உன்னைத்தான் கேட்க வேண்டும்
புவன் கணேஷ்
அரை நிமிடத்திற்கு ஒரு முறை
ஆயிரம் வாட் மின்னலாய், உன் முகம்
தோன்றி மறைகின்றது என் மனத்தில்.
கொல்லும் குளிரிலும் கொட்டும் பனியிலும்
உன்னைப் பற்றிய நினைவுகள்
என்னைக் கதகதப்புடன் வைக்கின்றன!
தூய காதலை உன் மீது கொண்டிருந்தும்
உன்னை நான் இழந்தது எதைக் காட்டுகிறது?
உருளும் உலகத்தில் உறவுகள் நிலையல்ல
என்ற தத்துவத்தினையா? – புரியவில்லை!
உன்னைத்தான் கேட்க வேண்டும்!
••••• ••••• ••••• ••••• •••••
awesome..,
fantastic….