காயத்ரி பூபதி
முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஹைதராபத்தில் வசித்து வருகிறார். இவர் "குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்" என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் "சங்க இலக்கியத்தில் கருப் பொருளாட்சி" என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தன லக்ஷிமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் ஹிந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.