தீர்ப்பு
பிச்சினிக்காடு இளங்கோ
எவ்வளவோ யோசித்த்து யோசித்து
அடைகாத்திருக்கிறேன்
அவ்வளவு சாதாரணமாக
அடையாளப்படுத்தவில்லை
அப்பொழுதே
அவிழ்த்து இருக்கலாம்
அதுகூட
சரியாக இருந்திருக்கலாம்
அவசரப்படாததில்
நன்மை இல்லாமலில்லை
அப்படி முந்திக்கொண்டிருந்தால்
அந்த நேரத்திற்கு
அது சரிதான்
ஆனால்
அது
சரியானதில்லை என்பதே
சரி
காலத்தை விழுங்குவதுகூட
சரியாகப்படுகிறது
எல்லாம் காலத்தில்
என்பது
எல்லாக் காலத்திற்கும்
பொருந்தாது
படத்திற்கு நன்றி :