பவள சங்கரி

 

அன்பு நண்பர்களே,

என் பாடல் உயிர் பெற்றிருப்பதைக் கேளுங்கள்… அன்பு நண்பர் திரு ஆர். எஸ். மணி (கனடா) அவர்கள் இசையும், குரலும் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார்.. (GAZAL)

 

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறைந்தாய் இத்தனை நாளாய்

கல்லை உருக்கிய கவிமழையே
கனவில் நிறைந்த கற்கண்டே
உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

பனியில் கதிரொளி வீழ்ந்தால் நீராகும்
விதியின் புத்தொளி வீழ்ந்தால் சுகமாகும்

வலியைக் கடந்தால் சுகம் இருக்கும்
மழையில் நனைந்தால் குளிரெடுக்கும்

கானம் இசைத்தால் உள்ளம் திறக்கும்
உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்

உயிரும் உணர்வும் உலராமல் இருந்தால்
மலரும் மணமாய் பரவசமாய் இருக்கும்

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

குருவிகளிரண்டும் மூக்கால் உரசுகையில்
குழலோசையாய் அது இசைத்திடுமோ
பனியும் காற்றும் உரசுகையில்
மெல்லிய கீதம் இசைத்திடுமோ

மலையும் நதியும் உரசுகையில்
எந்த மொழியில் குலவிடுமோ
நினைவெல்லாம் பார்வையானால்
மொழியெலாம் ஊமை ஆகிடுமோ

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

என்னை எழுப்பிய வெண்பனியே
ஏன் மறந்தாய் இவ்வளவு நாளாய்
என்னை உருக்கிய கவிமழையே
எங்கே போனாய் இத்தனை காலமாய்

உயிரில் கலந்த இன்னிசை போல்
உனக்குள் தானே உறைந்திருந்தேன்

புல்மேல் விழுந்த பனித் துளியே
எங்கே போனாய் இத்தனை நாளாய்
இன்று குளிர்ந்த என் மனமே
ஏன் மறந்தாய் இத்தனை நாளாய்

—————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “புல்மேல் விழுந்த பனித் துளியே!

 1. உங்கள்   பாடலும் அருமை,பாடலுக்கு உயிரூட்டிய ஆர்  எஸ் மணியின் குரலும் அருமை-பாராட்டுக்கள்-சரஸ்வதி ராசேந்திரன்

 2. கானம் இசைத்தால் உள்ளம் [உளம்] திறக்கும்
  உள்ளம் திறந்தால் உயிர் நிலைக்கும்

  பனியும் காற்றும் உரசுகையில்
  மெல்லிய கீதம் இசைத்திடுமோ

  மலையும் நதியும் உரசுகையில்
  எந்த மொழியில் குலவிடுமோ
  நினைவெல்லாம் பார்வையானால்
  மொழியெலாம் ஊமை [மௌனம்] ஆகிடுமோ ?

  கவிதை பேசுகிறது பவளா,
  பாராட்டுகள்.

  சி. ஜெயபாரதன்

 3. அருமையான வரிகள்
  ஆழமான சிந்தனை!

  உயிரை உணர்வை
  ஊனுடன் கலக்கிய

  உன்னத எழுத்துக்களுக்கு
  ஏற்ற ஒலி!

  திரும்பத் திரும்பப் படிக்கத் 
  தூண்டும் படி உள்ளது சகோதரி!

  தன்னை உய்விக்கும் ஒப்பற்ற படைப்பைத் தந்த அன்புச் சகோதரி பவளாவிற்கும்
  அதனை உயிராக்கி ஒலியேற்றிய மணி அவர்களுக்கும்

  மடை திறந்த வெள்ளமாய்
  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  அன்புடன்
  சுரேஜமீ

 4. அருமையான குரலும் வரிகளும்!
  தெளிவான நீரோடையாக இசை ஓடியது…
  இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
  கொஞ்சம்  Pbs சாயலை உணர்ந்தேன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *