சென்னை விமான நிலையத்தில் 273 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அண்மையில் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் தாய்லாந்துக்கு அஞ்சல் பார்சல்களில் அனுப்பி வைக்கப்பட இருந்த 56 கிலோ எடை கொண்ட செம்மரக் கட்டைகளை விமான நிலைய சுங்க ஆணையர் அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒன்பது பார்சல்களில் இந்தக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வகச் சோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதேபோல, கொழும்பு வழியாக சிங்கப்பூரிலிருந்து வந்த ஃபரூக் கலந்தர் சாதிக் என்ற பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது குடலில் மறைத்துக் கொண்டு வந்த 213 கிராம் எடையுள்ள தங்க நகை மற்றும் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 60 கிராம் எடையுள்ள தங்க நகை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5.56 லட்சமாகும். சுங்கத் துறையினருக்கு தெரிவிக்காமல் இந்தக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட அவரை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தனர்.
அத்துடன் சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்காக் ஆகிய நகரங்களிலிருந்து உரிய உரிமம் இல்லாமல் இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள அலங்கார மீன்களையும் கடந்த மாதம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
======================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.schwartzarch.com