இலக்கியம்கவிதைகள்

ரகசியமாய்

கவிநயா

மூடி மூடி வைத்தாலும்,
மல்லிகைப் பூவின் இருப்பை
அதன் வாசனை காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

பனிக் கட்டியின் இருப்பை
பாத்திரம் காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

கதிரவனின் இருப்பை
அவன் கதிரொளி காட்டிக் கொடுத்து விடுவதைப் போல…

என் மனதில் உன் இருப்பை
திடீர் பகற் கனவுகளும்,
ரகசியப் புன்னகைகளும்,
கன்னத்தின் கனிச் சிவப்பும்,
காட்டிக் கொடுத்து விடுகின்றன!

 

படத்திற்கு நன்றி:http://www.thehavenhealingcentre.co.uk/blushing.htm

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க