ஆறுமுக நாவலர் பதிப்புகளின் முழுமையான தொகுப்பு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சென்னை வடக்குப் பகுதி வண்ணாரப் பேட்டை. அங்கே தியாகராசர் கல்லூரி. மாணவனாகத் தேர்வு எழுதத் தியாகராசர் கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன்.
வட சென்னைத் தமிழ்ச் சங்கக் கூட்டங்கள் தியாகராசர் கல்லூரியில் நடைபெறும். பேராசிரியர்கள் பலர் பேசுவர். வகுப்பறை நிறைந்திருக்கும். புலவர் தேவராசன் அக் கூட்டங்களை ஒழுங்கு செய்வார். தமிழ் உணர்வாளர் என்றோர் கூட்டம் 1980களின் தொடக்கத்தில் சென்னையில் கருக் கொண்டது. அந்த உணர்வாளர்களுள் ஒருவர் புலவர் தேவராசன்.
இந்த உணர்வாளர்களுள் பெரும்பாலோர் தமிழாசிரியர். அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றுவோர். கிஆபெ, கா. அப்பாத்துரையார் போன்றோர் அக்காலத்தில் இந்த உணர்வாளருக்கு வழிகாட்டிகள். 1986இல் சென்னைக்கு வந்து சேர்ந்த நான், இந்த உணர்வாளர்களுடன் இயல்பாக உறவுகொண்டேன். இவர்கள் நடத்திய தமிழ் வளர்ச்சிப் போராட்டங்களில் பங்கு கொண்டேன்.
புலவர் தேவராசன் அக்கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் துண்டறிக்கையோடு வருவார். வட சென்னைத் தமிழ்ச் சங்கக் கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பார். அங்கு தொடங்கிய பழக்கம், காலப்போக்கில் காந்தளகத்துக்கும் அவர் வந்து துண்டறிக்கை கொடுத்து அழைக்குமளவு நெருக்கமாயிற்று.
ஒரு சில கூட்டங்களுக்குப் போய் வருவேன். மயிலை சீனி வேங்கடசாமியின் நூல்களைப் பற்றி என்னிடம் காந்தளகத்தில் பேசுவார். ஆறுமுக நாவலர், சிவைதா போன்ற தமிழறிஞர்களின் நூல்களைப் பட்டியவிடுவார். இந்த ஆசிரியர்களின் மிகப் பழைய பதிப்புகளை வைத்திருப்பதாகக் கூறுவார்.
ஒருமுறை என்னை அழைத்து வட சென்னைத் தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றுவித்தார். ஆறுமுக நாவலருக்கு ஆண்டுதோறும் நினைவுச் சொற்பொழிவாற்ற, சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் அறக்கட்டளையை நிறுவியிருந்தார், பண்டிதர் கா. பொ. இரத்தினம். அச்சொற்பொழிவுக்குப் பேச்சாளரை விதந்துரைக்கும் பேறு எனக்கு.
புலவர் தேவராசனைப் பேசுமாறு ஓராண்டு கேட்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்பினார். எழுதிக் கொண்டுவந்து உரையாற்றினார். அவர் கூறிய செய்திகள், அவற்றின் வரன் முறை, ஆறுமுக நாவலரைத் தமிழின் கலங்கரை விளக்கமாகக் காட்டின.
இவ்வாறான செய்திகளைத் தொகுத்து மிகச் சுவையாகச் சொன்னாரே எனக் கேட்டோர் வியந்தனர்.ஆறுமுக நாவலர் பதிப்புகள் பல அவரிடம் இருந்த செய்தியை அன்று என்னிடம் கூறினார். அவை மிகப் பழைய பதிப்புகள் என்றும் சொன்னார். அவை தவிர விழா மலர்கள், நாவலர் பற்றிய பிறர் எழுதிய நூல்கள் என அவர் திரட்டி வைத்திருந்த நூல்களின் பட்டியலைக் கேட்டு வியந்தேன். பின்னர் என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம், இலங்கைக்குப் போகவேண்டும் நாவலர் வாழ்ந்த மண்ணை மிதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருப்பதைச் சொல்லுவார்.
நாவலரின் அனைத்து நூல்களையும் தொகுத்து, நாவலரின் முழுமையான தொகுப்பாக வெளியிடவேண்டும் என என்னிடம் கேட்டார். தானே பதிப்பாசிரியராக இருத்து தொகுத்துத் தருவதாகக் கூறினார். செயல் வடிவம் கொடுக்கும் காலம் கனியவில்லை. ஆத்திரேலியாவில் மெல்போணில் பொறியியலாளர் சிறீக்கந்தராசா ஆறுமுக நாவலர் பதிப்புகளுள் இரு நூல்களை இணையத்தில் கொண்டு வரவேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் என்னிடம் கூறிய பொழுது, அனைத்துப் பதிப்புகளையும் இணையத்தில் கொண்டு வரலாமே எனக் கூறினேன். செய்யுங்கள் என உற்சாகித்தார்.
மின்புத்தகத் தொழிநுட்பம் தமிழில் வளரா நிலையைச் சுட்டி, மின்புத்தகமாக்கல், ஆறுமுகநாவலர் பதிப்புகள் அனைத்தையும் வெளிக் கொணர்தல் என்ற செயற்றிட்டத்தைப் பேசினோம்.
இன்று முற்பகல் புலவர் தேவராசனைச் சந்திக்கச் சென்றேன். மயிலாப்பூரில் காரணீச்சரர் தெருவில் மகளுடன் வாழ்கிறார். இந்தச் செயல் விதையை விதைத்தவர் அவரல்லவா?
பார்த்ததும் அழுதுவிட்டேன். கடந்த சில மாதங்களுக்கு முன் தெருவில் நடக்கையில் மயங்கி விழுந்தவர், பக்க வாதமாகி, இடப்பக்கம் செயலிழந்து, படிப்படியாக மீட்கும் மருத்துவத்தில் உள்ளார். இடது கால் வழமைக்கு வந்தாலும் கை படிப்படியாக மாறி வருகிறது.
ஆறுமுக நாவலர் நூல்களைத் தொகுத்து வெளியிடுவீர்களா? என்றதே அவரது முதல் வினா. அந்தப் பணியில் முன்னேற்றம் உண்டு என்றதும், தன்னிடம்
உள்ள அனைத்து நூல்களையும் தான் எழுதிய கட்டுரைகளையும் தந்துவிடுகிறேன். கட்டாயம் செய்யுங்கள் என்றார்.
சோர்ந்திருந்தவர் உற்சாமாக எழுந்தார். ஊன்றுகோலுடன் நடந்தார். என் நூலகம் வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அடுத்த வாரம் அங்கு போகிறேன், நூல்களை எடுத்துக் கட்டிவைக்கிறேன். வந்து எடுத்துச் செல்லுங்கள், ஒரே தொகுப்பாக்குங்கள் என்றார்.
இந்தச் செய்தி மெல்போணில் வாழும் பொறியிலாளர் சிறீக்கந்தராசாவுக்கு மகிழ்ச்சியைத் தரும். மலேசியாவில் வாழும் திரு. குலவீரசிங்கத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். இருவரும் இந்த முயற்சியை விழைபவர்கள். சைவம் திரு. கந்தையா, சைவம் திரு. ஆறுமுகம் காட்டிய வழியில் கோலாம்பூரில் வாழும் திரு. குலவீரசிங்கம் இந்தப் பணியைச் செய்யவேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கூறியவர். சு. சிவபாதசுந்தரத்தின் நூல்கள் அனைத்தையும் மீள் பதிப்பாக்கும் முயற்சியில் திளைப்பவர்.
புலவர் தேவராசனைச் சந்தித்தபின் என் உள்ளத்தில் உற்சாகம் பிறந்த்து. மெல்போணில் பொறியியலாளர் சிறீக்கந்தராசாவைச் சந்தித்த பொழுது என் உள்ளத்தில் இருந்த ஏக்கம் குறைந்த்து. புலவர் தேவராசன் நூல்களைத் தருகிறார். பொறியியலாளர் சிறீக்கந்தராசா நிதி ஆக்கங்களைத் திரட்டித் தருகிறார். ஆறுமுக நாவலர் பதிப்புகளின் முழுமையான தொகுப்பு (Complete Works of Arumuga Navalar) இணையத்தில் மின்புத்தகமாக வரும் நாள் தொலைவில் இல்லை.
தொடக்கப் பணிகளைச் செய்கிறோம், மின்புத்தகமாக்கும் தொழினுட்பத்தைத் தயாரிப்பவர் நாகராசன். நூல்களைப் பிழையறத் தட்டச்சாக்கிப் பக்கமாக்கி, எடு ஆவணக் கோப்பாக்கி, தேடல் வசதியுடன் இணையத்தில் ஏற்றும் காலம் கனியும். தொகுப்பு வெளிவரும், எவரும் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் பார்க்க, படிக்க, கணிணியில் இறக்கி அச்சிடுவிக்க வசதி செய்வதால், நாவலர் பதிப்புகள் யாவும் மனிதத்தின் சொத்தாகி, அனைவருக்கும் முட்டின்றிக் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை.
Complete Works of Arumuga Navalar for e-book publishing
Arumuga Navalar, the apostle of Saiva Tamil renaissance during the mid 19th century was a prolific writer. He was hailed as the torch bearer for setting standards for modernizing Tamil prose and for error free copy editing / publishing. During his life span of 59 years he left a heritage of 70 titles, of which few were copy edited reproductions from palm leaf manuscripts. Many were his interpretations of these texts and few were his own expositions on subjects like geography, history, philosophy, lexicography, linguistics and Tamil renaissance.
Print and digital reproductions of those of his titles that are most suited and needed for modern times are available. However his complete works are not available either in print or as digitized.
Knowledge sharing emanates from availability of such texts. Complete works of Plato to Shakespeare or even later authors, not only of English but of other languages are available in print and in digitized formats contributing continuously to a universal knowledge bank.
Digitization is entering a new era of e-books. Popular digital reading platforms like the iPad, the Nook, Kindle, Pandigital, Hanvon and Sony Readers have pushed e-book publishing to record heights with no signs of abating. E-books and e-book readers are more popular with the older generation than with the younger generation.
Digitizing Arumuga Navalar’s complete works into e-book is a pre-requisite in riding the wave of the digital publishing revolution. E-book, although is an electronic version of a printed book. However it is not so always. Of late, downloadable versions of e-books are available in the public domain.
Tamil e-book industry is in a nascent stage. Most books on the internet are either as Hyper Text Markup Language (HTML) web pages or as portable document formats (PDF) in web pages. Many sites have uploaded extant literature in Tamil, mostly in the above formats.
E-paper of dailies and weeklies in the globalized Tamil world is now a reality.
Exporting to portable document format for enveloping as an e-book reader, where word search becomes feasible is an application that has been in the pipeline for few years now for archival Tamil books like those by Arumuga Navalar.
We envisage a project to collect the first edition copies or the earliest edition error free copies of all the 70 titles of Arumuga Navalar for making them available as e-books in the internet with search and freely downloadable facilities. The project involves:-
Total cost to have the Complete Works of Armuga Navalar freely available as e-book for reading platforms like the i-Pad, the Nook, Kindle, Pandigital, Hanvon and Sony Readers: Ind Rs. 300,000
Expected duration to have the Complete Works of Armuga Navalar as e-book for reading platforms like the i-Pad, the Nook, Kindle, Pandigital, Hanvon and Sony Readers: One Year
மேலும் விவரங்களுக்கு எழுதுக. <srihanuman@optusnet.com.au>
வணக்கம். நிட்சயமாக வரவேற்கப்படவேண்டியது. நாவலரின், சைவத்தொண்டும், தமிழ்த்தோடும் ஒவ்வொரு மாணவனும் அறிந்து கொள்ளவேண்டியது. அதை எமது இளம் சமுதாயத்திற்கு கொடுத்து உதவவேண்டிய கடமை எமக்குரியது. இன் நூலை சகல மக்களின் இல்லத்திலும் இருக்க வழி செய்யவேண்டும் என்பது என் விருப்பம்.