புறக்கணிப்பு
உன் புறக்கணிப்பு என்பது எனக்கு
புதியதொன்றும் அல்ல..
நீ என் பேச்சைத் புறந்தள்ளும் போதெல்லாம்,
வார்த்தைகள் மௌனக் கூட்டுக்குள் முடங்கி விடும்.
பேசும் போது மீண்டும் அதே வார்த்தைகள்
பரபரப்பின்றி வந்து சேர்வது பழகிப்போன ஒன்றுதான் .
ஆனால் என் அன்பு நினைவுகளை
நீ புறக்கணிக்கும் போதெல்லாம் ஒடிந்து விழும்
என் கவிதையின் முனைகள் மட்டும்,
என் காதல் நினைவுகளைப்போல் பரபரத்து
ஒட்டிக் கொள்ளும் வழி தெரியாது பிரிந்து வீழ்வது
உனக்கு மட்டுமல்ல எனக்கும் புரியாத ஒன்றுதான்!
படத்திற்கு நன்றி
வலி மிக்க உணர்வுகளை மெல்லிய வார்த்தைகளில் வடித்துள்ளீர். வாழ்த்துக்கள்.
மேலும் கவிதைகள் எழுதுவதற்கு வலிமை சேர்க்கும் பாராட்டைத் தந்த திரு முகில் தினகரன் அவர்களுக்கு நன்றி