அந்தக் கட்டைவிரல்!
துரை.ந.உ
குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க்
குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது
கட்டைவிரல் ஒன்று ……..
கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை
நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறார்
விரலை வெட்டிக் கொடுத்தவர்…
தானே கற்றறிந்த மாணவனின் கலையை
வேரறுத்த களிப்பில் மிதக்கிறார்
விரலைக் கேட்டுப் பெற்றவர்…
குருதட்சணை கொடுப்பதற்கென்று…
அந்தத் துரோணரின் தலைக்குக்
குறிவைத்துக் காத்திருக்கிறேன்…..
ஏகலைவனை குருவாகக் கொண்டு
வித்தை பயின்று கொண்டிருக்கும்
நான்……..!
பாய்ண்ட் மேட், துரை. ஆனால், ஏகலைவன் என்ற குரு சம்மதித்து இருக்கமாட்டார்!