திவாகர்

ஹல்லோ.. எங்க இருக்கீங்க..

டிரைவிங் ல இருக்கேன்

சரி சரி, வண்டியை கொஞ்சம்  ஓரமா நிறுத்திட்டு எனக்கு போன் பண்ணுங்க.. பார்த்து.. போன  தடவை மாதிரி நோ பார்க்கிங்’ல நிறுத்திட்டு போலீஸ்காரன்கிட்டே திட்டும் வாங்கிண்டு, காசையும் அழுதுட்டு வந்தீங்களே.. அது மாதிரி இல்லாம ஓரமா பார்த்து நிறுத்தி போன் போடுங்க..

சரி, அதையெல்லாம்  இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கே.. முதல்ல போனை வை.. நான் பேசறேன்..
…………………………………………………………….

ஹெல்லோ.. சொல்லு

ஒழுங்கா பார்க் பண்ணிங்களா.,. உங்களுக்கென்னு யாராவது  போலீஸ்காரன் வந்து மாட்டுவான்.. தண்டம் அழுவீங்க..

இதோ பார்.. நம்ம ரோட்’ல பார்க்கிங் கிடைக்கறது கஷ்டம்.. எப்பவோ ஒரே ஒரு தடவை அப்படி போலீஸ்கிட்டே மாட்டிட்டேனு இப்படி சொல்லி சொல்லிக் காட்டாதே..

யார் சொல்லிக் காட்டறா.. ஒரு தடவை மாட்டினது வாஸ்தவம்தானே.. ஜாக்கிரதை’ன்னு சொன்னேன்.. இப்போ ஷாப்பிங் மால்’ல இருக்கேன்.. அதனாலதான் போன் போட்டேன்..ஆமா.. உங்க சொக்கா சைஸ் என்ன?

ஹாஃப் ஆ.. ஃபுல்லா.. எதைக்  கேக்கிறே?

நேத்து ராத்திரி ஏதாச்சும்  பார்ட்டியா.. ஐயோ.. உங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகறதோ.. சொக்காய்ல ஹாஃப்க்கும்  ஃபுல்’க்கும் ஒரே அளவுதானே..

ஆமா இல்லே.. ஹி ஹி.. நாற்பதுன்னு  வெச்சுக்கோயேன்..

என்னத்தை நான் வெச்சுக்கறது.. சரியா சொல்லுங்க.. போன தடவை நாற்பத்திரண்டு எடுத்ததா எனக்கு ஞாபகம்..

அது போன தடவை.. இப்பதான் எக்ஸெர்ஸைஸ் பாடி ஆக்கிட்டேன்..

ஆஹா.. கேக்கறதுக்கே சுகமா  இருக்கு..

கிண்டலா.. கொஞ்ச நாள் கழிச்சுப் பாரு.. இது உன்  புருஷன்தானா ந்னு மலைச்சு  நிப்பே.. சிக்ஸ் பேக் கூட  ட்ரை பண்றேன்.. கிட்டதட்ட  ஷாருக் மாதிரின்னு வெச்சுக்கோயேன்..

ஐய்யோ போதுமே.. அவங்களுக்கு  அதெல்லாம் காசு.. உங்களுக்கென்ன  வந்துது.. அப்படி ஏதாவது பண்ணி  உடம்பை கெடுத்துக்காம இருந்தா  போதும்..

உனக்குப் பொறாமை..

ஐய்யோ அழகே.. எனக்கு பொறாமைன்னா ஊரே சிரிக்கும்.. போன தடவை நீங்களும் நானும் உங்க ஆபீஸ் ஃபங்க்‌ஷன்  போகறச்சே என்னைப் பார்த்து யார் இவங்க.. உங்க பொண்ணா’ன்னு கேட்டாங்களே..  நீங்க ஷாக் ஆகி நின்னீங்களே.. மறந்து போயிட்டிங்களா.. ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சு.. அதனாலதான் பாடி பில்டப் கொடுக்கறிங்களா..

ஐய்யோ.. உனக்கு எப்படி இவ்வளோ ஞாபக சக்தி.. நான் இதெல்லாம்  அப்பப்போ மறந்துபோகறேன்  தெரியுமா..

போதும்.. போதும்.. என்ன கலர்ல வேணும் உங்களுக்கு..

கலர்ரா

ஐய்யோ.. நான் சொக்காயைச் சொன்னேன்..

ஏதானும் லைட்கலர்’ல எடு..

எதுக்கு லைட் கலர்.. உங்க பீரோல பாருங்க அத்தனையும் லைட் கலர்தான்..

லைட்கலர் எடுக்காதே’ன்னு சொல்ல வந்தேன்.. நான் லைட் கலர்ன்னு சொன்னா நீ எப்படியும் எடுக்க மாட்டே..  டார்க்கா பாரு.. சரிங்க..இதோ வண்டியை எடுத்துடறேங்க..

ஐய்யையோ யார்கிட்ட  வண்டியை எடுத்துடறேன்னு சொல்றிங்க..

அட.. இங்கே கார் பக்கத்துல..

ஐய்யோ.. போலீஸ்காரனா.. தண்ட இழவுதான்.. போனாப் போகுதுன்னு காசு வேணும்னா கொடுங்க.. கன்னா  பின்னான்னு திட்டு வாங்காதீங்க..

ஐய்யோ.. பக்கத்துல  பொட்டிக்கடைக்காரர் – கடை  முன்னாடி வண்டியை நிப்பாட்டாதீங்க’ன்னு சொல்றார்.. நீ சொல்லு..

அவங்க எதுக்கு ரோடு ஃபிளாட்ஃபார்ம் மேல கடையை  வெக்கணும்.. நீங்க அவனுக்கொண்ணும் பதில் சொல்ல வேணாம்..

சரி, வுடு, நான் பாத்துக்கறேன்..

சரி, சரி, உங்களுக்கு யாரைக் கண்டாலும் பயம்.. அதனாலதான்  சொல்லறேன்..

எதுக்கு இப்போ இதெல்லாம்  நடு ஷாப்பிங் மால்’ல கத்திச் சொல்லறே.. எல்லாரும் கேக்கப் போறங்க.. வுட்டுடு..

டார்க் கலர் டிசைன் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா உங்களுக்கு சூட் ஆகுமான்னு  தெரியலே..

மறுபடியும் உனக்குப் பொறாமை.. எனக்கு டார்க்’தான் பிடிக்கும்.. எந்த டிசைன் வேணும்னாலும் எடு.. நான் போட்டுக்கறேன்..

ஆனா எல்லாம் கட்டம் போட்ட சட்டைங்க.. உங்களுக்கு சூட் ஆகாதுங்க..

ஆஹா.. கட்டம் போட்ட  சட்டையா.. போனவாரம் டி.வி ல  பார்த்த சுமதி என் சுந்தரி  பட்த்துல சிவாஜி போட்டுண்டு சூபரா பாட்டு பாடுவாரு.. எடு  எடு..

ஐய்யோ வேணாமே.. அது  சிவாஜிக்கு வேணும்னா அழகா இருக்கும்.. ஆனாலும் அது  பழைய டிசைன்.. சிவாஜியே போயிட்டாரு.. சரி வுடுங்க..

இப்ப என்னதான் எடுக்கப்போறே.. வந்ததுதான் வந்தே..உனக்கும் டிரெஸ் வேணும்னா அப்படியே செலக்ட் பண்ணிக்கோ..

ஐய்ய,, நான் காலைலையே வந்து நிதானமா பார்த்துப் பார்த்து சுடிதார்லாம் நல்ல டிசைன்’ல இருக்குன்னு முதல்லயே வாங்கிட்டேன்

ஓஹோ..

ஆமாம்.. அப்படியே உங்களுக்கும் ஒரு ஷர்ட் வாங்கலாமேன்னுதான்னு  போன் போட்டேன்..

சரி, வாங்கிடு.. டார்க் கலர்..

அட, பேசிண்டே வெளியே வந்துட்டேங்க.. அடுத்த முறை உங்களோட வந்து எனக்குன்னு வாங்கறச்சே உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டா போச்சு..

சார்.. இதோ எடுத்துடறேன் சார்..

யார்கிட்டே சொல்லறீங்க.. மறுபடியும் அந்த கடைக்காரனா..

இல்லே.. போலீஸ்..

**********************************************************************

 

பதிவாசிரியரைப் பற்றி

19 thoughts on “சொக்காய்

  1. :-))))))
    பல விஷயங்கள் பொருந்துவதால் அனுபவிக்க முடியுது!

  2. தமிங்கிலம் தங்கிலிசு மலிந்த மணிப்பிரவாள நடையில் அமைந்த நிகழ்ச்சி ஓடை. மழையாய்ப் பொழிந்தாலும் புயலாய் வீசினாலும் வெள்ளமாய்ப் பெருகினாலும் தானான தன்மை கெடாதது நிலம். ஆழிப் பேரலைகளாலும் அழிக்க வொண்ணாதவள் நிலம் என்னும் நல்லாள். மணிப்பிரவாளங்களைத் தாண்டித் தமிழாகத் தொடர்பவள் நம் தாய். 

  3. அன்பு சகோதரர் திவாகர் “சொக்காய் ‘ மிக ஜோக்காய் அமைந்து என்னைச்சொக்க வைத்தது . எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது தினமும் போனில் பேசும்
    சம்பாஷனையே நகைச்சுவை படைப்பாய் அமைந்த்து சூப்பர்
    வாழ்த்துகள்

  4. சொக்காய் எடுக்க பொண்டாட்டி கோவிச்சிக்கறா,

    காரை எடுக்க
    போலீஸ்காரன் கோவிச்சுக்கறான். ஹும் ரெண்டுமே காவல் தெய்வங்கள், ஒண்ணும் செய்ய முடியாது.

    ஆமா ஃபுல்லா ஹாஃபா?

    அன்புடன்
    தமிழ்த்டேனீ

  5. சொக்காய் வாங்க இரண்டு பேருமே போயிருக்கலாமோ:)
    ஆனால் அப்படிப் போயிருந்தால் இந்த சம்பாஷணை கிடைத்திருக்காது:)
    வெகு சுவை. நகை சுவை.

  6. halo,h..alo!!..உங்களத்தான் சார் நான் தேடிக்கிட்டு இருந்தேன்,நல்ல வேலை ,உங்க போட்டவ வல்லமை யல் பார்தேன ஏன் சார்?இது உங்களுக்கே நல்லா இருக்கா?ஹோட்டல்லே,சாப்பிட்டு விட்டு உங்க போனுக்கு பதில என் போன எடுத்துகிட்டு போயிட்டிங்க ,ஏன் சார் ,தெரியாமதான் கேட்கிறேன் ,காபி குடிச்சதுக்கே ,இப்படீனா ,,,நீங்க எல்லாம் எப்போ தண்ணீ அடிச்சி பொண்டாட்டிகிட்ட அடிவாங்கி ,…அட போங்க சார் அது அனுபவச்சவனுக்குத்தான் தெரியும் ,….அது சரி அந்த போன்ல ஒன்னும் பேசி தொலையலையே ,thanks…..

  7. //ஐய்யோ அழகே.. எனக்கு பொறாமைன்னா ஊரே சிரிக்கும்.. போன தடவை நீங்களும் நானும் உங்க ஆபீஸ் ஃபங்க்‌ஷன் போகறச்சே என்னைப் பார்த்து யார் இவங்க.. உங்க பொண்ணா’ன்னு கேட்டாங்களே.. நீங்க ஷாக் ஆகி நின்னீங்களே.. மறந்து போயிட்டிங்களா.. ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சு.. அதனாலதான் பாடி பில்டப் கொடுக்கறிங்களா..

    ஐய்யோ.. உனக்கு எப்படி இவ்வளோ ஞாபக சக்தி.. நான் இதெல்லாம் அப்பப்போ மறந்துபோகறேன் தெரியுமா..//

    இந்த‌ இட‌த்தில் ம‌ட்டும், ‘அதான் ஃஅதெல்லாம் போன‌ த‌ட‌வைன்னு சொன்னேன்ல‌? இப்ப‌ வ‌ந்து பாரு. அம்மா யாரு உங்க‌ அக்காவான்னு கேப்பாங்க‌ன்னு’ சொல்லி கொஞ்ச‌ம் எகிறியிருக்க‌லாம்! அவ‌ங்க‌ளுக்கும் பி.பி. எகிறியிருக்கும்!

    சொன்ன‌ பேச்சைக் கேட்டு இதைத் தொட‌ராக‌த் த‌ர‌ முன்வ‌ந்த‌திலேயே ந‌ல்லாத் தெரியுதே… ‘நீங்க‌ சொல்பேச்சு கேக்க‌ற‌வ‌ர்னு!’!!!:))

    அருமை! இன்னும்பேசுங்க! ‌

  8. வீட்டுச் சண்டையை வெளியே கொண்டுவரியா? பொண்டாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்.(அனுபவம் தான்) பாவம் சசி. ஆனாலும் அணியாயம் இது. நான் எங்க பேசனுமோ அங்க பேசிககறேன்.

  9. //ஐய்யோ அழகே.. எனக்கு பொறாமைன்னா ஊரே சிரிக்கும்.. போன தடவை நீங்களும் நானும் உங்க ஆபீஸ் ஃபங்க்‌ஷன்  போகறச்சே என்னைப் பார்த்து யார் இவங்க.. உங்க பொண்ணா’ன்னு கேட்டாங்களே..  நீங்க ஷாக் ஆகி நின்னீங்களே.. மறந்து போயிட்டிங்களா.. ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சு.. அதனாலதான் பாடி பில்டப் கொடுக்கறிங்களா..//

    ஹாஹா, நல்லா ரசிச்சுச் சிரிச்சேன். அது சரி, மனைவி வாங்கிட்டு வர சொக்காயைத் தான் போட்டுப்பாங்களா என்ன? நிஜம்ம்ம்ம்ம்மாவா? ??????????????????????

  10. ரசித்துப் படித்த அத்த்னை பேருக்கும் நன்றி.. சீரியஸாக வாழ்க்கை போகின்ற காலத்தில் ’ஜஸ்ட் ரிலாக்ஸ்’ ஒன்றே இந்த மொபைல் டாக் ஷோ’வின் ’சீரிய லட்சியம்’ என்பதே தவிர வேறொன்றும் யாமறியேன் பராபரமே!!

    அன்புடன்
    திவாகர்

  11. ‘ நாடோடி’ யும் அவர் கற்பனை மனைவி சரஸுவும் இப்படித்தான் பேசிக்கொண்டதாக ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதுவார் அந்த மறைந்த நகைச்சுவை எழுத்தாளர். திவாகர் ஸார், you are indeed a versatile writer and can handle serious historical episodes and modern comic situations effortlessly like a ‘savyasaachi’ (ajrunan). வளர்க உங்கள் பேனாவின் திறண்!
    ஸம்பத்

  12. ஸம்பத் சாரோட ஆசீர்வாதம்தானே எல்லாம்..

    பிரியா: ‘அவர்’கிட்டே இதைக் கேக்கறேன் :(..

  13. madam seekkirama vizag la settle aahanum . illenna ippadi polambiye kaalam poyirum. paravallai, vaanga. namma poi edukkalam.. cmr la offer pottrukkan.

  14. jeeragam kidaikkalai, sokkaayum kidaikkalai,
    enna sir vazhkai?
    Aduththavatti enna kidakama pokutho.
    lot of interesting. please continue.
                          – Dhevan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *