பிச்சினிக்காடு இளங்கோ

என் கவிதை
எளிமையானதால்
எனக்குக் கிடைத்தது
ஓர் அரிய கவிதை

ஒவ்வொரு நாளும்
நான்
கவிதை எழுதுகிறேன்

ஒவ்வொரு நாளும்
என்
கவிதை பேசுகிறது

என்
கவிதையைப் பேச வைத்ததுதான்
நான்
எழுதிய கவிதையின் சாதனை

இவ்வளவு கவிதைகளும்
சேர்ந்துதான்
அந்தக் கவிதையைத் தந்தது

என்
கவிதைகளின் செவிலித்தாயாய்
அந்தக் கவிதை

அது
என்
காதுகளறிந்த தேவதை

என்
கண்ணருகே
எத்தனையோ கவிதைகள்

என்
காதருகே
அந்த
ஒரே கவிதைதான்

கவிதைதான்
கவிதையைத் தரும்
உண்மை
உண்மையாகி விட்டது.

 

படத்திற்கு நன்றி:http://blog.pshares.org/2011/05/06/for-the-young-who-want-to

1 thought on “கவிதையும் கவிதையும்

  1. கவிதை தரும் கவிதைக்
    கவிதை நல் கவிதை…!
           -செண்பக ஜெகதீசன்… 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க