தந்தையர் தினக் கவிதை

 

பழ. செல்வமாணிக்கம்

 
இப் புவியில் வாழ உயிர் தந்தாய்!
உயிர் வாழ உணவு தந்தாய்!
நடக்கச் சொல்லித் தந்தாய் !
படிக்கச் சொல்லித் தந்தாய்!
விரும்பியதை வாங்கித் தந்தாய்!
உழைத்து ஓடாய் நீ தேய்ந்தாய் !
குடும்பம் மொத்தத்தையும் நீ
சுமந்தாய்!
துன்பத்தை நீ தாங்கி இன்பத்தை
எமக்குத் தந்தாய்! நாங்கள்
வளரும் வரை கவசமாய் நீ இருந்தாய்!
வளர்ந்த பின்னர் தோழனாய் நீ நடந்தாய் !
அனைத்தையும் தந்ததினால் நீ தந்தை!
உன் அன்பிற்கு ஈடு இணை இல்லை!
பிள்ளைகளின் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க