“டும் டும் டும்” கல்யாணம்

2

விசாலம்

tirumananjeriதிருமணம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்று. முன்பெல்லாம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கவில்லை என்றால் பல பரிகாரங்கள், சிறப்புப் பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால், இப்போது ஆண்கள் அதிகமாகி, பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மங்கையர் மலரில் ஒரு ஆறு பக்கம் “மணமகள் தேவை” என இருக்க, ஒரு பக்கம்தான் “மணமகன் தேவை” என்று வருகிறது. எனக்குத் தெரிந்த ஆண்கள் பலருக்குப் பல சிறப்பு அம்சங்கள் இருந்தும் தகுந்த வரன் கிடைக்காமல் போகிறது. நல்லபடி திருமணம் அமையவும் தடங்கல் இல்லாமல் நடக்கவும் பல திருமணத் தலங்கள், தமிழகத்தில் இருக்கின்றன.

“திருமணஞ்சேரி” என்ற திருத்தலத்தை அறியாதவரில்லை. பெயரிலேயே திருமணம் என்ற சொல் வந்திருக்கிறது. இங்கு இருக்கும் இறைவன் பெயர், “திருக்கல்யாணசுந்தரர்”. தடைப்படும் திருமணம் நடக்க, ஆண்களும் பெண்களும் இந்தத்தலத்திற்கு வந்து மனதாரப் பிரார்த்தித்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து, மாலைச் சார்த்தினால் திருமணம் நடந்துவிடும்.

இந்தக் கோயில், மாயவரம் – குற்றாலம் சாலையில் உள்ளது. ஆண்களுக்குத் திருமணம் நடக்க, தாயாரின் மாலையும் பெண்களுக்கு இறைவனின் மாலையும் பிரசாதமாகத் தரப்படுகிறது. அந்த மாலையைத் திருமணம் நிச்சயம் செய்யும் வரை மிகவும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதேபோல்தான் திருவீழிமிழலையிலும் உத்தமர் கோயிலிலும் திருமணம் நடக்கப் பக்தர்கள் வேண்டி நிற்கின்றனர்

இந்தத் திருமணத் தலங்களில் இருக்கும் விசேஷம் என்னவென்றால், இறைவனும் இறைவியும் ஒரு சேர, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அருள் புரிவார்கள். அவர்களுக்குத் தனித் தனிச் சன்னிதி கிடையாது என்று நான் பார்த்தவரையிலும் நினைக்கத் தோன்றுகிறது. சென்னை மஹாபலிபுரம் போகும் வழியில் இருக்கும் திருவிடந்தை ஸ்ரீ நித்திய கல்யாணப் பெருமாள் கோயிலும் இந்த வகைதான்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரநாதரும் கன்னியாகுமரியில் அருள் பாலிக்கும் கன்னியாகுமரி அம்மனும் திருமண வேண்டுகோளை நிறைவேற்றி அருள் புரிகின்றனர். தவிர, ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் சொன்ன ஸ்ரீ பவானி அம்மன் பூஜையை வீட்டில் ஒரு மண்டலம் செய்ய, கை மேல் பலன் உண்டு.

கேரளத்தில் கொல்லத்தில் இருக்கும் திரு உமாமகேஸ்வர கோயில்,  கேரளத் திருமணஞ்சேரியாகும். இங்கும் பக்தர்களின் கூட்டத்தை எப்போதும் காண முடிகிறது.

திருமணம் வேண்டி நிற்கும் ஆண்களே, பெண்களே, மேலே சொன்ன எதாவது ஒரு கோயிலுக்குப் போய் மாலையை அணிந்துகொள்ளுங்கள்….  அவசியம் என்னை உங்கள் திருமணத்திற்கு அழையுங்கள்.

===============================

படத்திற்கு நன்றி: http://www.tamilvu.org

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““டும் டும் டும்” கல்யாணம்

  1. வல்லமைக்கு படைப்புகள் அனுப்ப எந்த மெயில் முகவரிக்கு அனுப்புவது என்ற தகவல் தெரியவில்லை. தயவு செய்து தெரிய படுத்தவும் நன்றி

    மோகன் குமார்
    snehamohankumar@yahoo.co.in

    http://veeduthirumbal.blogspot.com

  2. படைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தங்கள் ஆக்கங்களை வரவேற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *