‘தில்லியின் மரங்கள்’ – நூல் அறிமுகம்

அண்ணாகண்ணன்

Trees of Delhiகாந்தி கல்வி மையத்தில் 31.08.2011 அன்று மாலை நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றேன். பேரா.சு.சுவாமிநாதன், ‘தில்லியின் மரங்கள்’ (Trees of Delhi: A Field Guide) என்ற தலைப்பிலான, பிரதீப் கிருஷ்ணன் எழுதிய நூலைச் சிறப்புற அறிமுகப்படுத்தினார். அவரது காட்சி உரையை, மிகச் சிரத்தையாகவும் அழகியல் உணர்வுடனும் தயாரித்திருந்தார்.

பற்பல முக்கிய மரங்கள், அவற்றின் பாகங்கள், சிறப்புகள், அமைப்புகள், அடையாளங்கள் ஆகியவற்றைப் பிரதீப் கிருஷ்ணன், ஆவணமாகத் தொகுத்துள்ளார். புத்தகத்தின் உள்ளடக்கம் மட்டுமின்றி, வடிவமைப்பு, அணுகுமுறை ஆகியனவும் சிறப்பாக உள்ளமையைப் பேரா.சுவாமிநாதனின் உரை மூலம் உணர முடிந்தது. மரங்களை அடையாளம் காணவும் புரிந்துகொள்ளவும் இந்த நூல், சிறந்த கையேடாக விளங்குகிறது.

குறிஞ்சி, முல்லை… ஆகியவற்றைக் கொண்ட அக இலக்கியப் பூங்கா, வெட்சி, கரந்தை … ஆகியவற்றைக் கொண்ட புற இலக்கியப் பூங்கா, 99 மலர்களைக் கொண்ட குறிஞ்சிப் பாட்டுப் பூங்கா, வேதங்களில் குறிப்பிடப்பெறும் மரங்களைக் கொண்ட பூங்கா, சிலப்பதிகாரப் பூங்கா, கிருஷ்ணன் கலக்கிய வீதி… எனப் பல்வேறு கருக்களின் அடிப்படையில் பூங்காக்களையும் வீதிகளையும் அமைக்கலாம் என்ற அவரின் யோசனை, சிந்தையைக் கவர்ந்தது.

இவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே செல்க: http://www.saigan.com/heritage/swaminathan/index.html

கூட்டம், சரியான நேரத்தில் தொடங்கி, சரியான நேரத்தில் நிறைவுபெற்றது. நண்பர்கள் தி.சுபாஷிணி, அ.அண்ணாமலை, பத்ரி சேஷாத்ரி, பரோடா வங்கி கண்ணன் உள்ளிட்டோரை இங்கே சந்தித்தேன்.

=================================

படத்திற்கு நன்றி:  http://www.amazon.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *