செண்பக ஜெகதீசன் 

 

காற்று இனியது-

வீசும் தென்றலாய்..

வாசம் கொணர்வதாய்..

வனப்பு சேர்ப்பதாய்..

காதல் வளர்ப்பதாய்..

கவிதை தருவதாய்…

காற்று கொடியது-

சூறையாடும் புயலாய்..

சுழன்று அடிப்பதாய்..

இயற்கை வனப்புடன்

செயற்கை அழகையும்

சேர்த்தே அழிப்பதாய்..

இருக்கும் உயிர்க்கெலாம்

எமனாய் வருவதாய்…

ஓ,

இதுதான் இறைவனின்

இன்னொரு முகமோ…!

 

தானே எல்லாம் என்பவனாலும்

தடுக்க முடியாததுதான்

‘தானே’…!

 

படத்திற்கு நன்றி: http://yarlosai.com/?p=21217

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.