பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம் உங்கள் ராசி அதிபனான செவ்வாய் 5- ல் . பணியில் இருப்பவர்கள், சஞ்சலங்களுக்கு இடம் தராமல் மனத்தை செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அனைத்தும் கச்சிதமாக முடியும். கேது 2-ல் இருப்பதால், மாணவர்கள் , சத்தான உணவு வகைகளை உண்டு வர, ஆரோக்கியம் சீராகத் திகழும். புதன் 9-ல். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதிலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்வதிலும் நிதானமும் பொறுமையும் தேவை. கலைஞர்கள் எதிலும் அளவாக இருந்தால், உறவுகள் இனிமையாகத் திகழும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால், வீண் சரிவுகளை தவிர்த்து விடலாம் . சுயதொழிலில் இருப்பவர்களைத் தேடி வரும் வரும் வாய்ப்புகளை பிறர் தட்டிப்பறிக்கும் சூழல் உருவாகலாம்.

இ(ந)ல்லறம்: நீங்கள் காட்டும் கவனத்திற்கேற்ப, பிள்ளைகளின் செயல்பாடு பளிச்சென்று மிளிரும் குடும்ப வட்டத்தில், பெண்களை சிலர் தவறாக புரிந்து கொள்ளும் நிலை இருப்பதால், தங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொல்வதை கடைபிடிப்பது நல்லது .

ரிஷபம்: 6-ல் சனி. அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக முடிவதால், வியாபாரிகளுக்கு நினைத்த லாபம் கையில் வந்து சேரும் குரு 12-ல். பணி புரிபவர்களுக்கு, பதவி உயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி என்பது சற்று இழுபறியாக இருக்கும். பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். செவ்வாய் 4-ல். மாணவர்கள் பேசும் பேச்சில், அலட்சியமாக இருந்தால், தேவையற்ற, மன வருத்தத்துக்கு ஆளாக நேரிடும். புதன் 8-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள், வம்பிழுப்பவர்களின் கொட்டத்தை அடக்கி வைப்பார்கள் . ராகு 1-லும், கேது 7-லும் இருப்பதால், கலைஞர்கள், சண்டை போட்டு காரியங் களை சாதிப் பதை விட, சமாதானமாய் நடந்து கொண்டால், எளிதில் காரியங்கள் நடை பெறும். சுய தொழில் புரிபவர்கள், கடன் தொல்லை கணிசமாகக் குறைத்தால், நிம்மதியாய் வலம் வர இயலும் .

இ(ந)ல்லறம் பெண்கள், சூழ்நிலைக்கேற்றவாறு, நடந்து கொள்வ தோடு சமயோசித மாகவும் செயல்பட்டால், உறவுகள் எப்போதும் உங்களுக்கு எப்போதும், எதிலும் கை கொடுக்கும். இந்த வாராம் பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை தக்க ஆலோச னையின் பேரில் எடுப்பது நல்லது.

மிதுனம்: இனிய பலன்களை தர வல்ல பட்டியலில், குருவும், 3-ல் உலாவரும் செவ்வாயும், உள்ளார்கள் சாதகமானவர்களின் உதவியால், வியாபாரிகளின் கடன் தொல்லைகளுக்கு ஓர் முற்றுப்புள்ளி கிடைக்கும்.இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவ ர்களுக்கு வாகன வசதி, விதவிதமான உணவு ஆகியவற்றை அனுபவித்து மகிழும் வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். கேது 12-ல். மாணவர்கள் ஏட்டிக்குப் போட்டி என்று செயல்படுபவரிடமிருந்து விலகி இருத்தல் நலம். புதன் 7-ல்.பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், எளிதில் எவரையும் நம்பி விடாமலிருந்தால், சிக்கல் தோன் றாமலிருக்கும். கணக்கு வழக்குகளை சரி பார்ப்பவர்களுக்கு, செய்யும் வேலைகளில் சில சமயம் சலிப்பு எட்டிப் பார்க்கும். பொருளாதார இறுக்கம் குறைய,கலைஞர்கள் சேமிப்பைப் பெருக்குவதில் முனைப்பாக இருப்பது புத்திசாலித்தனமாகும் .
இ(ந)ல்லறம் பெண்கள் பிள்ளைகளிடம் கோப தாபம் ஆகியவற்றை கொட்டினால், பல நேரங்களில் அதுவே பிரச்சினைக்குக் காரணமாகிவிடும். எனவே புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. வேலை தேடிக்கொண்டிருந்த பிள்ளைகள் தகுதிக்கேற்ற நல்ல பதவியில் அமர்வார்கள் .

கடகம்: சூரியன், புதன் 6 –ல். எப்படி முடியுமோ என்று மலைப்பாய்த் தோன்றியவை மள மளவென்று முடிந்து வியாபாரிகளின் மனதில் தனித் தெம்பு இருக்கும். பணியில் இருப்பவர்கள் கவனத் தடுமாற்றத்துக்கு இடமின்றி வேலைகளை விரைந்து முடிப் பார்கள். 11-ல் கேது. முடங்கிக் கிடந்த ஒப்பந்தம் யாவும் மீண்டும் விறுவிறுப்பாக நடை முறைக்கு வருவதால், சுய தொழில் புரிபவர்கள், ஊக்கமுடன் செயல்படுவர். செவ்வாய் 2-ல் . பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கௌரவத்தை கெடுக்க நினைப் பவர்களை அருகில் அண்ட விடாதீர்கள். 4-ல் சனி. மாணவர்கள் கேளிக்கைகளில் மனத் தை அலைபாய விடாமல், கட்டுப்பாடுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். 7-ல் உள்ள சுக்ரனால், கலைஞர்கள் வீண் வதந்திகளும், வேண்டாத வார் த்தைக் கணைகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் முதியவர்கள் உணவு பழக்க வழக்கங்களில் விஷப்பரீட்சை களை மேற்கொள்ள வேண்டாம். அத்துடன் இந்த வாரம் அலுவலகத்தில் சில நேரங் களில், அடுத்தவரின் வேலையையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்யும் நிலை நிலவும்.

சிம்மம்: 3-ல் சனி. கொடுக்கப்பட்டிருக்கும் பணியினை பாங்காக செய்து முடித்து விடு வதால், பணியில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் .9-ல் குரு. பொது வாழ் வில் உள்ளவர்கள் தங்கள் அறிவுக் கூர்மையால், முடியாது என்றிருந்த விஷயங்கள் முடிந்து, தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வார்கள். . 1-ல் செவ்வாய். பொறுப்பான பதவி வகிப்பவர்கள், சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டால், பண விரையம் ஏற்படாது. 4-ல் ராகு. வாடிக்கையாளர்களின் வரவு சீராக இருக்க, வியாபா ரிகள் அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பது புத்திசாலித் தனம். சூரியன் 5-ல். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பிரயாணக் களைப்பு உங்கள் பணிகளில் குறுக் கிடாமல் தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடரவும். வெளியிடம் செல்லும் கலைஞர்கள் சபலங்களுக்கு அடிமையாகாமலிருப்பது நல்லது.

இ(ந)ல்லறம்: .சுக்ரன் 6-ல். பெண்கள் படபடவென்று பேசுவதைக் குறைத்தால்தான், பிறரி ன் கருத்துக்களை ஊன்றி கவனிக்க இயலும். அத்துடன் கொடுக்கல் வாங்கலில் குளறு படிகள் நேராமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதிக பரபரப்பு, கடின வேலை
இரண்டையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கிய அச்சுறுத்தல் இராது .

கன்னி: 3-லிருக்கும் ராகு, மந்த கதியில் இருந்த வியாபாரத்தை முடுக்கிவிடுவதால் வியாபாரிகள் சுறுசுறுப்புடன் இயங்குவார்கள். 2-ல் சனி. உதவி செய்வதில் மாணவர்கள் கவனமாக இருக்கவும். இல்லையெனில், பிறர்க்கு உதவப்போய் அங்கும் இங்கும் அலைய நேரிடும். 12-ல் செவ்வாய். பொதுவாழ்வில் உள்ளவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள மறைமுக வழிகளை நாடவேண்டாம். கலைஞர்களுக்கு மனதுக்கு பிடித்த ஆடை வகைகளை அணியும் வாய்ப்பும், புதிய வாகனங்களில் பவனி வரும் யோகமும் உண்டாகும். 8-ல் குரு. வீடுமனை வாங்கி விற்பவர்கள் மனிதர்களின் தரமறிந்து செயல்படுவது புத்திசாலித்தனம் .9-ல் கேது. சிறிய உடல் உபாதைகள் உங்கள் பணியில் வேகத்தை குறைக்காமல் இருக்க, பணியில் இருப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது அவசியம்.

இ(ந)ல்லறம்:  பெண்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண்டிய பணப்புழக்கம் கையில் இருக்கும். அடிக்கடி வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உஷ்ணம் தொடர்பான உபாதைகள் அவ்வப்போது வந்து போகும். பண முதலீட்டில் அதிக அவசரம் வேண்டாம்.

துலாம்: 4-ல் சுக்ரன். கலைஞர்களுக்கு தொழிலிருந்த நெருக்கடி விலகி, மீண்டும் வாய்ப்புக்கள் வர ஆரம்பிக்கும். 7-ம் இட குரு, தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக் கைகள் உடனுக்குடன் நிறைவேறும் வாய்ப்புக்களை உருவாக்குவார். 11-ல் செவ்வாய். கலைஞர்களுக்கு மனதில் இருந்த கலக்கம் நீங்கி தைரியமாக முடிவெடுக்கும் ஆற்றல் கிடைக்கும். சனி 1-ல். ஒட்டி உறவாடியவர்கள், காரியம் முடிந்ததும் கண்டும் காணாத வாறு நழுவும் சூழல் நிலவும். எனவே பொது வாழ்வில் இருப்பவர்கள், பக்குவமாக நடந்து கொள்ளவும். ராகு 2-ல். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சில நேரங் களில் அதிக அலைச்சலும், சோர்வும் தலை காட்டும். 3-ல் சூரியன், புதன். புதிய மனிதர்களின் தொடர்பு சில தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிருப்பதால், பணியில் இருப்பவர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது. 8-ல் கேது.. வெளிவட்டாரத் தொடர்புகள் வியாபாரிகளின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராது.

இ(ந)ல்லறம்: பெண்கள் அதிக பரபரப்பு, அதிக ஓய்வு இரண்டும் உங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்ற இடம் கொடாதீர்கள். மேலும் கடன்பட்டு புதிய பொருட்களை வாங்காமலிருப்பது நலம். உறவினர்களின் சச்சரவால், இல்லத்தில் அமைதியின் சதவீதம் குறையும்.

விருச்சிகம்: 3-ல் சுக்ரன். கலைஞர்கள், சில சலுகைகளைப் பெற எடுக்கும் முயற்சி பலித மாகும். ராசியில் ராகு. . வியாபாரிகள் வழக்கு சம்பந்தமான விவகாரங்களால் தொய்வு இல்லாமல் செயல்படுவது அவசியம். 2-ல் சூரியன், புதன். முதியவர்களுக்கு, .உடல் நிலையில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். 6-ல் குரு. வியாபாரிகள் கண் மூடித்தனமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். 7-ல் கேது. பொது வாழ் வில் இருப்பவர்கள், சொத்துக்களில் முதலீடுகள் செய்யும் போது, வில்லங்கங்கள் இல் லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். 10-ல் செவ்வாய். பணியிடத்தில், கோபதா பங்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்தால், வேலைகள் தேங்காமல், இருக்கும். 12-ல் சனி. கலைஞர்கள், போட்டிகளை எதிர்கொள்ள தகுந்த வியூகங்களோடு செயல்பட்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம்.

இ(ந)ல்லறம்: வார பிற்பகுதியில் பெண்கள், அதிக பணவரவு பெற கிடைக்கிற வாய்ப்பு க்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் வது புத்திசாலித் தனம். உடன்பிறப்புக்க ளால் உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் இல்லத்தை அலங்கரிக்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் .

தனுசு: சனி 11-ல். வியாபாரிகள், புதிய ஒப்பந்தங்களை பெற எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். 5-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். 6-ல் கேது. மாணவர்களுக்கு உயர்கல்வியில் விரும் பிய பாடம் கிடைக்கப்பெறும். 10-ல் செவ்வாய். அலுவலக சூழல் அனுசர ணையாய் திகழ, பணியில் உள்ளவர்கள், பணியாளர்களிடம் பக்குவமாக நடப்பது நலம். 12-ல் ராகு. கலைஞர்களுக்கு, தங்கள் கோபமே பல சமயம் தங்களுக்கு வர வேண்டிய நன்மை க்குத் தடைபோடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 1.-ல் சூரியன், புதன். சுய தொழில் புரிபவர்கள், தங்கள் திறமையை பட்டை தீட்டிக் கொண்டாலும் தகுந்த நேரம் வரும் வரை காத்திருப்பது அவசியம். சிறு தொழில் புரிபவர்களுக்கு, கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இ(ந)ல்லறம்: பெண்கள், முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால், ஓரளவு மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு உதவிகரமாய் இருப்பது சந்தேகமே. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும்

மகரம்: 11-ல் ராகு. வழக்குகளில், பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். 4-ல் குரு. பணியில் இருப்பவர்கள், வீடு மராமத்து, பராமரிப்பு ஆகியவ ற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். 5-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள் தொழில் ரீதியான விஷயங்களில் அக்கறையோடு நடந்து கொண்டால், வருகி ன்ற லாபம் குறையாமலிருக்கும். செவ்வாய் 8-ல். புதிதாய் வேலைக்கு சேர்ந்துள் ளவர்களுக்கு எதிலும் திருப்தியற்ற நிலைமை நிலவும். 10-ல் சனி. கலைஞர்கள் வெறும் வார்த்தைகளை நம்பி பிறருக்கு பணம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 12-ல் சூரியன், புதன். மாணவர்கள், தேங்கிய வேலைகளை முடிக்க, பம்பரமாய் சுழல வேண்டி யிருக்கும். வியாபாரிகள் வங்கிக்கான கடன் தொகைகளை குறித்த கெடுவுக்குள் செலுத்திவிட்டால், அபராதம் கட்டாதவாறு தப்பித்துக்கொள்ளலாம்.

இ(ந)ல்லறம்: குடும்பத்தில், பெண்களின் பொறுமையை சோதிக்கும் விதமான நிகழ்ச் சிகள் நடைபெறலாம். எனவே பொறுமை காப்பது அவசியம். பிள்ளைகளின் மனதில், வேண்டாத எண்ணங்களை வளரவிடாமல், நல்ல பொழுது போக்குகளில் அவர்கள் கவனத்தை திசைத் திருப்புங்கள். அவர்கள் மனம் தெளிவடையும்.

கும்பம்: 11-ல் சூரியன், புதன். பணத்தேவையால் தாமதப்பட்டுக்கொண்டிருந்த அனைத்தும் துரித கதியில் நடைபெறுவதால், வியாபாரிகள் மகிழ்வுடன் இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாய் முடியும். 3-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள் வரவு செலவுகள் வரைமுறைக்குள் இருக்குமாறு பார்த் துக்கொண்டால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய நிலைமை இராது. 4-ல் கேது. .மாணவர்கள் ஞாபகமறதிக்கு இடம் தராமல், கருத்தூன்றி படித்துவந்தால், அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும் . 7-ல் செவ் வாய். பணியில் இருபவர்கள், புதிய ஒப்பந்தங்களை ஒத்துக்கொள்ளும் முன் , அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். கலைஞர்கள் டாம்பீக செலவுகளுக்கு தலையாட்டாமல் இருந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காது.

இ(ந)ல்லறம்: வேலையில் இருக்கும் பெண்கள், தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் செயல்பாட்டில் அடங்கியுள்ளது. கடன்பட்டு, அனா வசியமான பொருட்களை வாங்காமலிருப்பது நலம். புதிய வேலைக்காக காத்துக் கொண் டிருக்கும் பிள்ளைகளுக்கு, நல்ல தகவல்கள் வந்து சேரும்.

மீனம்: 2-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, தெய்வத் திருப்பணிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேரும். 3-ல் கேது. வியாபாரிகள், தொழில் வகையில் நிர் ணயித்த இலக்கை எட்டுவார்கள்.6-ல் செவ்வாய். உறவுகளாலும், உடன்பிறப் புக ளாலும் கிடைக்கும் உதவிகள் , பொது வாழ்வில் இருப்பவர்களை உயர்வை நோக்கி அழைத்து செல்லும். சூரியன், புதன் 10-ல். போட்டிகள் அதிகமான போதும், வியாபாரிகளுக்கு விற்ப னை குறையாது.. பொது வாழ்வில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் சமூகப்பணியில் நற்பெயர் பெறுவர். 11-ல்சுக்ரன். மாணவர்களுக்கு, சுற்றுலா, கேளிக்கை ஆகியவற்றில் கலந்து மகிழும் வாய்ப்புக்கள் கிட்டும். கலைஞர்கள், லாபத்தை அதிகரிக்க புதிய நடைமுறையை பின்பற்றுவார்கள். 10-ல் ராகு. சுய தொழில் புரிபவர்கள், வாகனப் பராமரிப்பிற்கென்று அதிக பணம் செலவழித்தாலும், முழு திருப்தி இராது.

இ(ந)ல்லறம் : பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். மேலும் இல்லத்தில் விலையுயர்ந்த மின் சாதனங்களை கையாளும்போது, உரிய விதிமுறைகளை அனுசரித்தால், வீண் பழுதுகள் ஏற்படாது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *