வார ராசி பலன் 04-06-2012 முதல் 10-06-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் எல்லோரிடமும், எல்லா விஷயங்களையும் விவாதிக்க வேண்டாம். பெண்கள் சண்டைக்கு அஸ்திவாரம் போடுபவர்களிடமிருந்து விலகியிருப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள் சுற்றியிருப்பவர்களின் வீண் புகழ்ச்சியில் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருப்பது நலம். சுயதொழில் புரிபவர்கள் இழப்புக்களை நினைத்து வருந்தாமல் முன்னேறிச் சென்றால், வெற்றியும் விரும்பும் புகழும் உங்கள் வசமாகும்.! கலைஞர்கள் கூட்டு முயற்சி மூலம் மேற்கொள்ளும் காரியங்களில் வீண் விவாதம், அவநம்பிக்கை ஆகியவை குறுக்கிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்: மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டுச் செயல்பட்டால் பலன் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வார்த்தைகளில் அன்பும், பரிவும் குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். சிக்கலான வேலைகளைச் சிரமமின்றி செய்து முடிக்கும் திறன் பெருகும். வியாபாரிகள் பிறருக்கு வாக்களிக்கும் முன் தங்களுடைய நிறை குறைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. கலைஞர்கள் புதிய முயற்சியில் இறங்கும்போது தீவிர ஆலோசனையுடன், சரியான செயல்பாட்டையும் இணைத்துக் கொண்டால், வெற்றி பெறுவது உறுதி.
மிதுனம்: மாணவர்கள் தங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்களைப் பயன் படுத்திப் பிறர் நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு போக விடாமல் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். சுய தொழில் புரிபவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவால், புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும். பெண்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்குவாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டைக் கடைப்பிடியுங்கள். நல்ல பெயர் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் வியாபாரிகள் பண விஷயங்களில் அவசரமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம். கலைஞர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும்.
கடகம்: மறைமுகப் போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கை மாற்றாகப் பணம் பெற்றுச் செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கு நேரம் செலவழிப்பதைக் குறைப்பது நல்லது.
சிம்மம்: முதியவர்களுக்கு உறவுகளுக்கு உதவி மகிழும் வாய்ப்பு கிட்டும். நினைத்த காரியம் கை கூட, பேச்சு வார்த்தைகளில் இனிமையின் சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் நினைவில் வைப்பது நல்லது. கலைஞர்கள் ஆரோக்கியத்தை நன்கு பாராமரித்து வருவது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் தொழில் ரீதியாகப் போட்டிகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்கள் இந்த வாரம் அதிகப் பயணங்களை மேற்கொள்வார்கள். தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும்.
கன்னி: மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் செயல்பட்டால், ஒளிந்திருந்த திறமைகள் மீண்டும் சுடர் விட ஆரம்பிக்கும். கலைஞர்களுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். வியாபாரிகள் சரக்குத் தட்டுப்பாடு இல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டால், வாடிக்கையாளர்களின் தேவை எளிதில் நிறைவேறும். இந்த வாரம் விரும்பத்தகாத விஷயங்களால் பெண்கள் மன அமைதி குறையலாம். பொறுப்பில் இருப்பவர்கள் ஊழியரிடம் வீண் வாக்குவாதம், சச்சரவு போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அவசியம்.
துலாம்: பிள்ளைகளின் கல்விக்காகப் பெற்றோர்கள் இந்த வாரம் அதிகத் தொகை செலவு செய்ய வேண்டி இருக்கும். பணியில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை இரண்டையும் கட்டுக்குள் வைத்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் இல்லாமல் இருக்குமாறு கொண்டால் உறவுகள் சீராகத் திகழும். வியாபாரிகள் செலவுகளை அதிகப்படுத்தாமலிருப்பது அவசியம். சுயதொழில் புரிபவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்கள் எந்தச் சூழலிலும், பதற்றத்திற்கு இடமின்றி நடந்து கொள்வது அவசியம்.
விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் நிலவும் சிக்கல்களைச் சீக்கிரமாகத் தீர்த்து விட்டால், அபராதம் கட்ட வேண்டிய நிலையிலிருந்து தப்பித்து விடலாம். மாணவர்கள் பாடங்களைச் சேர்த்துப் போடாமலிருந்தால், தேர்வுகளைத் தைரியமாக எதிர் கொள்ளும் துணிவு பிறக்கும். சுய தொழில் புரிபவர்கள் தங்களைத் தேடி வரும் வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. குடும்பச் சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரிகள் பண விவகாரங்களில் எவரையும் நம்பிச் செயல்படுவதைத் தவிர்த்து விடவும்.
தனுசு: கலைஞர்கள் முக்கியமான விவகாரங்களில் பிறரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொண்டால், திட்டமிட்டப்படி செயல்கள் நடைபெறும். வியாபாரிகள் நீண்ட தூரப் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெண்கள், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர்களை நம்பிப் பிறருக்கு எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்களின் உற்சாகம் குறையாமலிருக்க உணவு, உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது. மாணவர்கள் சோம்பேறித்தனம் உங்களைப் பின் தள்ளி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதியவர்கள் ஆரோக்கியப் பராமரிப்பிற்காக அதிகச் செலவுகள் செய்ய நேரிடும்.
மகரம்: பணியில் இருப்பவர்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் வரை பிறரிடம் வீண் வாக்குவாதத்தில் இறங்க வேண்டாம். பெண்கள் பணியிடத்தில் அவசியமற்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுங்கள். வேலைகள் சீராக நடைபெறும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத விஷயங்களில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து விட்டாலே மனம் நிம்மதியாய் இருக்கும். கலைஞர்கள் உணர்ச்சிகளின் உந்துதல்படி முடிவெடுப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இழப்புக்களைப் பெருமளவு குறைத்து விடலாம். மாணவர்கள் அதிகப் பரபரப்பு, அதிக ஓய்வு இரண்டும் உங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்ற இடம் கொடாதீர்கள்.
கும்பம்: சுய தொழில் புரிபவர்கள் நண்பர்களின் போக்கால் சில தொல்லைகளைச் சகித்துக் கொண்டிருக்க நேரிடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் முறையான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொண்டால், மருத்துவச் செலவுகளைக் குறைத்து விடலாம். அளவுக்கு மிஞ்சினால் நட்பும் வேம்பாகக் கசந்து விடும். எனவே கலைஞர்கள் எதிலும் அளவாக இருப்பது நல்லது. வியாபாரிகளைத் தேடி வரும் சலுகைகளை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.
மீனம்: வெளியிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்து விட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதைச் சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தைச் சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.