கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1

0

மதுவருந்தும் அங்காடி

ajay

கவிஞானி ரூமியின் கவிதைகள்

(கி. பி. 1207-1273)

கவிதை -2 பாகம்-1

மதுவருந்தும் அங்காடி

(The Tavern)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும்.

மது குடிக்கும் அங்காடி ஒரு கீர்த்தி பெற்ற நரகம் ! அங்கே மனித இனம் மகிழ்ச்சியாகத் துயருற்றுச் சத்தியத் தேடலில் பின்தங்கிப் போகிறது ! மதுவருந்தும் கடை ஓர் அபாயக் குடிக் கூடம் ! அங்கே சில சமயம் மாறு வேடம் தேவைப்படுகிறது ! ஆனால் உனது இதயத்தை அங்கு நீ மூடிக் கொள்ளாதே ! அதைத் திறந்து வை ! மன முறிவு, வீதியில் ஒரு கூப்பாடு – இவை மதுக்குடிக் கடைகளிலிருந்து தொடங்குபவை. அங்கிருந்து மனித ஆத்மா தன் இல்லப் பாதை தேடி மீள்கிறது.”

கவிஞர் ரூமி (The Tavern)

ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸூஃபி மாயப் புதிர்க் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார் :

+++++++++++

மரண கானம்

எப்படி நீ அறிவாய்

என்னுள்ளே துணையாய்

எத்தகைய

மன்னவன் ஒருவனை

மறைத்து வைத்துளேன் என்று ?

என் பொன் முகத்தை

நோக்காத வண்ணம்

உன் ஓரக்கண் பார்வையைத்

தவிர்த்திடு !

ஏனெனில் இரும்பால் ஆனவை

எனது கால்கள் !

++++++++++++++++

கவிதை -2 பாகம்-1

மதுவருந்தும் அங்காடி

பகல் பூராவும் சிந்திப்பேன்

அதைப் பற்றி

பிறகு இரவில் அதைச் சொல்வேன் !

எங்கிருந்து வந்தேன்

நான் ?

என்ன செய்திருக்க வேண்டும்

நான் ?

ஒன்றும் நான் அறிந்திலேன் !

எங்கிருந்தோ வந்தது

என் ஆத்மா

எனக்கது உறுதியாய்த் தெரியும் !

அங்கு போய்

அடங்க முடிவில் ஆசை !

++++++++++++

எனக்கு இந்தக் குடிப் பழக்கம்

வேறோர் மதுக்கடையில் துவக்கம் !

எனக்கில்லை குடிமயக்கம் !

முழுச்சுய நினைவிருக்கும்

மீண்டும் நானங்கு உலவும் போது !

வேறு கண்டத்துப் பறவை போல்

ஒரு பெருங் கூண்டுக்குள்

அமர்ந்துளேன் !

பறக்கும் நாளும் நெருங்கும் !

ஆனால்

யார் உள்ளார் காதருகில்

என்குரல் கேட்க ?

யார் பேசுவார்

என் வாயுடன் சேர்ந்து ?

++++++++++++

அப்பால் நோக்குவது யார்
என் கண்களோடு ?

ஆத்மா வென்றால் என்ன ?

வாய் இனிக்கும் பதில்

எனக்குள தென்றால்

இந்தக் குடிச்சிறை

உடைக்க முடியும் என்னால் !

நானாகப் பிறந்திலேன்

இங்கே என் இச்சைப்படி !

நானதை நீங்கவும் இயலாது

விருப்பப்படி !

இங்கு என்னைக் கொண்டு

வந்தவரே

இழுத்துச் செல்ல வேண்டும்

மீண்டும் வீட்டுக்கு !

++++++++++++

இக்கவிதையில் என்ன சொல்வேன்

என்பதை நான் அறியேன் !

அதைத் திட்ட மிடுவ தில்லை !

வெளியே நான் சொல்லும் போதில்

மிக்க அமைதி யாக இருப்பேன்

அபூர்வ மாகத் தான் பேசுவேன் !

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *