இலக்கியம்கட்டுரைகள்

சகோதரர் ஆண்டோ பீட்டருக்கு அஞ்சலி!

 

அன்புடையீர்,

கணினி மென்பொருள் தொடர்பாகவும், மல்டிமீடியா தொடர்பாகவும் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளில் அயராது ஈடு பட்டு வந்த அன்பு சகோதரர் ஆண்டோ பீட்டர் காலமானது CMPA அமைப்பில் உள்ள எங்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தமளிக்கிறது.

புதிதாக ஏதாவது செய்தல் வேண்டும் எனும் தாகம் கொண்ட ஆண்டோ பீட்டர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், ஊடகத்துறை சார்ந்த பயிற்சியளிப்பதர்க்காகவும் எடுத்த முயற்சிகள் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியன. பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், ஆய்வு நூல்களையும், இணையதள கையேடுகளையும் வெளியிட்டுள்ள ஆண்டோ பீட்டர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

கணித் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த அவர் சாப்ட்வியூ என்ற நிறுவனத்தை தொடங்கி ஏராளமானவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து வந்தார். தமிழை ஒரு வியாபாரப் பொருளாக நினைக்கும் பலருக்கு நடுவில், மொழியை உயிருக்கு மேலாகப் போற்றி, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த ஆண்டோ பீட்டரை எளிதில் மறக்க முடியாது!

அண்ணன் இருதயம் அவர்களால் சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான ஆண்டோ பீட்டர், கடைசி வரையிலும் மாறாத ஊக்கமும், அயராத செயலாற்றும் திறனும் கொண்ட ஜென்ட்டில்மேனாகத் திகழ்ந்தார்.

ஞானமுள்ளோர், மெய்யறிவு உள்ளோர், நேர்மையானவர்கள் எத்தகைய நற்பண்புகளைக் கொண்டிருப்பர் என்று சாலமோனின் நீதிமொழிகள் கூறுகின்றனவோ, அவ்வாறாகவே இறை அச்சமும், மனிதாபிமானமும் கொண்ட நல்ல மனிதராக வாழ்ந்த தம்பி ஆண்டோ பீட்டர் இவ்வளவு விரைவில் காலமானது நமக்கு மிகப்பெரிய இழப்பு!

வெ. வெங்கட் ராஜ்
தலைவர்
பொது நடவடிக்கை ஊடக மையம்
இணையம் : www.cmpaindia.com

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க