இசைப்பேன் கேளாய் கணபதி!

இராஜராஜேஸ்வரி

மனதிற் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல் 

நினைக்கும் பொழுது நின் மவுன 

நிலை வந்திட நீ செயல் வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறு வயது 

இவையும் தர நீ கடவாய்.

 

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்

கவர்ந்திட மாட்டாவோ? – அட,

மண்ணில் தெரியுது வானம், அது நம்

வசப்பட லாகாதோ? 

எனப் புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடிப் பிரார்த்திப்போம்.

புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை, நெஞ்சுரத்தை, தன்னம்பிக்கையை புத்தாண்டு வாழ்த்துகள் வழங்குகின்றன. புது ரத்தம் ஊற்றெடுக்கும் உற்சாக நாளைத் துவக்குகிறோம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுஅல கால வகையின்ஆனே.

இன்று நாம் புதிதாய் பிறந்தோம்,

இனியது பிறர்க்கே செய்ய!

நன்றிது என மனம் நினைக்கும், 

 பிறக்கும் இப்புத்தாண்டில்

புத்தொளி பரவி நிற்க

புது வசந்தம் வீசி வர

 

இன்னல்கள் பறந்தோட

இன்பத் தென்றல் எமை வருட

வல்லமைகள் கரம் சேர்ந்த

வாழ்வெங்கும் மகிழ்ச்சி பொங்க

வருக வருக புத்தாண்டே….

வாழ்க்கையில் வளங்கள் பொங்க

வசந்தக் காற்று வீசி உற்சாக ஊற்றாய்

வளங்கள் பல பெற்று வாழ  

உவப்புடன் உளம் மகிழ 

உளமார வாழ்த்துகின்றேன்

இறைவனை வேண்டி…..

இனிய இணைய நண்பர்களே…. 

வாழ்க வளமுடன்.. வளர்க நலமுடன்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.