நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (14)
தி.சுபாஷிணி
செங்கண் எழவே திங்கள் உறங்கியது
செங்கழுநீர்வாய் நெகிழ ஆம்பல்வாய் கூம்பியது
வான் வெளுக்குமுன் தான் எழுந்து
தண்பூக் கொய்து மலர்க்கணைத் தொடுத்து
காமனையும் சாமனையும் துதித்துப் போற்றிய
கண்ணனின் காதலியே! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி : http://www.srivilliputtur.com/images/a6.jpg