கணபதி அருள்…
கரமது ஐந்தாய் உடையவனை
காணும் ஆனை முகத்தவனை,
சிரமதில் மணிமுடி தரித்தவனை
சீக்கிரம் வந்தே அருள்பவனை,
புரமது எரித்தான் திருமகனை
பூமகள் கணவன் மருமகனை,
கரமது கூப்பி வணங்கிடுவாய்
கணபதி அருளினைக் கண்டிடுவாய்…!
கரமதாய்த் துதிக்கை உடையவனை
கடவுளர் யாவரின் முதலவனை,
வரம்பல தந்திடும் வல்லவனை
வகைவகை வடிவம் கொண்டவனை,
அரணென நம்மைக் காப்பவனை
அருகம் புல்லை அணிந்தவனை,
உருவினில் பெரிய விநாயகனை
உளத்தினில் கொண்டால் உயர்வுதானே…!
படத்துக்கு நன்றி
http://www.bhmpics.com/view-lord_ganesha_awesome_art-1920×1080.html
அழகான சந்தங்களில் அமைந்து செவிக்குணவாக இனிமை நிறைந்த கணபதி அருள் அருமை.
’கணபதி அருளை’ அழகிய பாடலாய்த் தந்த வித்தகக் கவிஞர் செண்பக ஜெகதீசன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
அருமை!
ஆனைமுகன் அனைவருக்கும் அருளட்டும்.
‘கணபதி அருள்’ கவிதையைப் படித்து
கருத்துரை வழங்கிய
திருவாளர்கள் சச்சிதானந்தம், மேகலா இராமமூர்த்தி,
ஆலாசியம் ஆகியோருக்கு
மிக்க நன்றி…!