காயத்ரி பூபதி

அழுகின்றேன், சிரிக்கின்றேன்

கோபத்தில் கொந்தளிக்கின்றேன்

புரட்சியாய் பொங்கி எழுகின்றேன்

அமைதியாய் நடக்கின்றேன்

ஆனந்தத்தில் திளைக்கின்றேன்

அழகை இரசிக்கின்றேன்

அழகாய் இருக்கின்றேன்

அனைத்துமாய் இருந்து

அனைத்தையும் வெளிப்படுத்தும்

மனிதனே கவிதை என்கின்றாய்.

கவிதையே! இது தான் நீயென்று

உன்னை நான் வடித்துவிட்டு

பெருமிதம் கொள்கின்றேன்!

நீயோ! இது தான் நானென்று

என்னை செதுக்கிவிட்டு

அமைதியாய் புன்னகைக்கின்றாய்

நீயே கவிதை என்கின்றாய்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க