இலக்கியம்கவிதைகள்

ஒற்றைச் சிறகு!

பாகம்பிரியாள்

 ஒற்றைச் சிறகு!
என்றோ ஓர் நாள் விழிகள் கலந்து
விளைந்த காதலையும், அது தந்த
நினைவுகளையும் நேச நெஞ்சம்
நேர்த்தியாய் கோர்த்து வைத்திருந்தது 
 நேரம் தெரியாமல்  நெஞ்சம் புண்பட்டு
 விசிறிய வார்த்தைகள்  சூறாவளியாய்   
வாரி இறைத்து விட்டது நினைவுகளை

ஆனாலும், நெஞ்சப் பெட்டகத்தில்
ஒதுங்கிய ஓர் நினவு, ஒற்றைச் சிறகாய் 
எதிர்பாராமல்  மெல்ல வந்திறங்கியது.
பகலெல்லாம், சின்னச்  சிறகின்
பட்டு முனை வருடிக் கொடுத்தது.
இருள் கவிந்த பின்னோ, அதே
சிறகின் கூர்முனை எழுது  கோலாய் மாறி
இதயத்தை நெருடியதோடு மட்டுமல்லாமல்
தன் ஏக்கத்தையும் மௌனமாய்
பதிவு செய்து கொண்டிருக்கிறது !

படத்திற்கு நன்றி
http://www.keepshiningbaby.com/2010_04_01_archive.html

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    காதல் இதயத்தில்
    ஒற்றை இறகின் பதிவுகள்
    இதம்தான்;…!
           -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க