இந்தியக் குடியரசு!

-ராபார்த்தசாரதி

அறுபத்தாராம்  ஆண்டு   குடியரசு தினத்தைக்  கொண்டாடுதே,
இந்திய    நாடும்   உலகளவில்     வல்லரசு    ஆனதே ,
உலகளவில்  நாம்   இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோமே
வேற்றுமையில்  ஒற்றுமை  என்பதைக்  காண்கிறோமே! 

இயற்கைச்  சீற்றம்  அடைந்து   வெள்ளம்  பெருகியதே Republic-Day
நாட்டுக்கு  நாடு  உதவிக்கரம்  நீட்டியதே,
இந்தியன்  என்று  பெருமிதம் கொள்வோமே
நாட்டு  நலனில்  அக்கறை கொள்வோமே! 

குடியரசு நாடாய் திகழ்ந்து, பல திட்டங்கள் தீட் டுதே
நாட்டின் முன்னேற்றதிற்கும் , அக்கறை காட்டுதே
ஒற்றுமை எனும் பாலம் மாநிலங்களிடையே வளர்கின்றதே,
மொழிகள் பலவாயினும் ஒற்றுமை   ஓங்குதே ! 

நாடு  உனக்கு என்ன செய்தது எனக்  கேட்காதிர்கள்
நீங்கள் நாட்டிற்கு என்ன செய்திர்கள் என்பதை நினையுங்கள்,
நாடு வளம்பெற  ஒற்றுமையுடன்  பாடுபடுவோமே,
பிற  நாட்டிற்கு  எடுத்துகாட்டா ய் என்றும் விளங்குவோமே! 

ஜனநாயகத்தின்  குடைக்கீழ்   வளரும்  நாடு,
கலாசாரத்திலும்ஆன்மிகத்திலும்  சிறந்த நாடு,
பல இன்னல்களை எதிர்கொண்டு வெற்றிபெற்ற நாடு,
ணையற்ற  ந்ததியுடன் திகழும்  இந்தியா  எனும் நாடு!

 

 

About ரா. பார்த்த சாரதி

Iam residing at chennai ( Villivakkam) I am retired person from a pvt company (worked as GM) and my hobbies are writing poem and short stories. I am basically post graduate in Tamil and Economics. I wrote some poem in Kavidai Uravu, Tamiz pani, and short stories in Kumudam as well as dinamalar. I wrote short stories " as pen name of BALAA or INIYAVAN.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க