செண்பக ஜெகதீசன்

வறுமை வாத்தியாராகி
வாழ்க்கையில்
பல பாடங்களைப்
பயிற்றுவித்துப் பண்படுத்துகிறது..

பட்டினிப் பள்ளியில்
பாடம்கற்றவர்கள் உயர்ந்து
எட்டாப்புகழ் பெற்றமைக்கு
எத்தனையோ சான்றுகள்..

இல்லாமை ஏதும்
சொல்லாமலே
வல்லமை தந்துவிடுகிறது
வாழ்வில் முன்னேற..

நல்குரவு
நல்ல பாதையாகிறது
நாளைய நல்வாழ்விற்கு..

எட்டாதபோது முயற்சிதான்
ஒட்டகச்சிவிங்கியின்
உயரத்துக்குக் காரணமாம்..

வருந்தாதே மனிதனே
வறுமையைக் கண்டு..
வாழ்ந்துபார் உழைத்து,
அதுவே
வரமாகும் நாளை நல்வாழ்விற்கே..!

படத்துக்கு நன்றி

 http://www.soulseeds.com/fb-inspiration/2012/04/seed-of-strength-2/                 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வரமாக…

  1. ஒட்டகச்சிவிங்கியின் உயரத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு நேர்மறை காரணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் கற்பனை வளத்திற்கு ஒரு சலாம்.

  2. நன்றி முகில்-
    அன்பு பாராட்டுரைக்கும்,
    ஆழ்ந்த ரசனைக்கும்…!
             -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *