சி. ஜெயபாரதன், கனடா 

காலமே ஆன்மாவின்
கடிவாளம்,
காலத்தின் கை எழுதும்
ஞாலத்தின்
வரலாற்றுச் சுவடு.
பிரபஞ்சத்தின் ஆன்மா !
ஒரு போக்குப் பயணம்
காலத்துக்கு.
எதிர்போக்கோ,
இணைபோக்கோ இல்லை !
இருபுறத்து
பக்கப் பார்வை
கிடையாது.
நேர்போக்கு மட்டும் !
காலம் மீளாது, கடிகாரம்
நிற்காது !
முதற் சுழி உண்டு.
முற்றுப் புள்ளி இல்லை !
காலத்தின்
வேக மானி கதிரோன்.
மானிடப் பிறப்பு, வளர்ப்பு
இறப்புக்கு
ஆன்மீக
காலமே காரணி !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலம் ஓர் ஆன்மா!

 1. ஒரு சேர்க்கை

  காலம் மீளாது, கடிகாரம்
  நிற்காது !
  காலம் மாறும்
  பூமியின்
  சுற்றுப் பாதை,
  சுழற்சி
  மாறும் போது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *