இலக்கியம்கவிதைகள்

கால்கோள் விழா

செண்பக ஜெகதீசன்

மாறி வருகிறது மனித இனம்
மனிதம் மறந்த சமுதாயமாய்..
இதயம்
இடம்பெயர்ந்தோ..
ஜடமாகியோ,
நிஜப் பிணங்களுடன்
நிலைகொள்ளும்
நடைப் பிணங்களாய்..
எல்லைக் கோடுகள்
தொல்லைக் கேடுகளாய்..
இரத்த ஆறுகள்
ஏன்றும் ஜீவநதிகளாய்..
இனம் மொழி தேசம்
ஏல்லாம் கடந்த ஒன்றாய்-
வன்முறையாய்…

ஓ,
இதுதான்
கற்காலத் தொடக்கத்திற்குக்
கால்கோள் விழாவா…!

 

படத்திற்கு நன்றி:http://paradise7.hubpages.com/hub/Is-Violence-Necessary

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க