சலனத்தைச் சகித்துக்கொள்!

-தாரமங்கலம் வளவன்

வாழ்கையின் வசதிகள் அல்ல,
அதன் அவலங்களே மனிதனை
உருவாக்குகின்றன!

வாழ்க்கையின் அமைதி அல்ல,
அதன் சலனமே
வாழ்க்கைப் படகை ஓட்டுகிறது!

சலனமற்ற வாழ்க்கை
ஒரு எதிர்பார்ப்புதான்…
நிஜத்தில்
சலனமே வாழ்க்கை
என்றாகும் போது
சலனத்தைச்
சகித்துக் கொள்!

1 thought on “சலனத்தைச் சகித்துக்கொள்!

 1. நறுக்குத் தெரித்தாற்போல் நான்கே வரிகளில் நீங்கள் சொல்லிய விஷயம்..
  ஒட்டுமொத்த வாழ்க்கையை தனக்குள் கொட்டிவைத்திருக்கிறதே..
  தாரமங்கலம் வளவன் என்று அறியப்படும் தாங்கள்..  தருக..  இதுபோல் 
  கவிதைகள் இன்னும் பல நூறு என்றே வாழ்த்துகிறேன்…

  காவிரிமைந்தன் 
  http://www.thamizhnadhi.com

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க