இலக்கியம்கட்டுரைகள்

எமது வாழ்வில் கோவில் – பகுதி I

 

மகாதேவஐயர் ஜெயராமசர்மா, B.A (Hons ) Dip. in ( Edu) Dip. In ( Soci ) M.Phil ( Edu ) SLEAS

முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்              

 

“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.   இவ்வாறு கோவிலை இவர்கள் முதன்மைப் படுத்தியதற்குக் காரணம் என்ன? கோவில் இல்லா விட்டால் வாழவே முடியாதா ? கோவில் என்பது வாழ்க்கையில் கட்டாயமான ஒன்றா ? இப்படிப் பல வினாக்கள் நம்முள் பலருக்கு எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வினாவானது அன்று தொடங்கி   இன்றுவரை மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி எழுகின்ற மனங்களுக்குத் தெளிவு பிறக்கும் நோக்கில் சில கருத்துக்களை முன்வைக்கு முகமாகவே இச்சிந்தனை  இங்கு உருவாகி வந்திருக்கிறது.

 வாழ்க்கை என்பது மனிதனுக்குக் கிடைத்த பெரும்பேறு என்று தான் எண்ண வேண்டும். மனிதன் விலங்குகள் போல வாழ்ந்துவிட முடியாது.

ஏனென்றால் சிந்தித்துச் செயலாற்றும் வாய்ப்பு மனிதனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. சிந்திக்கும் ஆற்றலே மனிதனை உயர்வு உடையவன்   ஆகக்காட்ட  முயல்கிறது எனலாம். விலங்குகளோடு ஒன்றாகவே காட்டில் வாழ்ந்த மனிதன் இப்பொழுது இல்லை. மனிதனது வாழ்வானது ஓங்கி உயர்ந்து வந்து நிற்கிறது. அப்படி வந்து நிற்கும் நிலையிலும் மனிதன் மனத்தில் ஒருபக்கம் விலங்கு குணமும் இயல்பும் ஒழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மனிதன் மனம் போனபடி வாழ முற்படுகின்றான். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து வாழ்வினையே தொலைத்தும் இழந்தும் விடுகின்றான்.

இந்த நிலையில் ” இப்படித்தான் வாழவேண்டும் ” என்னும் நெறி முறையினை மனிதனுக்கு வழங்கி நிற்பது கோவில்களும் சமயங் களுமே ஆகும். இதனால்தான் ” கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ” என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்

எனக் கொள்ள முடிகிறதல்லவா ?

(தொடரும்)

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க