ஒரு தாயின் உபதேசம்
{புதிதாக வேலையில் சேரும் பெண்னிற்கு தாயின் பரிவான உபதேசம்},
“அடியே சரோஜா நீ ஒரு பெண்
அதை எப்போதும் உணர்ந்து நட,
அழகான பெண்,அதுதான் வினை,
அழகே ஒரு ஆபத்து நம் போன்ற ஏழைக்கு
பேப்பரைப்பார்க்க எங்கும் ரேப் செய்தி,
பாவம் சின்ன குழந்தைகளும் அதில் கைதி
நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்,
நீ வீட்டு வாசலைத்தாண்ட,
உன்னை மொய்க்கும் கண்கள் உடன் வரும் ,
உன்னைத்தொடரும் ஒரு சோம்பேறிக் கூட்டம்,
இரட்டை அர்த்தங்களுடன் பாடல் பிறக்கும்
இடர்கொடுத்தபடி விசிலும் அடிக்கும் ,
மனத்திடத்துடன் மேலே நட ,
மானம் பெரிசாக நினைத்து நட.
அங்கு தற்காப்புக்கலை உதவட்டம்
அஞ்சா நெஞ்சம் வளரட்டும் ,
மகளிர் தினம் ஒரு சிறந்த தினம் ,
மனம் பெருமை கொள்ளும் தினம் ,
இன்றைய தினத்தில் உன் தாயை நினைப்பாய்.
இனிய உபதேசங்களை மனதில் வாங்கி நடப்பாய்
பெண் சக்திக்கு தலை வணங்குவாய்
பெற்ற தாய்க்கு பெருமை சேர்ப்பாய் ” ,