அமெரிக்காவாழ் தமிழன் ஒருவனின் வாழ்க்கையில்……….. ?

 

நிகில் முருகன் (P.R.O.)

அமெரிக்காவாழ் தமிழன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த விளையாட்டு வினையாய் ஆன கதை

அமெரிக்காவில் ஒரு அரவான் பழி சுமத்தப்பட்டு,பலிக்குக் காத்திருக்கிறான்.

18 வயதே ஆன அரவான்.புராணக்காலத்தில் மட்டுமல்ல,நிகழ்காலத்திலும் அதுவும் அமெரிக்காவிலா என்ற அதிர்ச்சி உங்களுக்கு இருக்கும். இந்த அரவானின் பெயர் பூர்வீகம் தெரிந்து கொண்டு, சதியின் பின்னலைப் பார்ப்போம்.

திரு.ரவி பழனி அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் கம்ப்யூட்டர் நிபுணராக இருக்கிறார். ரவி பழனி தஞ்சாவூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.E., பட்டம் பெற்றவர். அவர் தந்தையார் தஞ்சாவூரில் மருத்துவராக உள்ளார். ரவி தன் மனைவி சபீதா மற்றும் மகன் தருண் ரவியுடன் 15 வருடங்களுக்கு முன்பு வேலை நிமிர்த்தமாக அமெரிக்கா வந்து குடியேறினார். இந்த தருண் ரவி தான் நம் கதை நாயகன். வருகிற 2012,மே மாதம் 21ம் தேதி இவன் தான் பலிக்குக் காத்திருக்கிறான்.

முன்கதை

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கலகலப்பான சுபாவமும், நிறைய நண்பர்களும் உடைய தருண் ரவி கல்லூரிப்படிப்புக்காக நியூஜெர்ஸியில் உள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் சேருகிறான். (Rutgers University, The State University of New Jersey, US.is the largest institution for higher education in New Jersey, United States.) கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க ஆரம்பித்தான். அந்த விடுதி அறை ஓட்டல் ரூம் போல, இருவர் தங்கக் கூடிய சிறிய ஓரே ரூம், தனித்தனி கட்டில், பாத்ரூமுக்கு விடுதியின் பொது பாத்ரூமைத் தான் உபயோகப்படுத்த வேண்டும்.

தருண் ரவியிடம் விடுதி நிர்வாகம் உன்னுடன் சேர்ந்து தங்கக்கூடிய மாணவன் அமெரிக்கனான டைலர் கிலிமெண்ட்டி (TYLER CLEMENTIE) என்று கூறுகிறது. தருண் ரவி தன்னுடன் தங்கக்கூடிய மாணவன் டைலர் யார்? என்ன? என்ற ஆர்வத்தில் அவனைப் பற்றி இன்டர்நெட்டில் தேடுகிறான். அப்போது தெரிகிறது டைலர் ஓர் ஓரினச் சேர்க்கையாளன் என்று, டைலர் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான வெப் சைட்டில் பதிவு செய்துள்ளதை தருண் கண்டு கொள்கிறான்.

கல்லூரியில் சேருவதற்கு முன்பு, டைலர் தன் பெற்றோர்களிடம் தான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன் என்று கூறியிருக்கிறான். அவன் தந்தை வேறு வழியின்றி அவனை ஒத்துக்கொண்டார். அவனது அம்மா தான் முழுவதுமாக மறுத்துள்ளார்.தன் மகனுக்கு திருமணமாகாதே,குழந்தைகள் பிறக்காதே என்று ஆழமாக வருத்தம் தெரிவித்துள்ளார். கிறிஸ்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக தன் மகன் போய் விட்டானே என்று வருந்தியுள்ளார்.

விடுதியில் தருண்ரவியும், டைலரும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. டைலர் கூச்ச சுபாவம் கொண்டவனாக, கலகலவென்று யாருடனும பேசாதவனாக இருக்கிறான் என்று தருண் தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறான்.

கல்லுரி ஆரம்பித்து மூன்றாம் வாரத்தின் இறுதியில், டைலர் தருணிடம் 2010 செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை தனக்கு மட்டுமானதாக ரூம் வேண்டும் என்று கேட்டிருக்கிறான். தருண் அதற்கு சம்மதித்து, தன் ரூமுக்கு எதிரில் உள்ள Molly Wei என்கிற பெண் தோழியின் அறைக்கு சென்றுவிட்டான்.

டைலர் 30 வயது மதிக்கத்தக்க, தாடி வைத்த, சந்தேகம் ஏற்பட வைக்கும் தோற்றம் கொண்ட ஒரு நபரை அழைத்துக் கொண்டு,அவன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான். அந்த புதிய ஆளின் தோற்றத்தைப் பார்த்த தருண்ரவி சந்தேகம் கொண்டு, தன் ரூமில் உள்ள தன் விலை மதிப்புள்ள பொருட்கள் திருடு போய்விடுமோ என்ற கவலையில் மோலி (Molly Wei) ரூமில் உள்ள கம்ப்யூட்டர் மூலமாக, தன் ரூமில் உள்ள கம்ப்யூட்டர் வெப் கேமராவை இயக்கி, ரூமில் என்ன நடக்கிறது என்று பெண் நண்பியுடன் (Molly Wei) பார்க்கிறான். அதில் டைலரும், அறைக்கு வந்த புதிய நபரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு போலீஸ் தகவல்படி மிகச்சரியாக இரண்டிலிருந்து நான்கு விநாடிகளில் வெப்கேமை அணைத்துவிடுகிறான்.

இப்போது தான் விதி விளையாடியது.

தருண்ரவி தான் பார்த்த ஓரினச் சேர்க்கையை நண்பர்களுக்கு டிவிட்டரில் டிவிட் செய்தான்.

டைலர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தருண்ரவியிடம் தனக்கு இன்று இரவும், ரூம் தனக்கு மட்டுமானதாக இருக்க வேண்டுமென்று கேட்க, ரவி சம்மதிக்கிறான்.

உடனே விளையாட்டுப் புத்தியில் ரவி தன் நண்பர்களுக்கு டிவிட் செய்கிறான் “அது மீண்டும் நடக்கிறது, இன்றிரவு நண்பர்கள் என் வெப்கேமை ஆன் செய்து பார்த்துக் கொள்ளலாம்” என்று டிவிட்டரில் செய்தி அனுப்புகிறான்.

ரூமை விட்டு தருண்ரவி வெளியேறும் போது, தான் தவறு செய்கிறோம் என்று உறுத்த, தன் வெப்கேமை ஆப் செய்து விட்டு ரூமை விட்டு வெளியேறுகிறான்.

இது நடந்து இரண்டு நாட்களில் தருண் ரவியின் ரூம் மேட் டைலர் நியூயார்க்கின் ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்ஜில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறான்.

இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணையில் தருண் ரவி தன் ரூம் மேட் டைலரின் தனிமைக்கு பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான்

அமெரிக்காவின் அத்தனை ஊடகங்களும் தருண்ரவி தன் அறை நண்பன் டைலரின் ஹோமோ செக்சுவல் காட்சிகளை ரகசியமாக படம் எடுத்து YOU TUBE ல் உலவ விட்டதாக செய்திகள் வெளியிட்டன. அமெரிக்காவின் பல முக்கிய பிரமுகர்களும்,ஹோமோ குழுமத்தவரும் இது ஹோமோ செக்சுவல் என்ற சிறுபான்மையினத்தவர் மீது வஞ்சம் வைத்து தாக்கப்பட்ட பெரும் தாக்குதல். அதனால் இதில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை தரவேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால் உண்மை என்ன? தருணும் அவன் தோழியும் இரு ஆண்கள் முத்தமிடும் காட்சியை, வெப்கேமில் மிகச் சரியாக இரண்டிலிருந்து நான்கு வினாடிகள் பார்த்து விட்டு, வெப்கேமை அணைத்து விட்டார்கள். இந்தக் காட்சி பதிவும் செய்யப்படவில்லை YouTubeல் போடப்படவும் இல்லை.

இந்த செய்தியைப் பற்றி ஊடகங்களும் பத்திரிக்கைகளும் பேசத் துவங்கியவுடன், செய்தியின் பரபரப்பு அறிந்த அரசு தரப்பு, தருண் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டுடன் சேர்த்து மேலும் 15 குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இதில் முக்கியமான குற்றச்சாட்டு bias intimidation (In crime and law, hate crimes (also known as bias-motivated crimes) occur when a perpetrator targets a victim because of his or her perceived membership in a certain social group,usually defined by racial group, religion, sexual orientation, disability, class, ethnicity, nationality,age,sex, gender identity, social status or political affiliation. A hate crime is a legal category used to described bias-motivated violence:.)

Bias intimidation என்பது சிறுபான்மையினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்கும் சட்டம் (நிறம் காரணமாகவோ,மொழி,மதம்,இனம் காரணமாகவோ,வேற்று செக்ஸ் பிரிவினர் என்பதன் காரணமாகவோ,குறி வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பதிவு செய்யும் சட்டப்பிரிவு)

இந்த சட்டம் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும வன்முறையை தடுக்க, ஏற்படுத்தப்பட்ட குழப்பமான வார்த்தைகள் கொண்ட சட்டம்.

முதன்முறையாக இந்த வழக்கில் வேறு ஒரு அர்த்தத்தில் (Thoughtattempts to control not only the speech and actions, but also the thoughts of its subjects) அந்த சட்டம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து 15 குற்றச்சாட்டுகளில், இந்த bias intimidation குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக 10 வருட சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் எந்த குற்றச்சாட்டும் டைலரின் தற்கொலையை சம்பந்தப்படுத்தி கிடையாது.

வழக்கின் முன் விசாரணையின் போது, தருண் அனைத்து குற்றங்களையும் (all 15 counts) செய்ததாக ஒத்துக் கொண்டால், செய்த தவறுக்கு ஐந்து வருடம் சமூகப் பணி மட்டுமே தண்டனையாக வழங்கப்படும், சிறை தண்டனை கிடையாது என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டதை தருண் மறுத்துவிட்டான். தான் ஹோமோ குழுமத்தவருக்கு என்றும் எதிரியில்லை. அவர்களைப் பற்றி என்றும் தவறாகப் பேசியதில்லை, தவறான எண்ணம் கிடையாது.என் நெருங்கிய நண்பன் ஓர் ஓரின சேர்க்கையாளன் தான். டைலர் ஹோமோ செக்ஸ் என்ற காரணத்தால், நான் திட்டமிட்டு குற்றம் செய்ததாக சாட்டப்பட்ட Hate Crime குற்றத்தை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை, மிக உறுதியாக நான் அதை நினைத்து டைலருக்கு எதிராக செய்யவில்லை.நான் இரண்டு டிவிட்டர் செய்திகளை வேடிக்கைக்காக பதிவு செய்தேனே தவிர, வேறு எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு சரியான நீதி கிடைக்கும் என்று நம்பி மறுத்து விட்டான்.

வழக்கு விசாரணைக்கு முன் நியூயார்க்கர் பத்திரிக்கையின் ஆய்வறிக்கை:

1.டைலர் ஒரு ஹோமோ என்று தன் பெற்றோரிடம் கூறியது.அவன் அம்மா அதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்கள்

2.டைலர் மிக கூச்சம் சுபாவம் கொண்டவனாக, யாருடனும் கலகலவென்று பழகாதவனாக இருந்தது

3.டைலருக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை

4. டைலர் 6 மாதத்திற்கு முன்பிருந்தே,தன் செல்போனில் தான் குதித்து தற்கொலை செய்து கொண்ட, நியூயார்க் ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்ஜின் புகைப்படத்தை வைத்திருந்தான்.

5.டைலர் தன் தற்கொலைக்கு முன்பு,கடிதம் எழுதி வைத்துள்ளான் அதைக் கைப்பற்றிய போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளில் எதுவும் தற்கொலையைப் பற்றி கிடையாது என்று அந்தக் கடிதத்தை வெளியிட மறுக்கிறது.
(மேற்கண்ட விஷயங்களை தருண் தரப்பு வக்கீல் வழக்கு விசாரணையில் கொண்டு வரக் கூடாது என்று நீதிபதி கூறிவிட்டார்.)

வழக்கு விசாரணை:

5.டைலர் தருணின் முதல் டிவிட்டர் செய்தியை மறு நாளே பார்த்திருக்கிறான். தருணிடம் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை.அது தெரிந்தே தான்,அடுத்த முறையும் ரூம் வேண்டும் என்று கேட்டிருக்கிறான்.

6.டிவிட்டர் செய்திகள் பாதுகாக்கப்பட்டவை அல்ல. யார் அனுப்பிய செய்தியை யாரும் பார்க்கலாம். டைலர் தருணின் இரண்டாவது டிவிட்டர் செய்தியை பார்த்து விட்டு,அறையில் இருந்த தருணின் கம்ப்யூட்டரை மொத்தமாக அணைத்து விட்டான்.அதற்கு முன்பே தருண் குற்ற உணர்ச்சியால் வெப்கேமை அணைத்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

7.டைலருடன் ஹோமோசெக்ஸில் ஈடுபட்ட M.B. என்கிற நபரின் பிரைவேசி கருதி,அந்த நபரின் புகைப்படம்,பெயர்,அவருடன் நடந்த விசாரணையில் கிடைத்த தகவல் எதையும் அரசு தரப்பு வெளியிட மறுத்து விட்டது. டைலரும் அந்த 30 வயது மதிக்கத்தக்க நபரும் ஹோமோ செக்சுவல் வெப்சைட்டில் அறிமுகமாகி, sms,chat மூலம் செய்திகளை பரிமாறிக் கொண்டு, மூன்று இரவுகள் செக்ஸ்க்காக மட்டும் கல்லூரி விடுதி அறையில் சந்தித்துக் கொண்டனர்

8. தருண் தன்னை வேவு பார்ப்பதாகவும், தனக்கு வேறு ரூம் வேண்டும் என்றும், டைலர் விடுதி வார்டனிடம் முறையீடு செய்திருக்கிறான். இதை வார்டன் தருணிடம் விசாரிக்க, தருண் டைலருக்கு ஒரு மிகப் பெரிய மன்னிப்பு SMS அனுப்பி உள்ளான். அதில் “நீ ஹோமோ என்பது எனக்கு தெரியும் , எனக்கு அதைப் பற்றி எதுவும் பிரச்சனை இல்லை, நீ வெட்க சுபாவம் கொண்டனாக உள்ளதால் நான் அதைப் பற்றி உன்னிடம் பேசவில்லை, என்னுடைய மற்றொரு நெருங்கிய நண்பன் ஹோமோ என்றும், நடந்த விஷயங்கள் ஒரு misunderstanding என்றும், நிர்ப்பந்தத்தினால் நீ ரூம் மாற்றி செல்ல வேண்டாம்”. என்று எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளான்.டைலர் அந்த SMSயை தற்கொலைக்கு முன்பு பார்த்தானா இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி?

8.தருணின் அத்தனை பள்ளி,கல்லூரி நண்பர்களும் தருண் என்றும் ஹோமோ செக்சுவலுக்கு எதிராகவோ,டைலரை கிண்டல் செய்தோ,வெறுத்தோ, தவறாகவோ எந்த உரையாடலும் நிகழ்த்தவில்லை என்று கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர்.

9.தருணின் பிரைவேட் NET, FACEBOOK, TWITTER சாட் செய்திகள், PHONE SMSகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, பகிரங்கமாக வழக்கு விசாரணையில் பயன்படுத்தப்பட்டன.

10.பதின்மப் பருவத்தினர் பயன்படுத்தும் உரையாடலில் உள்ள சில வார்த்தைகளை குறிப்பிட்டு, தருண் ஹோமோ செக்சுவலுக்கு எதிரானவன் என்ற கருத்தை அரசு தரப்பு திணித்தது.

11.தருண் விளையாட்டாய் அனுப்பிய இரண்டு டிவிட்டர் செய்திகளை காரணம் காட்டி, அவனை படுபயங்கரமாக சித்தரித்தது.

12.டைலர் ஹோமோ செக்சுவல்,அதனால் ஹோமோ செக்சுவலை வெறுக்கும் தருண்ரவி வேண்டுமென்று டைலரை புண்படுத்தினான். டைலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் திட்டமிட்டு சதி செய்திருக்கிறான் என்று தருணை ஒரு பயங்கரவாதி அளவிற்கு அரசு தரப்பு நிலை நிறுத்தியது.

அமெரிக்க வழக்கு விசாரணை முறை:

பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழு,எல்லா வழக்கு விசாரணையையும் நேரடியாகப் பார்க்கும்.

1.விசாரணையின் இறுதியில்,இந்த 15 குற்றச்சாட்டுகளுக்கும் தருண் குற்றவாளியா நிரபராதியா என்று இறுதி முடிவு எடுக்க வேண்டியது இவர்களே.

2.இந்த வழக்கிற்கும் டைலரின் தற்கொலைக்கும் எந்த சம்மந்தமுமில்லை, ஆகையால் இந்த 12 பேர் கொண்ட குழு டைலரின் தற்கொலையை மனதில் வைத்துக்கொண்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று பலமுறை நீதிபதி வலியுறுத்தினார்

3.பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் இந்த செய்தியை பெரிதுபடுத்தி பிரச்சினையாக ஆகியதால்,12 பேர் கொண்ட குழு அதில் பெரிதும் தாக்கம் அடைந்து (Social influence occurs when one’s emotions, opinions, or behaviors are affected by others) தருண் மீது சுமத்தப்பட்ட 15 குற்றச்சாட்டுகளிலும், தருண் குற்றம் செய்தான் என்று கடந்த 2012 மார்ச் 16ம் தேதி வெள்ளிக்கிழமை அறிக்கை தந்தனர்

4. Bias intimidation எனப்படும் சிறுபான்மையினத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றப்பிரிவு என்பது குழப்பமான சட்டப் பிரிவு.

5.இந்த சட்டத்தின் அடிப்படையில் இதுவரை இதுபோன்று யாரையும் தண்டித்தது இல்லை.

6.இந்த குழப்பமான அதிகபட்ச தண்டனை தரும் இந்த சட்டத்தை இந்த வழக்கிற்கு பயன்படுத்துவது குறித்து தனக்கு தெளிவு இல்லை என்று நீதிபதி கூறிவிட்டார்.

7.ஆகையால் இதை முடிவு செய்ய வேண்டியது 12 பேர் கொண்ட அந்த குழு தான் என்றும் நீதிபதி கூறிவிட்டார்.

தீர்ப்புக்கு பின்:

1.இந்த வழக்கில் இந்த 12 பேர் கொண்ட குழுவின் முடிவு மிக அதிர்ச்சியானது என அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி விட்டன.

இந்த குழப்பமான சட்டத்திற்கு தருண் ஒரு பலி ஆடு (scape goat) என்று பத்திரிக்கைகள் இன்று எழுதுகின்றன.

2. இது அந்த சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, ஆதாரமில்லாத சாட்சியங்களைக் கொண்டு, தருண் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

3.பத்துவருடம் சிறைதண்டனை என்பது குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கும், பயங்கர கொலைகாரனுக்கும் தரப்படுகிற தண்டனை.

4. இதை விளையாட்டாய் டிவிட்டரில் செய்திகளை போட்டதற்காக,18வயது பையனுக்கு தண்டனை தருவது சரியா? முறையா?

5. பல சட்ட நிபுணர்கள் இந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறித்தும், அது இந்த வழக்கில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விவாதிக்கின்றனர்

6.இந்த வழக்கிற்கான தண்டனையை, நீதிபதி வருகிற 2012 மே 21ம் தேதி வழங்குவார்.

7.தருண் டிவிட்டரில் செய்தி போட்டது தவறு தான்.தவறு செய்திருக்கிறான், உண்மை தான்.அதற்கு இத்தனை பெரிய தண்டனை சரியில்லை. குழப்பமான வார்த்தைகள் கொண்ட இந்த சட்டம் இந்த வழக்கில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது

8.இது 12 பேர் கொண்ட குழு எடுத்த ஒரு உணர்ச்சிப்பூர்வமாக எடுத்த முடிவு.

9. இந்த தண்டனையிலிருந்து தருண் தப்பிக்க ஒரே கடைசி வழி இருக்கிறது. வெள்ளை மாளிகை இதில் தலையிட்டு, தருணின் வயது, படிப்பு, எதிர்காலத்தை மனதில் கொண்டு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

10.இன்னொரு வகையில் உலகெங்கிலும் இன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான குரல் வலுத்து ஒலிக்கத் துவங்கியுள்ள நேரத்தில், தருண் தண்டிக்கப்பட்டால் சராசரி மக்களிடத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் மீதான பெரும் அச்சமும், வெகுவாக அவர்களை ஒதுக்கி வைத்தலும் அதிகமாகும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

11.தருணின் குடும்ப நண்பர்களும், இந்த சட்டம் தவறாக பயன்படுத்தபட்டுள்ளது என கருதிய பொதுமக்களும் வெள்ளை மாளிகைக்கு ஒரு மனுவை சமர்ப்பித்து உள்ளனர். www.wh.gov/NM1

12. இன்னும் இருபது தினத்திற்குள் குறைந்தது இருபத்தி ஐந்தாயிரம் பேர் (25000) இந்த சைட்டில் சென்று பதிவு செய்தால்,வெள்ளை மாளிகை இந்த மனுவை பார்வையிட்டு பரீசிலனை பண்ணவேண்டுமென்பது கட்டாயம்.

13.விளையாட்டுத்தனமாக சிறுதவறு செய்து பேராபத்தில் சிக்கியிருக்கும் ஒரு தமிழனின் வாழ்க்கையை காப்பாற்ற நம்மால் ஆன ஒரு சிறு உதவி இந்த www.wh.gov/NM1  சைட்டில் சென்று பதிவு செய்வது.

14.கொலைவெறியை வைரஸாக உலகம் முழுவதும் பரப்பிய தமிழன்,இந்த நல்ல உதவியை அனைவருக்கும் sms, phone, facebook, twitter மூலம் பரப்பி,அடுத்த 10 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் 15ம் தேதிக்குள் லட்சக்கணக்கான கையெழுத்துகள் இந்த சைட்டில் பதிவாக செய்யவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்ளும் தமிழன் நலன் விரும்பும் தமிழன்.

White House Petition Site:P http://www.wh.gov/NM1

Procedure to Sign the petition:
> Click on the URL http://www.wh.gov/NM1
> Select Create an an Account
> Enter your First Name, Last Name and email address (other information are optional)
> Enter the security code displayes as scrambled letters
> Select Create an Account button in the bottom
> You will recive the email shortly
> Follow the link, it will take you to the petition page again
> In that page you will see “Sign the Petition” button.
> Press the botton, you are signed your name will appear in the bottom along with all the signers.

இந்த வழக்கைப்பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள அணுக வேண்டிய இணையதள முகவரிகள்

1.    http://www.dailytargum.com/opinion/columnists/public-rushes-to-judgment/article_d24a5d6e-6759-11e1-bf67-001a4bcf6878.html

2.    http://www.cbsnews.com/8301-504083_162-57391344-504083/rutgers-spycam-trial-a-college-prank-or-an-act-of-hate/

3.    http://www.nytimes.com/roomfordebate/2012/03/07/are-hate-crime-laws-necessary/justice-not-vengeance-for-hate-crimes

4.    http://abcnews.go.com/2020/burden-remains-prosecution-tyler-clementi-case/story?id=15816074

5.    http://abcnews.go.com/US/rutgers-trial-mb-dharun-ravi-jailed/story?id=15839948#.T1anRIcgfqI

6.    NJ Got the Wrong Guy, by Andrea Peyserhttp://www.nypost.com/p/news/national/nj_got_the_wrong_guy_Akfgwb1NQrG5vTevwkd4NL

7.    My Prediction: Dharun Ravi to Be Found Not Guilty of Bias Intimidation
http://www.huffingtonpost.com/mari-fagel/my-prediction-dharun-ravi_b_1324767.html

8.    Twist in Rutgers spycam trial: Defense infers the prosecution is biased
http://www.csmonitor.com/USA/Justice/2012/0309/Twist-in-Rutgers-spycam-trial-Defense-infers-the-prosecution-is-biased/%28page%29/2

9.    Is It Fair to Punish Dharun Ravi Because Tyler Clementi Died? 
http://www.thedailybeast.com/newsweek/2012/03/11/is-it-fair-to-punish-dharun-ravi-because-tyler-clementi-died.html

10.  Rutgers Trial: The Political Firestorm Before the Indictment
http://abcnews.go.com/US/clementi-trial-daily-analysis-politics-tyler-clementis-suicide/story?id=15909031#.T19-s4E7WAg

11.  There are no winners in Dharun Ravi case: Gay activist
http://www.rediff.com/news/report/there-are-no-winners-in-dharun-ravi-case-gay-activist/20120314.htm

12.  Opinion – Go to Trial: Crash the Justice System
http://www.nytimes.com/2012/03/11/opinion/sunday/go-to-trial-crash-the-justice-system.html?_r=1

13.  Rutgers Jury Ends Day Without Verdict http://abcnews.go.com/US/rutgers-jury-ends-day-verdict/story?id=15909111

14.  Di Ionno: ‘Muddled’ legislation exists at core of jury deliberation in Ravi trial
http://blog.nj.com/njv_mark_diionno/2012/03/di_ionno_muddled_legislation_e.html

15.  Sympathy for the devil: Why former Rutgers student Dharun Ravi should be found not guilty on all charges http://dailycaller.com/2012/03/15/sympathy-with-the-devil-why-former-rutgers-student-dharun-ravi-should-be-found-not-guilty-on-all-charges/#ixzz1pEysvyOo

16.  Guilty verdict in Ravi webcam spying trial breaks new legal ground, and will likely face scrutiny
http://www.nj.com/news/index.ssf/2012/03/guitly_verdict_in_ravi_webcam.html

17.   http://abcnews.go.com/US/rutgers-trial-post-verdict-analysis-perilous-path-justice/story?id=15952064
 
Indian news article talks about the petition filed 
http://www.hindustantimes.com/world-news/Americas/Petition-sent-to-White-House-to-save-Indian-student/Article1-827777.aspx 
Another view
http://www.dailytargum.com/opinion/editorials/final-verdict-misses-details-of-ravi-case/article_d987ee7c-7170-11e1-a03e-001a4bcf6878.html As we discussed this article deals with the full insight investigation of the case,
http://www.newyorker.com/reporting/2012/02/06/120206fa_fact_parker?currentPage=all 
Other articles to support 
http://dailycaller.com/2012/03/15/sympathy-with-the-devil-why-former-rutgers-student-dharun-ravi-should-be-found-not-guilty-on-all-charges/
Explaining the complexity of the law which is used in this case 1st time
http://blog.nj.com/njv_mark_diionno/2012/03/di_ionno_muddled_legislation_e.html
http://www.huffingtonpost.com/sunil-adam/dharun-ravi-case_b_1355504.html 
http://blog.nj.com/njv_editorial_page/2012/03/dharun_ravi_doesnt_deserve_pri.html 
http://www.nydailynews.com/new-york/alternate-juror-rutger-spy-case-disagrees-guilty-verdict-article-1.1041816?localLinksEnabled=false 

In the google search for “Dharun Ravi” to get all the news and photos.As we discussed this article deals with the full insight investigation of the case,

Leave a Reply

Your email address will not be published.