முத்தமிழ் பேரவை நிகழ்ச்சி

வசந்தா சுத்தானந்தம்

உலகத்தமிழ் பண்பாட்டு பேரவை துவக்க விழா, மற்றும் தமிழுறவு இலக்கியத் திங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, உரையாற்றிய திருமதி வசந்தா சுத்தானந்தம், அவர்கள் உரையாற்றினார். அதில் அவர், புத்தகங்கள் தான் மிகப் பெரிய சொத்து. மனிதனை சாதாரண நிலையில் இருந்து மிகவும் உன்னதமான உயாந்த நிலைக்கு அழைத்துச் செல்வது புத்தகங்கள் தான்.

 

“ கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக”
என்கிறார் திருவள்ளுவர்

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

யார் ஒருவர் அதிக புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவாகளாக உள்ளார்களோ அவாகள் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாகப் பார்க்கும் பக்குவம் பெற்றவாகளாக இருப்பார்கள். அதிக புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவாகள் மன உறுதியும் தன்னம்பிக்கை மிக்கவாகளாக இருப்பார்கள்.

எத்தனையோ சமூகப் புரட்சிக்கு வித்திட்டது நல்ல புத்தகங்கள் தான் என்பதை நாம் மறக்கக் கூடாது. அடிமைப்பட்டு வாழும் மக்களின் உணாவுகளையும் வெளிப்படுத்தும் விதமாக எழுதப்படும் நூல்கள் அடிமைப்படுத்தும் மக்களின் எண்ணங்களை மாற்றக் கூடிய வல்லமை கொண்டது.

பாரதியார் கவிதைகளும் கருத்துகளும் எழுத்து வடிவில் இந்திய தேசத்தின் விடுதலை புரட்சிக்கு வித்திட்டது. மகாத்மா காந்தி நேரு போன்ற மாபெரும் மனிதர்களின் எழுத்துக்கள் எத்தனையோ தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றியது என்பது வரலாற்று சான்று.

பகத்சிங் சிறையின் தூக்குத் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.. அடுத்த நாள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நாள் சிறையில் அவர் புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் சிறை அதிகாரிகள் எப்படி உங்களால் இப்படி முடிகின்றது என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் சாகும் முன் முட்டாளாக சாக விரும்பவில்லை என்றாராம். சாகும் தருவாயில் கூட அவர் எப்படி வாசிக்கும் பழக்கம் கொண்டவராக வாழ்ந்து உள்ளார்..

அப்துல் கலாம் அடிக்கடி சொல்வார். “தினமும் ஒரு மணி நேரம் வாசிக்க நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் நடமாடும் அறிவுக் களஞ்சியமாக மாறி போவீர்கள்” என்பார்.

என் கணவர் தலைவர் ஜெ.எஸ். அவர்களும் தினமும் இரவு உறங்கப் போகும் முன் அரை மணி நேரம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார் வெளியூருக்குச் செல்லும் போதும் காரில் புத்தகங்களை எடுத்துச் செல்வார்.


எங்கள் கல்லூரியான எம்.பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரிக்கு திரு. கண்ணன், தமிழ் மரபு அறக்கட்டளை தென் கொரியா, அவர்களும் திருமதி சுபாஷிணி டிரெம்மல், ஜெர்மனி அவர்களும் திருமதி பவளசங்கரி, அவா;களும் வருகை புரிந்து பழமையான தமிழ் நூல்களை எப்படி மின் நூல்களாக மாற்றம் செய்வது என்பதைப் பற்றி எங்கள் மாணவ மாணவிகளுக்கு விளக்கிக் கூறினர்.;. வெளி நாடுகளில் வேலையில் இருக்கும் அவர்கள் நம் தமிழ் மொழி வளர பல வழிகளை மேற்கொள்கின்றனா.

 

வீணாக தொலைக்காட்சி முன் அமர்ந்து மனதையும் நமது எண்ணங்களையும் சிதைத்து வாழ்வை வீணடித்துக் கொள்வதை விட நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உங்கள் வாழ்வையும் மனதையும் நல்ல எண்ணங்களால் மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்பது என் வேண்டுகோள்.

இன்று இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியா; கவிஞா இடக்கரத்தான் அவர்களை வாழ்த்தி அவர்கள் பணி மேலும் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

 

1 thought on “முத்தமிழ் பேரவை நிகழ்ச்சி

  1. நல்ல அறிவுரை.எம்.பி. நாச்சிமுத்து எம். ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் பொறியியல் சம்பந்தமற்ற வரலாற்று, இலக்கிய, பொது அறிவு, விஞ்ஞான நூல்களை வாங்கி வையுங்கள். இத்துறையில் எனக்கு ஈடுபாடு இருப்பதால், எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.