முகில் தினகரன்
விண்ணைத் தாண்டிப் போயிருந்தது
ஒரு வீரியக் கோடு…
 
திடுக்கிட்டு விழித்தனர், தேவர்கள்
எங்கிருந்து நீண்டு வருது இந்தக் கோடு?
 
எட்டி நின்று பார்த்தனர், அசுரர்கள்
என்னவாயிருக்கும் இதுவென்ற அச்சத்தோடு…
 
தள்ளி நின்று கவனித்தனர்
ரம்பையும் ஊர்வசியும் ஒருவித தவிப்போடு….
 
தன்னைத் தாண்டிப் போகும் கோட்டை
சந்திரனும் கண்டது சந்தேகத்தோடு…
 
சுற்றித் திரியும் கிரகங்களும்
சற்றே நின்று யோசித்தன
பிரளய பயத்தோடு….
 
இந்த நிலையில்
இந்திரன் கூட்டினான் அவசரக் கூட்டம்
 
என்ன கோடு அது? அதனால்
நேருமோ ஏதுமிங்கு கேடு….
 
ஆளாளுக்கு விவாதித்து
அச்சத்தில் பிரலாபித்து
அனுப்பினர் நாரதரை அறிந்து வர….
 
பூவுலகம் வந்து புரிந்து கொண்ட நாரதர்
மேலுலகம் சென்று மெல்ல இயம்பினார்…
 
அது….
 
பெட்ரோல் விலை உயர்வைக் காட்டும்
விலைவாசிக் கோடென்று…!
படத்திற்கு நன்றி
http://mathdl.maa.org/mathDL/4/?pa=content&sa=viewDocument&nodeId=506
 
 
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.