நவம்பர் (2012) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

 

 

வெங்கட் சாமிநாதன்

 

இம்மாத கதைகள் அதிக மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல எழுத்தின் பெருக்கத்தை தந்துள்ளன.

 

வந்துள்ள 24 கதைகளில் நான்கு கதைகள் ஒன்றோடொன்று போட்டியிடும் வகையில் புதிய விஷயத்தைச் சொல்வனவாகவும் அதைத் திறமையுடன் ஒரு தேர்ச்சியுடன் கையாள்வதாகவும் உள்ளன.

1. இருவேறு பார்வைகள் : கே. எஸ். சுதாகரன். 2. கல் – மணி ராமலிங்கம், 3. நந்தியாவட்டை – பழமை பேசி  4. கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும்.அரவிந்த் சச்சிதானந்தம்.

 

இக்கதைகளில் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதியுள்ள கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிஸமும் கதையை இம்மாத வல்லமை பரிசுக்குரியதாகச் சொல்ல விரும்புகிறேன்.

 

மிகச் சிக்கலான ஒரு ஆளுமை தன்  அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சின்ன சின்ன கஷ்டங்கள், மனப் பிரள்வுகள், தன் இச்சைக்கும் மற்றோர் எதிர்பார்ப்புக்கு வாழும் முரண்களுமான நிரந்தர மனப் போராட்டம். ஆணாகப் பிறந்தும் பெண்மை சார்ந்த விருபபங்கள் மறைத்தே மறைந்தே தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள் தன் திருமணத்திற்குப் பின்னும் தொடர்கிறது.  இதன் உண்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்லத் சம்பவங்கள், விருப்பங்கள் நம்பக வட்டத்துக்கு வெளியே போவதில்லை. நன்றாக, திறமையுடன் எழுதப்பட்டுள்ளது.

மற்ற மூவருடைய கதைகளை நான் ஒதுக்க விரும்பவில்லை. இவர்களும் புதிய கதைக் களன்களைக் கொண்டு சேர்த்துள்ளார்கள். அதைத் திறமையுடனும் கையாண்டிருக்கிறார்கள். ஆனால்,  அவர்கள்  ஒரு முறை பரிசு பெற்று விட்டதால், . கடைசியான ஆண்டுத் தேர்வுக்கு அவர்களின் இம்மாதக் கதைகளும் சேர்க்கப்படட்டும். ஒரு முறை பரிசு பெற்ற காரணத்தால் இவை ஒதுக்கப்பட வேண்டாம்.  இம்முறை புதியவருக்கு, திறமையுடன் எழுதப்பட்ட ஒரு புதிய கதைக்கு தரப்படட்டும்

அரவிந்த சச்சிதானந்தத்துக்கு என் வாழ்த்துக்கள். . .

 

சிறுகதைப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்:

 

1. கணினி, ஜகம் நீ

2. 3ஒரு வினாடி உயிர்

3.சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

4. அம்பாரி

5. வயிறாற நன்றி

6. ரசிகன்

7. தனக்கொரு நியாயம்

8. திருத்தப்பட்ட தீர்ப்புகள்

9. இசைக்க மறந்த வீணை

10. கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

11. வெளி

12. எங்க வீட்டு சர்வெண்ட்

13. யாருக்காக அழுதாள்?

14. பாசம்

15. தங்க விமானங்கள்

16. காதல் கல்யாணம்

17. நன்மையே தீமையாய்!

18. நந்தியாவட்டை

19. ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!

20. கல்

21. போதுமடா சாமி

22.குப்பை

23. இருவேறு பார்வைகள்

24. வைரக்கீரிடம்

 

பரிசு பெற்ற அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்.  கௌரவப் பரிசு பெறும்  திரு கே.எஸ். சுதாகர், திரு மணி ராமலிங்கம் மற்றும் திரு பழமைபேசி ஆகியோருக்கும் பாராட்டுகள். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

ஆசிரியர்

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நவம்பர் (2012) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

  1. இலக்கிய ஆசான் ஒருவரிடம் பாராட்டுப் பெறுவதில் உளம் மகிழ்ந்து பொங்குகிறது. என் வாழ்நாள்ப் பேறாகவே கருதுகிறேன். அரவிந்த் சச்சிதானந்தம்,கே. எஸ். சுதாகரன், மணி ராமலிங்கம் ஆகியோருக்கும் மனம் நிறைந்த வாழ்த்தும் வணக்கமும்!!

  2. நால்வருக்கும் எனது மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  3. பரிசு பெற்ற அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களூக்கு என் பாராட்டுக்கள்.

  4. புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும், வல்லமை குழுவினருக்கும், திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றிகள்..மற்ற படைப்பாளிகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள்..

    நன்றிகள் பல..
    அரவிந்த்குமார் சச்சிதானந்தம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *