தெரியும் பார்…

செண்பக ஜெகதீசன்

 

பிடிக்கவில்லை என்றாலும்

இதழ்களில்

புன்னகையை ஒட்டிக்கொள்..

 

வேண்டாம் என்றாலும்

வாயில் கொஞ்சம்

வழிவிடு இனிய சொல்லுக்கு..

 

தேவையில்லை என்றாலும்

தெரிந்தோ தெரியாமலோ

பிறர்க்குக்

கொஞ்சம் உதவிப் பழகு..

 

பலனேயில்லை யெனிலும்

பலர்க்கு

நலனே செய்துபார்..

 

தேவையே இல்லையெனிலும்

தெரியும் பார்

உன்னைச் சுற்றி ஒளிவட்டம்…!

 

Share

Comments

2 responses to “தெரியும் பார்…”

  1. தனுசு

    சபாஷ். நல்லதொரு கவிதை.

    தேவையே இல்லையெனினும்
    கூடும்
    உன்னை சுற்றி ஒரு கூட்டம்.

  2. -செண்பக ஜெகதீசன்…

    திரு. தனுசு அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *