உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர்- கின்னஸில் இடம் பெற்ற சந்திர பகதூர்
சாந்தி மாரியப்பன்
நறுக் துணுக்.. (17)
உலகிலேயே உயரம் குறைந்த மனிதராக நேபாள நாட்டைச் சேர்ந்த சந்திர பகதூர் டாங்கி என்பவர் அறிவிக்கப்பட்டு கின்னஸ் சாதனை வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவரது உயரம் 21.5 அங்குலங்களேயாகும் (54.6 செ.மீ). இதன் மூலம் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செ.மீ உயரம் கொண்ட ஜுன்ரே பாலாவிங் என்பவரின் சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது.
72 வயதான சந்திர பகதூர் காட்மண்டுவிலிருந்து 400 கி.மீ தொலைவிலுள்ள டாங் மாவட்டத்திலிருக்கும் ரிம்கோலி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். காட்மண்டுவிலிருக்கும் CIWEC-ல் கின்னஸ் உயரதிகாரியான க்ரெய்க் க்ளிண்டேயாலும் மருத்துவர்களாலும் ஒரே நாளில் மூன்று முறை அவரது உயரம் அளக்கப்பட்டு இவர்தான் உலகில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களிலேயே உயரம் குறைந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதே நேபாள நாட்டைச் சேர்ந்த காகேந்திர தாப்பா மகர் என்பவரின் சாதனையையே பாலாவிங்கும் முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சந்திர பகதூரின் சாதனை மூலம் இப்போது மறுபடியும் தன்னுடைய பெருமையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது நேபாளம்.
படத்திற்கு நன்றி:http://www.digitalspy.com.au/odd/news/a367955/72-year-old-from-nepal-named-worlds-shortest-man.html