நடை பயில்வாய் மகளே !

காயத்ரி பூபதி

baby-walk-small

சிந்தை முழுக்க நிறைந்தவள்

சின்னஞ் சிறு குழந்தை யவள்

சிறு நுதல் பேரொளியாய்

குவி இதழ் குறு நகையாய்

பூப் போன்ற புன்னகையால்

அன்றலர்ந்த மலர் போல

வான் முகம் சிவக்க

இசைந்தாடும் சலங்கை ஒலிக்க

அசைந்தாடும் தென்ற லென

குறுநடையே கலை யென

நடை பயிலும் சிலையழகே

என் மகளே! என் மகளே!

குவளை செவ்வாய் முத்தழகே!

புவி சிறக்க நடைபயில்வாய்

மகளே நடை பயில்வாய்!

தத்தி தத்தி தடுமாறினாலும்

தடம் மாறாமல் நடை பயில்வாய்!

தடுமாறி விழுந்தாலும் திரும்ப

எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!

தடம் நிறைந்த இடர் நீக்க

உன் திறம் உணர்ந்து

கலங்காமல் நடை பயில்வாய்!

புவி போற்ற நடை பயில்வாய்!

நடை பயில்வாய் மகளே! நடை பயில்வாய் !

6 thoughts on “நடை பயில்வாய் மகளே !

 1. //தத்தி தத்தி தடுமாறினாலும்

  தடம் மாறாமல் நடை பயில்வாய்!

  தடுமாறி விழுந்தாலும் திரும்ப

  எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!

  தடம் நிறைந்த இடர் நீக்க

  உன் திறம் உணர்ந்து

  கலங்காமல் நடை பயில்வாய்!

  புவி போற்ற நடை பயில்வாய்!//

  அருமை காயத்ரி. தங்கள் அன்பு மகளின் பீடுநடைக்காட்சி கண்களின் முன் அழகாக மலர்கிறது. வாழ்த்துகள் சகோதரி.

 2. பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா, நன்றி அக்கா.

 3. தடுமாறி விழுந்தாலும் திரும்ப
  எழும் திடம் மறவாமல் நடை பயில்வாய்!

  Vazhkai thathuvam, migavum arumai.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க