முகில் தினகரன்

காவிரி எமதென்று
கலவரப் படுத்தும்
கர்நாடகத்தான்
ஒரு புறம்!

முல்லைப் பெரியாறு
இல்லை உமக்கென்று
முரண்டு பிடிக்கும்
மலையாளத்தான்
மறுபுறம்!

பாலாற்றிலும் ஒரு
கோளாறு பண்ண
பாலக்கால் போடும்
ஆந்திரத்தான்
இன்னொரு புறம்!

அய்யகோ!
என்னவாகுமோ
எதிர்காலத் தமிழகம்?

திரையரங்க வாசலில்
தீவிரமாய் விவாதித்த
கூட்டம்
கௌண்டர் திறப்பில்
சகலமும் மறந்து
முண்டியடிப்பில்
முனைப்பானது!

வாழ்க.. மறத்தமிழன்!

 

படத்திற்கு நன்றி:http://chiefsworld.activeboard.com/t38542064/enthiran-storms-theatres-chiefsworld/?page=1

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *