.  (பாடல் – 146)

 

கண்ணியன் மணியின் குழல்புக் கங்கே

கலந்துபுக் கொடுங்கினேற் கங்ங

னுண்ணியை யெனினு  நம்ப நின்பெருமை

நுண்ணிமை யிறந்தமை யறிவன்

மண்ணியன் மரபிற் றங்கிருண் மொழுப்பின்

வண்டினம் பாடநின் றாடும்

புண்ணிய மகளி  ராவண வீதிப்

பூவணங்  கோயில் கொண் டாயே.            (பாடல் – 147)

 

கடுவினைப் பாசக் கடல்கடந்  தைவர்

கள்ளரை ​மெள்ளவே துரந்து

னடியிணை யிரண்டு மடையுமா றடைந்தே

னருள்செய்வா  யருள்செயா தொழிவாய்

நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க

நிலைவிளக் கலகில்சா லேகம்

புடைகிடந் திலங்கு  மாவண வீதிப்

பூவணங் கோயில்கொண் டாயே.  (பாடல்  – 148)

 

செம்மனக் கிழவோ  ரன்பு தாஎன்றுன்

சேவடி பார்த்திருந் தலச

வெம்மனங் குடிகொண் டிருப்பதற் கியானா

ரென்னுடை  யடிமைதானி யாதே

யம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள

வரிவைய  ரவிழ்குழற் சுரும்பு

பொம்மென முரலு மாவண வீதிப்

பூவணங் கோயில் கொண் டாயே. (பாடல் – 149)

 

சொன்னவின் முறைநான் காரண மு ணராச்

சூழல்புக் கொளித்தநீ யின்று

கன்னவின் மனத்தென் கண்வலைப் படுமிக்

கருணையிற் பெரியதொன் றுளதே

மின்னவில் கனக மாளிகை வாய்தல்

விளங்கிளம் பிறைதவழ் மாடம்

பொன்னவில் புரிசை யாவண வீதிப்

பூவணங் கோயில்கொண் டாயே.  (பாடல் – 150)

 

பூவணங் கோயில் கொண்டெனை  யாண்ட

புனிதனை வனிதை பாகனை வெண்

கோவணங் கொண்டு வெண்டலை யேந்தும்

குழகனை யழகெலா  நிறைந்த

தீவணன் றன்னைச் செழுமறை தெரியு

திகழ்கரு வூரனே  னுரைத்த

பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்

பரமன துருவமா குவரே.                              (பாடல்  – 151)

திருச்சிற்றம்பலம்

 

 

 

திருப்பூவணம் முருகன் மீது

6.6. அருணகிரி நாதர்  பாடிய திருப்புகழ்

 

திருப்புகழ் பாடல் எண். 550

தனத்தான       தத்தத்             தனதானா

தனத்தான       தத்தத்             தனதானா

 

அறப்பாவை  அத்தற்            கருள்பாலா

அளித்தாது      வெட்சித்         திருமார்பா

குறப்பாவை    அற்பிற்           புணர்வோனே

குலத்தேவ       வர்க்கப்          பரிபாலா

மறப்பாத         கத்துற்            றுழல்வேனோ

மலர்த்தாள்வ ழுத்தக்             க்ருபையீவாய்

சிறப்பான       முத்திக்           கொருவாழ்வே

திருப்பூவ         ணத்திற்          பெருமாளே

 

 

திருப்புகழ் பாடல் எண். 551

தானனதான  தானனதான              தானனதான             தனதான

 

வானவராதி   யோர்சிறைமேவ        மாவலியேசெய்         திடுசூரன்

மார்பிருகூற  தாய்விடவாரி            வாய்விடவேலை      விடுதீரா

கானவர்பாவை          காதலனான  காசணிபார               தனமார்பா

காலனைமோது          காலகபால     காளகளேசர்              தருபாலா

தேனமர்நீப     மாலைவிடாத           சேவகஞான             முதல்வோனே

தீயகுணாதி    பாவிநினாது              சேவடிகாண             அருள்வாயே

போனகசாலை           யாதுலர்வாழ  வீதிகடோறும்          நனிமேவு

பூவணமான    மாநகர்வாழு              நாதகுகேச                பெருமாளே

 

(காளகளேசர் = விசத்தைக் கண்டத்திலுடையவர்

போனகம் = அன்னம்)

 

திருப்புகழ் பாடல் எண். 552

தந்தத்தத்         தானன           தானன

தந்தத்தத்         தானன           தானன

தந்தத்தத்         தானன           தானன           தனதானா

 

பந்தப்பொற்  பாரப              யோதர

முந்தச்சிற்        றாடைசெய்  மேகலை

பண்புற்றுத்     தாளொடு       வீசிய              துகிலோடே

 

பண்டைச்சிற்  சேறியில்        வீதியில்

கண்டிச்சித்      தாரொடு        மேவிடு

பங்குக்கைக்    காசுகொள்     வேசையர்      பனிநீர்தோய்

 

கொந்துச்சிப்  பூவணி           தோகையர்

கந்தக்கைத்     தாமரை          யாலடி

கும்பிட்டுப்      பாடிசை          வீணையர்     அநுராகங்

 

கொண்டுற்றுப்  பாயலின்     மூழ்கிய

சண்டிச்சிச்       சீயென           வாழ்துயர்

குன்றப்பொற்  பாதக்ரு         பாநிதி           அருள்வாயே

 

அந்தத்துக்       காதியு            மாகியு

மந்திக்குட்       டானவ           னானவ

னண்டத்தப்    பாலுற            மாமணி         ஒளிவீசும்

 

அங்கத்தைப் பாவைசெய்    தேயுயர்

சங்கத்திற்        றேர்தமி         ழோதிட

அண்டிக்கிட்  டார்கழு         வேறினர்        ஒருகோடி

 

சந்தத்திக்         காளுநி          சாசரர்

வெந்துட்கத்    தூளிப            டாமெழ

சண்டைச்சொற் றார்பட      வேவயில்       விடுவோனே

 

தங்கச்சக்         ராயுதர்           வானவர்

வந்திக்கப்       பேரரு            ளேதிகழ்

தம்பப்பொற்  பூவண           மேவிய           பெருமாளே

 

*****

 

 

பரஞ்சோதி முனிவர் அருளிய

திருவிளையாடற் புராணம்

 

36. இரசவாதஞ் செய்த படலம்

(கலி நிலைத்துறை)

திருப்பூவணத் தலத்தின் பெருமை

 

1856    வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்

விரத னாகிநீ   ரருத்திய வினையுரை செய்தும்

பரத நூலிய   னாடகப் பாவையா ளொருத்திக்

கிரத வாதஞ்செய் தருளிய  வாடலை யிசைப்பாம்.

 

1857    பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின்

இரங்கு தெண்டிரைக் கரங்களா  லீர்ம்புனல் வையை

மருங்கின   னந்தன மலர்ந்தபன் மலர்கடூய்ப் பணியப்

புரங்க டந்தவ  னிருப்பது பூவண நகரம்

 

1858    எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி

விண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக்

கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை

பண்ணி வேண்டிய நல்வர   மடைந்ததப் பதியில்

 

பொன்னனையாளின்  தன்மை

1859    கிளியு  ளார்பொழிற்  பூவணக் கிழவர்தங்  கோயில்

றளியு  ளார்தவப்  பேறனா   டாதுகு  பூந்தார்

அளியு  ளார்குழ  லணங்கனா   ளந்தரத்  தவர்க்குங்

களியு  ளார்தர  மயக்குறூஉங்  கடலமு  தனையாள்

 

1860    நரம்பி  னேழிசை  யாழிசைப்  பாடலு  நடநூல்

நிரம்பு    மாடலும்  பெண்ணல  நீர்மையும்  பிறவும்

அரம்பை மாதரை   யொத்தன  ளறனெறி   யொழுகும்

வரம்பி  னாலவர்  தமக்குமே  லாயினாண்   மன்னோ

 

1861    ஆய  மாதர்பேர்  பொன்னனை  யாளென்ப  வவடன்

நேய  வாயமோ  டிரவிரு  ணீங்குமு   னெழுந்து

தூய நீர்குடைந்  துயிர்புரை  சுடர்மதிக்  கண்ணி

நாய  னாரடி  யருச்சனை  நியமமு  நடாத்தி

 

1862    திருத்தர்  பூவண  வாணவரைச்  சேவித்துச்  சுத்த

நிருத்த  மாடிவந்  தடியரைப்  பொருளென  நினையுங்

கருத்த  ளாயருச்  சித்தவர்  களிப்பவின்   சுவையூண்

அருத்தி  யெஞ்சிய  தருந்துவா   ளமூதவ   ணியமம்

 

1863    மாத  ரிந்நெறி  வழங்குநாண்  மற்றவ   ளன்பைப்

பூத  லத்திடைத்  தெருட்டுவான்  பொன்மலை  வல்லி

காத  னாயகன்  றிருவுருக்  காணிய  வுள்ளத்

தாத  ரங்கொடுத்  தருளினார்   பூவணத்   தையர்

 

1864    ஐயர்  தந்தபே  ரன்புரு  வாயினாண்  மழுமான்

கையர்  தந்திரு  வுருவினைக்  கருவினாற்  கண்டு

மைய  கண்ணினாள்  வைகலும்  வருபொரு  ளெல்லாம்

பொய்யி  லன்புகொண்  டன்பர்தம்  பூசையி   னேர்வாள்

 

1865    அடியர்  பூசனைக்  கன்றியெஞ்  சாமையா  லடிகள்

வடிவு  காண்பதெப்   படியென்று  மடியிலச்  செழியற்

கொடிவில்  பொற்கிழி  நல்கிய  வள்ளலை  யுன்னிப்

பிடிய  னாளிருந்  தாளமூ  தறிந்தனன்  பெருமான்

 

சிவபெருமான்  சித்தர் வடிவம் கொண்டு வருதல்

1866    துய்ய  நீறணி  மெய்யினர்  கட்டங்கந்  தொட்ட

கையர்  யோகபட்  டத்திடைக்  கட்டினர்  பூதிப்

பையர்  கோவண  மிசையசை  யுடையினர்  பவளச்

செய்ய   வேணிய   ரங்கொரு  சித்தராய்  வருவார்

 

1867    வந்து  பொன்னனை  யாண்மணி  மாளிகை  குறுகி

அந்த  மின்றிவந்  தமுதுசெய்  வாரொடு  மணுகிச்

சிந்தை  வேறுகொண்  டடைந்தவர்  திருவமு  தருந்தா

துந்து  மாளிகைப்  புறங்கடை  யொருசிறை  யிருந்தார்

 

1868    அமுது  செய்தருந்  தவரெல்லா  மகலவே  றிருந்த

அமுத   வாரியை  யடிபணிந்  தடிச்சிய  ரைய

அமுது  செய்வதற்  குள்ளெழுந்  தருள்கென  வுங்கள்

அமுத  னாளையிங்  கழைமினென்  றருளலு  மனையார்

 

1869    முத்த  ராமுகிழ்  வாணகை  யல்குலாய்  முக்கண்

அத்த  ரானவர்  தமரெலா  மமுசெய்  தகன்றார்

சித்த  ராயொரு  தம்பிரான்  சிறுநகை  யினராய்

இத்த  ராதலத்  தரியரா  யிருக்கின்றா  ரென்றார்

 

சித்தமூர்த்தி  பொன்னனையாளை  மெலிந்த  காரணம்  யாதெனல்

1870    நவம  ணிக்கலன்  பூத்தபூங்  கொம்பரி  னடந்து

துவரி  தழ்க்கனி   வாயினாள்  சுவாகதங் கிலாவன்

றுவமை  யற்றவர்க்  கருக்கிய   மாசன    முதவிப்

பவம  கற்றிய  வடிமலர்  முடியுறப்  பணிந்தாள்

 

1871    எத்த  வஞ்செய்தே  னிங்கெழுந்  தருளுதற்  கென்னாச்

சித்தர்   மேனியும்  படிவெழிற்  செல்வமு   நோக்கி

முத்த  வாணகை  யரும்பநின்  றஞ்சலி  முகிழ்ப்ப

அத்தர்  நோக்கினா  ரருட்கணா  லருள்வலைப்  பட்டாள்

 

1872    ஐய  உள்ளெழுந்  தருளுக  வடிகணீர்   ரடியேன்

உய்ய  வேண்டிய  பணிதிரு  வுளத்தினுக்  கிசையச்

செய்ய  வல்லனென்  றஞ்சலி  செய்யவுண்  ணகையா

மைய  னோக்கியை  நோக்கிமீ  னோக்கிதன்  மணாளன்

 

1873    வடியை  நேர்விழி  யாய்பெரு  வனப்பினை  சிறிதுன்

கொடியை  நேரிடை  யெனவிளைத்   தனையெனக்  கொன்றை

முடியி  னானடி  யாரமென்   முகிழ்முலைக்  கொடிதாழ்ந்

தடிய   னேற்குவே  றாயொரு   மெலிவிலை   யையா

 

1874    எங்க  ணாயகர்  திருவுருக்  காண்பதற்   கிதயந்

தங்கு   மாசையாற்  கருவுருச்  சமைத்தனன்   முடிப்பேற்கு

கிங்கு  நாடொறு  மென்கையில்   வரும்பொரு   ளெல்லாம்

உங்கள்  பூசைக்கே   யல்லதை  யொழிந்தில  வென்றாள்

 

சித்த மூர்த்திகள்  சிவனடியார் பெருமை கூறல்

1875    அருந்து  நல்லமு  தனையவ  ளன்புதித்  திக்கத்

திருந்து  தேனென  விரங்குசொற்  செவிமடுத்  தையர்

முருந்து  மூரலாய்  செல்வமெய்  யிளமைநீர்  மொக்குள்

இருந்த  வெல்லையு  நிலையில   வென்பது  துணிந்தாய்

 

1876    அதிக  நல்லற  நிற்பதென்  றறிந்தனை  யறத்துள்

அதிக  மாஞ்சிவ  புண்ணியஞ்   சிவார்ச்சனை  யவற்றுள்

அதிக  மாஞ்சிவ  பூசையு   ளடியவர்  பூசை

அதிக  மென்றறிந்  தன்பரை  யருச்சனை  செய்வாய்

 

1877    உறுதி  யெய்தினை  யிருமையு   முன்பெயர்க்  கேற்ப

இறுதி  யில்லவன்  றிருவுரு  வீகையாற்  காணப்

பெறுதி  யாகநின்  மனைக்கிடைப்  பித்தளை  யீயம்

அறுதி  யானபல்  கலன்களுங்  கொணர்தியென்  றறைந்தார்

 

1878    ஈயஞ்  செம்பிரும்  பிரசிதங்   மென்பவும்  புணர்ப்பாற்

றோயம்  பித்தளை  வெண்கலந்  தராமுதற்  றொடக்கத்

தாயும்  பல்வகை  யுலோகமுங்  கல்லென  வலம்பத்

தேயுஞ்  சிற்றிடை  கொண்டுபோய்ச்  சித்தர்முன்  வைத்தாள்

 

சித்தமூர்த்திகள்  இரசவாதம்  புரிதல்

1879    வைத்த  வேறுவே  றுலோகமு  மழுவுழை  கரந்த

சித்த  சாமிக   ணீற்றினைச்  சிதறினர்  பாவித்

தித்தை  நீயிரா  வெரியிலிட்    டெடுக்கினன்  பொன்னாம்

அத்தை  நாயகன்  றிருவுருக்  கொள்கென  வறைந்தார்

 

1880    மங்கை  பாகரை  மடந்தையு   மிங்குநீர்  வதிந்து

கங்குல்  வாயமு  தருந்தியிக்   காரிய   முடித்துப்

பொங்கு   காரிருள்  புலருமுன்  போமெனப்  புகன்றாள்

அங்க  யற்கணா   டனைப்பிரி  யாரதற்  கிசையார்

 

1881    சிறந்த  மாடநீண்  மதுரையிற்  சித்தர்யா  மென்று

மறைந்து  போயினார்   மறைந்தபின்    சித்தராய்  வந்தார்

அறைந்த  வார்கழ  லலம்பிட  வெள்ளிமன்  றாடி

நிறைந்த  பேரொளி  யாயுறை  நிருத்தரென்று  அறிந்தாள்

 

பொன்னனையாள்  உலோகங்களைத் தீயிலிட்டுப் பொன்னாதல்

1882    மறைந்து  போயினா   ரெனச்சிறி  தயர்ச்சியு  மனத்தில்

நிறைந்த  தோர்பெருங்  கவற்சியை  நீக்கினா   ரென்னச்

சிறந்த   தோர்பெரு  மகிழ்ச்சியு   முடையளாய்ச்  சித்தர்

அறைந்த  வாறுதீப்  பெய்தன   ளுலோகங்க  ளனைத்தும்

 

1883    அழல  டைந்தபி   னிருண்மல  வலிதிரிந்  தரன்றாள்

நிழல  டைந்தவர்  காட்சிபோ  னீப்பருங்  களங்கங்

கழல  வாடக  மானதா  லதுகொண்டு  கனிந்த

மழலை  யீர்ஞ்சொலாள்  கண்டனள்  வடிவிலான்  வடிவம்

 

1884    மழவிடை  யுடையான்  மேனி  வனப்பினை  நோக்கி யச்சோ

அழகிய   பிரானோ  வென்னா  வள்ளிமுத்  தங்கொண் டன்பிற்

பழகிய  பிரானை  யானாப்  பரிவினாற்  பதிட்டை  செய்து

விழவுதேர்  நடாத்திச்  சின்னாள்  கழிந்தபின்  வீடு  பெற்றாள்

 

1885    நையநு[ண்  ணிடையி  னாளந்  நாயகன்  கபோலத் திட்ட

கையுகிர்க்  குறியுஞ்  சொன்ன  காரணக்  குறியுங்  கொண்டு

வெய்யவெங்  கதிர்கால்  செம்பொன்  மேனிவே  றாகி  நாலாம்

பொய்யுகத்  தவர்க்குத்  தக்க  பொருந்துரு  வாகி  மன்னும்

 

இரசவாதம்  செய்த படலம்  முற்றிற்று.

 

 

 

 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *