அன்பு நண்பர்களே!

vallamai

வணக்கம். ஒன்றாக இணைந்து பணியாற்றி அறுபது முழுமதி கண்டோம். புதிதாகப் பல கிளைகள் கண்டோம். கனிகள் பிறந்தன. சுவைத்தோர் ஆயிரம். சுவைபடச் செய்த அனைவருக்கும் இந்நாளில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். துஞ்சாமல், பல்வேறு நிலையிலும் எங்களோடு உடனிருந்து இவ்வளர்ச்சிக்கு உரமிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றி கூறும் நேரமிது. உறுதுணையாக உடனிருந்து உதவிக்கரம் நீட்டும் தோழர், தோழியரே , வல்லமை என்னும் மலரின் மணம் வீசும் இதழ்களான, எழுத்தாளர்களே, உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தைகளால் வல்லமையை வளமையாக்கியிருக்கிறீர்கள். தேன் சிந்தும் மலரில் நுகர்கின்ற வண்டாய் வரும் வாசகர்களே உங்களுடைய அபரிமிதமான வருகையே எங்களை உற்சாகமூட்டுகிறது. இந்த வண்டுகளின் ரீங்காரமே நம் வல்லமையை மென்மேலும் சிறப்பாக்குகிறது. இந்நேரத்தில் இந்த இதழ் மேலும் சிறப்புப் பெற வழிகாட்டுதல் புரிந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து இணைந்திருப்போம். இன்தமிழ் இனிமையை இன்பமாய் சுவைப்போம். வாரீர்!!

வல்லமை நிர்வாகக் குழு

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆனந்தமான ஆறாம் ஆண்டு!

  1. அன்பிற்கினிய வல்லமையாளர்களே…….ஆசிரியப் பணியாற்றும் பெருந்தகைகளே……எண்ணக்கருத்தேற்றும் ஏற்றமிகு பங்களிப்பாளர்களே…..அறிஞர்களே……கவிஞர்களே……ஆன்றோர்களே……சான்றோர்களே…..

    ஆறாம் ஆண்டில் அடியெடுத்து
        வைக்கின்றோம்!

    அறுபடைத் தலைவனவன்
       துணையோடு

    வருங்காலம் சொல்லும்
       வல்லமை வண்ணங்களை

    இணையத்தின் ஒப்பற்ற
        இதழின் பெருமைகளை

    நானும் இணைந்திட்டேன்
       நாயகன் அருளாலெ

    நம்மை நாம் வாழ்த்த
       நாடும் நமை வாழ்த்த
    நானிலம் வாழ்த்தட்டும்
       நாற்திசையும் வாழ்த்தட்டும்
    நம் தமிழர் மரபோடு
       நாமெலாம் ஒன்றாக
    நடைபோடும் நாளெலாம்
       நனிசிறக்க வாழ்ந்திடுவோம்!

    அன்புச் சகோதரர் அண்ணா கண்ணன் தொடங்கி, அன்புச் சகோதரி பவள சங்கரி, மேகலா இராமமூர்த்தி, இன்னும் பல ஆளுமையாளர்கள், வல்லமையாளர்கள் என அனைவரும் அவர்தம் பணி சிறந்து விளங்க

    வாழ்த்துகிறோம்!

    அன்புடன்
    சுரேஜமீ

      

  2. ஆறல்ல, அறுபது, அறுநூறு, ஆறாயிரம் என வளர வாழ்த்துகின்றேன்.

  3. ஆறாம் ஆண்டு தொடக்கம் 

    நான்கு எழுத்திற்கு  ஓர்  சிறப்புண்டு,
    வல்லமை என்கிற  பெயருண்டு 

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து  வைத்து,
    ஒப்பற்ற  மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

    கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பிணை நல்கட்டும்  
    நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

    அன்புச் சகோதரர் அண்ணா கண்ணன் தொடங்கி, அன்புச் சகோதரி பவள சங்கரி, மேகலா இராமமூர்த்தி, இன்னும் பல ஆளுமையாளர்கள், வல்லமையாளர்கள் என அனைவரும் அவர்தம் பணி சிறந்து விளங்க

    வாழ்த்துகிறோம்!

    ரா.பார்த்தசாரதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *