வளமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

ap

வல்லமை வாசக உலகத்தமிழ் அன்பர்களுக்கு
வளமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

====================================

பிரமனவன் னுலகத்தைத் தோற்றுவித்த திருநாளாம்
பிரதான சித்திரையே யாகும்..!

அம்பிகை அவதரித்த சித்திரைத் திங்கள்
இந்திரனின் குழந்தை சித்திரை..!

காலபுருஷனவன் பிறப்பு இறப்பென நமை
காலமெலாமாளப் பிறந்த மாதம்..!

அவதாரம் பலயதில் உயிரின மூலமாம்
மச்சாவதாரம் தோன்றிய மாதம்

வாழும் கணக்கறிந்த சித்ரகுப்தனை வாழ்த்தி
வணங்கும் சித்திரை முதல்நாள்..!

சித்தபுருஷர் பலரவதரித்த திருநாளைக் கொண்டாடும்
சித்திரை திங்களெனும் முதல்நாள்..!

பஞ்சாங்கம் படித்து வரும்பஞ்சத்தைப் போக்கும்
பாரம்பரியத் திருநாளே சித்திரைநீ..

அன்னப் படைப்பில் ஆறுதல் அடைந்துநீயுன்
அக்னிச் சிறகை விரிக்காதே..!

சித்திரயை முதலெனவும் பல்குனியைக் கடையென்றும்
சித்தநாடி குறி சொல்லும்..!

புண்ணிய மாதமாம் சித்திரையில் விரதமிருக்க
எண்ணிய தெல்லாம் நிறைவேறும்..!

இளவேனிற் காலம்தான் வசந்தமெனப் பிறந்து
வந்தது தான் சித்திரையதிலே..!

இனிப்பும் கசப்பும் கலந்ததே வாழ்வென
வேம்பும் மாவும் பூத்துக்குலுங்கும்..!

சித்திரைப்பூ மலர்கிறாள் செந்தமிழில் சிரிக்கிறாள்
நித்திரைகலய விழித்திடுவீர் வாழ்த்துச்சொல்ல..!

சித்திரையின் முதல்நாளிலுன் சிந்தை மகிழ
பக்தியா லுனை வாழ்த்துகிறோம்..!

அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க