சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்-1

3

சு.கோதண்டராமன்

தம்ரெஞ்சும், தங்க்லீஷும்

(காரைக்காலில் 1970 இல் நான் வேலையில் சேர்ந்த புதிதில் கேட்ட உரையாடல் இது.

கீழே இருப்பது, அதே ஊரில் இன்று பேசும் தமிழ்.)

 

“போன் ழூர் முசே. நல்லா இருக்கீங்களா?”

போன் ழூர். வாங்க. எப்படி இருக்கீங்க?”

நல்லா இருக்கேன் எங்கே இந்தப் பக்கம்?”

மதாமுக்கு மலாது. ஒஸ்பதால் வரைக்கும் வந்தேன். பொசியம் வாங்கிக் கொடுத்திட்டு அவங்களை ரிக்ஷாவிலே ஏத்தி அனுப்பிச்சுட்டேன். மேரிலே புல்தான் த நெசான்ஸ் வாங்க வேண்டியிருக்கு அதுக்காக வந்தேன். முசே யார்னு தெரியலியே?”

“முசே நம்ம கம்ராது. நம்ம ஊர் எகோல்லே புதுசா அப்பாய்ந்த் ஆகியிருக்கிறாங்க. ஹிஸ்த்வார் ஐன்ஸ்த்ரக்தர். கோதண்டராமன்னு பேரு.”

“போன் ழூர் முசே.”

“போன் ழூர்.”

“நீங்க பீரோவுக்குப் போகலியா?”

“பீரோவிலே தான் இருந்தேன். முசே ஊருக்குப் புதுசு இல்லையா,  கோந்திரிபுசியத்திலே சீமெண்ணெய்க்கு போம் வாங்கிக் கொடுக்கலாமின்னு பர்மிசியோன் சொல்லிட்டு வந்தேன்.”

“வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா? மகளுக்கு மாப்பிள்ளை பாத்திட்டு இருந்தீங்களே, ஏதாவது கிடைச்சுதா?”

“ஒரு எடம் வந்திருக்கு முசே. பையன் பரீலே வேலை பாக்கறாரு. நம்ம எகோல் சாந்த்ரால்ல  திரெக்தரா இருக்காரில்லே, மகாலிங்கம், அவரோட ரெண்டாவது பையன் தான்.”

“என்ன படிச்சிருக்காரு?”

“இங்கே நம்ம கொலேழ் மதர்ன்லே ப்ரேவே முடிச்சிட்டுப் போனாரு. பரீலே போய் பக்ளோரியா முடிச்சிட்டாரு.”

“மகாலிங்கம் நல்ல மனுஷன் தான். அவரு புள்ளையும் நல்ல பழக்க வழக்கம் உள்ளவராத்தான் வளர்த்து இருக்கணும். நேசியனாலிதே எடுத்திட்டாரா? சோல்த் என்ன எடுக்கிறாரு?”

“நேசியனாலிதே இருக்கு முசே. ஆறாயிரம் ஃப்ரான் சோல்த் வருது.”

“மகாலிங்கம் சர்வீசிலே இருக்காரா?”

“இருக்காரு முசே. அடுத்த மாசம் ரெத்ரெத் வாங்கறாரு. பிஞ்ஜன் ஆனப்புறம் அவரும் ஃப்ரான்ஸ் போயிடுவாரு.”

****************************************************************************************************************************************************************

“குட்மார்னிங் சார். நல்லா இருக்கீங்களா?”

“குட்மார்னிங். வாங்க, எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் எங்கே இந்தப் பக்கம்?”

“ஒய்ஃபுக்கு ஃபீவர். ஹாஸ்பிடல் வரைக்கும் வந்தேன். மெடிசின் வாங்கிக் கொடுத்திட்டு அவங்களை ரிக்.ஷாவிலே ஏத்தி அனுப்பிச்சுட்டேன். முனிசிபாலிட்டிலே பர்த் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கு அதுக்காக வந்தேன். சார் யார்னு தெரியலியே?”

“சார் நம்ம ஃப்ரெண்டு. நம்ம ஊர் ஸ்கூல்லே புதுசா அப்பாய்ண்ட் ஆகியிருக்கிறாங்க. ஹிஸ்டரி டீச்சர். கோதண்டராமன்னு பேரு”

“குட்மார்னிங் சார்.”

“குட்மார்னிங்.”

“நீங்க ஆஃபீசுக்குப் போகலியா?”

“ஆஃபீஸ்லே தான் இருந்தேன். சார் ஊருக்குப் புதுசு இல்லையா. டாலூக் ஆஃபீஸ்லே மண்ணெண்ணெய்க்கு பர்மிட் வாங்கிக் கொடுக்கலாமின்னு பர்மிஷன் சொல்லிட்டு வந்தேன். .”

“வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா? மகளுக்கு மாப்பிள்ளை பாத்திட்டு இருந்தீங்களே, ஏதாவது கிடைச்சுதா?”

“ஒரு எடம் வந்திருக்கு சார்.. பையன் பாரீஸ்லே வேலை பாக்கறாரு. நம்ம மிடில் ஸ்கூல்ல  ஹெட்மாஸ்டரா இருக்கார்லே மகாலிங்கம், அவரோட ரெண்டாவது பையன் தான்.”

“என்ன படிச்சிருக்காரு?”

“இங்கே நம்ம மாடர்ன் காலேஜ்லே எஸ்.எஸ்.எல்.சி முடிச்சிட்டுப் போனாரு. பாரீஸ்லே போய் பேச்சிலர் டிகிரி முடிச்சிட்டாரு.”

“மகாலிங்கம் நல்ல மனுஷன் தான். அவரு புள்ளையையும் நல்ல பழக்க வழக்கம் உள்ளவராத்தான் வளர்த்து இருக்கணும். சிடிசன்ஷிப் எடுத்திட்டாரா? சாலரி என்ன எடுக்கிறாரு?”

“சிடிசன்ஷிப் இருக்கு சார். ஆறாயிரம் ஃப்ரான்க் சாலரி வருது.”

“மகாலிங்கம் சர்வீசிலே இருக்காரா?”

“இருக்காரு சார். அடுத்த மாசம் ரிடயர் ஆறாரு. பென்ஷன் வாங்கிட்டு அவரும் ஃப்ரான்ஸ் போயிடுவாரு.”

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்-1

  1. பேச்சு மொழியின் தனித்துவம், அந்தத் தனித்துவத்தின் அழகு, கலோனிய ஆட்சி மொழியின் தாக்கம் எல்லாவற்றையும் மிகவும் நன்றாக அமைத்து வழங்கியுள்ளார், திரு. எஸ்.கோ. ஒரு சொல்லாட்சியை பற்றீ ~’மதாமுக்கு மலாது’. ‘Madame is unwell’. Madame means lady. So wife. Malady is disease. Well Done, திரு.எஸ்.கோ.

  2. முன்பு நான் ஆசிரியராகப் பணிபுரிந்த ஒரு பள்ளியில் பிரென்சு மொழி விருப்பப் பாடமாக இருந்தது.

    ஒரு முறை ஒரு கீழ் வகுப்பில் ( நான்கு அல்ல ஐந்தாம் வகுப்பாய் இருக்கலாம். சரியாய் நினைவில்லை) பிரென்சு பாடம் நடந்து கொண்டிருந்த போது அவ்வழியாய் கடந்து சென்றேன். ஏதோ புரியாத சில சொற்கள் காதில் விழுந்தன.

    அடுத்த நாள் பிரென்சு ஆசிரியரிடம் கேட்டேன் “என்ன சார்? நேத்து ஏதோ கோலா வட்டர் பாட்டில் நேம் -னு வகுப்பிலே பாடம் எடுத்தீங்க. அப்படின்னா என்ன?”

    அவரோ சிரிக்க ஆரம்பித்துவிட்டார் “சார் அது கெலே வொத்ரோ நோம்? அப்படின்னா உங்க பேர் என்ன அப்படின்னு அர்த்தம்” என்றார்.

    நானும் சிரித்துவிட்டேன்.

    என்றேனும் ஒரு நாள் நானும் பிரென்சு கற்றுக்கொள்வேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.