அக்டோபர் (2012) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்
அன்பு நண்பர்களே,
வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற அக்டோபர் மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும் விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.
அன்புடன்
பவள சங்கரி
இம்மாதம் முப்பத்தியோரு கதைகள். வல்லமை பிராபல்யமாகி வருகிறது. இந்த மாதக் கதைகளில் மணி ராமலிங்கம் அவர்கள் எழுதிய நோ பால் சிறந்த கதையாக எனக்குப்படுகிறது. இதில் என்னைக் கவர்ந்தது நம் இன்றைய வாழ்க்கையின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகிவிட்ட கிரிக்கெட் விளையாட்டும் அதில் செலவாகும் நேரமும் வாழ்க்கை அனுபவமும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்த போதிலும் அது என்னவோ ஒரு விளையாட்டு, அது அவ்வளவு முக்கியமில்லை போல எழுத்தில் அது பிரதிபலிப்பதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் அதற்குரிய அழகுகளோடுதான் இருக்கிறது. குழந்தைப் பருவம், பள்ளி வாழ்க்கை, போலத் தான் விளையாட்டுப் பருவமும். அங்கும் மனித உறவுகள் உண்டு, மனிதனின் பலங்களும் பலவீனங்களும் பங்கு கொள்கின்றன. அது ஒரு கால கட்டம் இருப்பினும் பின்னர் அந்தக் கட்டம் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது கடந்த உறவுகளும் அதன் சந்தோஷங்களும் மனதை பின்னும் ஒரு nostalgia வோடு பாதிக்கின்றன. மணி மிகத் திறமையாக, convincing -ஆக அந்த அனுபவங்களையும் பின்னர் ஒரு ஏக்க உணர்வோடு திரும்பிப் பார்த்தலையும் எழுதியுள்ளார். யாரும் தொடாத அனுபவ தளம். வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆக, அவருடைய நோ பால் தான் எனக்கு இந்த மாதச் சிறந்த கதையாகத் தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வெ.சா.
சென்ற மாத போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் பட்டியல் இதோ:
1. நீறு பூத்த நெருப்புகள்
2. நாணயம்
3. தனியொருவனுக்கு உணவில்லையெனில்!
4. கொள்ளி எறும்பு
5. மாற்றான் தோட்டம்
6.சுழல்
7. தாசரி
8. ஒரு முடிவின் மறு பக்கம்
9. அம்மணி
10. நாக்பூருக்குப் போ!
11. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
12. நோ-பால் – No Ball
13. கூவமும் கங்கைதான்
14. ஆண்மீக இச்சை..! (இது எழுத்துப் பிழை அல்ல….மனத்துப் பிழை…)
15. பெட்டைகள்
16. அம்மாவுக்குக் கடிதம்!
17. சராசரிகள்
18. நாத்திகம்
19. ஈரத்துணி
20. பேச்சு
21. வந்து சொல்றேம்மா…
22. இது என் சொத்து
23. கனவுச் சாவி
25. கோபம்.
26. மாற்று(ம்) திறனாளி
27. சொர்க்க வாசல்
28. மாத்தி யோசி
30. நீ என்றுமே என் மகன்தான்
31.ரகசியம்
அக்டோபர் மாதப் போட்டியில பரிசை வென்றுள்ள திரு மணி ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து முயற்சி செய்ய வாழ்த்துக்கள்.
CONGRATULATIONS MANI. ME, PADMANAB SRIDHAR, HIS WIFE AND HIS MOTHER ALL ARE REJOICED. A deserving Award.
வாழ்த்துக்கள், திரு.மணி ராமலிங்கம்.
திரு மணி ராமலிங்கத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
வாழ்த்துகள் மணி ராமலிங்கம்
சுவாரசியமான எழுத்து நடையைக் கொண்டிருக்கும் கே.ஆர். மணி அவர்களுக்கு வாழ்த்துகள்.
Fatastic work, Mani. I am a great fan of your short stories and articles. A well desrved award. Look forward to more such work from you. Hearty Congratulations!!!