இலக்கியம்கட்டுரைகள்

வையவன் வழங்கும் புத்தகப் பரிசு

 

அண்ணாகண்ணன்

முதுபெரும் எழுத்தாளர் வையவன் அவர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 100 நூல்களுக்கு மேல் படைத்தவர். 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி, பல்வேறு பரிசுகளை வென்றவர். நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், உரைகள், மொழிபெயர்ப்புகள்…. எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழில் தாரிணி பதிப்பகம், ஆங்கிலத்தில் English Titles என இரு பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறார்.

வல்லமை மின்னிதழ், வாரம்தோறும் ஒருவருக்கு வல்லமையாளர் விருது வழங்கி வருவது, நீங்கள் அறிந்ததே. அந்த வாரத்தில் தமது ஆற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தி ஒருவருக்கு இந்த விருதினை வழங்கி வருகிறோம். இது நாள் வரையிலும் இதனை ஒரு கௌரவ விருதாகவே வழங்கி வருகிறோம். இந்நிலையில் வையவன் அவர்கள், வல்லமையாளர் விருது பெறுபவருக்குத் தமது நூல்களில் ஒன்றைப் பரிசாக வழங்க முன்வந்துள்ளார். இது, விருது பெறுபவருக்கு ஊக்கமளிக்கும்.

வையவன் அவர்களுக்கு வல்லமையின் சிறப்பு நன்றிகள்.

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    மனிதனாகப் பிறந்த அனைவரும் ஏதோ ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஏக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒன்றே ஒன்றில் மட்டும் ஒன்றுபடும், அது மற்றவரிடமிருந்து பாராட்டுதல், அல்லது பரிசு பெற்றுவிட வேண்டும் என்பதுதான். ஒரு சின்ன விஷயத்துக்கூட ஒரு பாராட்டப்படுதல், புகழப்படுதல் போன்றவற்றை மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கத் தவறுவதில்லை. இப்படி பாராட்டும், பரிசும் மற்றவரிடமிருந்து கிடைத்து விட்டால், அது ஒருவித புத்துணர்ச்சியை அளித்து, நாம் செய்யும் செயலுக்கு மேன் மேலும் ஊக்கத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது எளிதில் கிட்டுவதில்லை. புகழ், பாராட்டு போன்றவற்றை மற்றவரிடமிருந்து பெருவதற்கு இவ்வளவு பாடு பட வேண்டியிருக்கிறதே, ஒரு நாளாவது இதே பாராட்டுதலை மனப்பூர்வமாக நாம் மற்றவருக்கு வழங்கியிருக்கிறோமா?………
    மதிப்பிற்குரிய முதுபெரும் எழுத்தாளர் வையவன் அவர்கள், வல்லமை விருது வாங்கியவர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கி இந்த அரிய செயலைச் செய்து, கெளரவித்து இருக்கிறார்.

    விருதுடன் பரிசும் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் கலந்த நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன் பெருவை பார்த்தசாரதி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க