மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

Elizabeth Browing

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !

அப்படி ஆகி விடுமா அது ?
நானிங்கு செத்துக் கிடந்தால்,
உயிர் இழப்பாகுமா உனக்கு
என்னுயிர் போய் விடுவதில் ?
புதைக் குழியின் ஈரம் என்னுடைய
சிரத்தைச் சுற்றி இறங்குவதால்,
பரிதி வெளிச்சமும்
குளிர்ச்சியாய்ப் போகுமா உனக்கு ?

என்னினிய நேசனே! நான்
உன்னத மடைந்தேன் உன்மடல் படித்து,
உனக்குரியவள் நான்,
உனக்கு அப்படியோர் பெருமையே !

உன் ஒயினை ஊற்றி
உனக்கே நான் கொடுக்கவா
என் நடுங்கும் கரங்களில் ?

மரணக் கனவுகளுக்குப் பதிலாய்
மறுபடி என் ஆத்மா
வாழ்வின் கீழ்ப்படிகளில் ஏறும் !
நோக்கிடு என்னை, மூச்செடு என் மேல்,
நேசிப்பாய் என்னை, அன்பனே !
அறிவுச்சுடர் மாதர்
அவற்றை
விந்தையாய்க் கருத மாட்டார்,
காதலுக் கிழப்பேன் எனது
நில புலங்களை !
பட்டப் படிப்பை !
உனக்காக நான் விட்டு விடுவேன்
எனது மரண எதிர்பார்ப்பை !
மாற்றிக் கொள்வேன்
சுவையான
சொர்க்கபுரிக் காட்சிக்குப் பதிலாய்
உன்னோடு வாழும்
மண்ணுலகுக்கு !

********************

Poem -23

Sonnets from the Portuguese
By: Elizabeth Browning

Is it indeed so? If I lay here dead,
Wouldst thou miss any life in losing mine?
And would the sun for thee more coldly shine
Because of grave-damps falling round my head?
I marvelled, my Beloved, when I read
Thy thought so in the letter. I am thine–
But . . . so much to thee? Can I pour thy wine
While my hands tremble? Then my soul, instead
Of dreams of death, resumes life’s lower range.
Then, love me, Love! Look on me–breathe on me!
As brighter ladies do not count it strange,
For love, to give up acres and degree,
I yield the grave for thy sake, and exchange
My near sweet view of Heaven, for earth with thee!

**********

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.