நான் அறிந்த சிலம்பு – 90!…
மலர் சபா
“புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை”
கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்*
அப்போது அங்கே ஓடி வந்த
ஒரு பணிப்பெண் கூறினள்:
“நங்கையே!
பெருமையுடைய அரசன் போன்ற ஒருவர்
நம் வாயிலிடத்தே வந்து கொண்டிருக்கிறார்;
அவர் நம் கோவலன் தான்…”
விரைந்து வந்த கோவலனும்
கண்ணகியின் பெருமைவாய்ந்த
பள்ளியறையில் நுழைந்தான்.
தன் காதலியின் வருத்தமுற்ற முகமும்
வாட்டமுற்ற மேனியும் கண்டான்.
“வஞ்சமுடைய கொள்கையுடன்
பொய்மை பேசுபவளோடு
கூடி உறவாடியதால்
நம் குலத்தில் உள்ளோர் தேடித்தந்த
மலை போன்ற பெரிய
செல்வக்குவியலை எல்லாம் இழந்தேன்.
வறுமையுடையவன் ஆகிவிட்டேன்.
இச்செயல் யாவும் என்னை
நாண வைக்கிறதே”
எனக் கூறி வருந்தினான்.
*கண்ணகியின் விடை*
(மாதவிக்குக் கொடுக்கப் பொருள் *
*ஏதும் இல்லாததால்
வருந்துகிறான் கோவலன் என்றெண்ணிய)*
கண்ணகி,
தன் அழகிய ஒளி பொருந்திய முகத்தில்
புன்முறுவல் காட்டி,
“இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன;
அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்”
எனக் கூறினாள்.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64 – 73
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
படத்துக்கு நன்றி:
Kannagi’s Last Resort, Siruvachur
கண்ணகியின் இந்த வெள்ளை மனதுதான் கோவலனை கறுப்புச் சிந்தனை கொள்ள வைத்ததோ? மிக எளிமையான முறையில் சிலப்பதிகாரத்தை விளக்கி வருகிறீர்கள். நன்றி!