இலக்கியம்கவிதைகள்

மனநிலை தெளிய வேண்டும் !

-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

 உரசல்கள் ஒழிய வேண்டும்
 விரிசல்கள் விலக வேண்டும்
 தெருதனில் தீய தெல்லாம்
 சிதறியே ஓட வேண்டும்!

மொழியலை ஓய வேண்டும்
முரணிலை ஒழிய வேண்டும்
மருணிலை நீங்க வேண்டும்
மனநிலை தெளிய வேண்டும்!

அழிவுகள் அகல வேண்டும்
அனைவரும் இணைய வேண்டும்
தெளிவுகள் பிறக்க வேண்டும்
சிறப்பெலாம் சேர வேண்டும்!

சமயங்கள் யாவும் சேர்ந்து
சமரசம் பேண வேண்டும்
இமயமாய் உள்ள சிக்கல்
இறந்துமே போக வேண்டும்!

பெருமைகள் பேசி நிற்போர்
பிதற்றலை விடவே வேண்டும்
கருவதில் நல்ல எண்ணம்
பெருகியே நிற்க வேண்டும்!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  அன்புள்ள ஜெயராமசர்மா அவர்களுக்கு..

  காவிரிமைந்தனின் வணக்கம்!
  மனநிலை தெளிய வேண்டும் ! என்னும் தலைப்பில் தங்கள் கவிதை.. வேண்டும் என்கிற வேண்டுதல் தொடக்கம் முதலாய் தொடர்ந்திட.. அதிலே சந்தம் அமைந்திட.. கவிதைப் பயணம் வளர்ந்திட.. உலகம் முழுமைக்கும் எவையெவை வேண்டும் என்கிற எண்ணங்கள் எல்லாம் உங்கள் இதயத்தில் அலைமோதிட.. எவையெல்லாம் விலக வேண்டும்.. அல்லவை நீங்க வேண்டும்.. என்கிற ஆவலில் விளைந்த கவிதை.. மண் பயனுற வேண்டும் என்கிற மாகவிஞர் வரிசையிலே வருகிறது!!
  பாராட்டுகள்!!
  அன்புடன்
  காவிரிமைந்தன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க