பதின்மத்தின் பரிதவிப்பில்………..(2)

வசந்தா சுத்தானந்தன்

டீன் ஏஜ் பருவத்தினா  பற்றி பவள சங்கரி  கூறிய  “அவாகள் மீது நம் எண்ணங்களை திணித்தல் கூடாது. அவாகள் வாழ வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்ற கூற்று முற்றிலும் உண்மை. மேலும் பதின்மத்தினரைப் பற்றி சில விசயங்களைப் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன்.

1. பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வே இன்றி, மிகப்பெரிய பொய்யையும் அசால்ட்டாக எடுத்து வீசும் விளையாட்டுக் குழந்தைகள்!

2.    டீன் ஏஜ் பருவத்தில் பெண்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. ஏனெனில் பையன்கள் ஏதாவது சொல்லி பெண்ணின் பலவீனத்தை பயன்படுத்தி தன் வலையில் விழ வைக்கிறான். அந்தப் பெண்ணை தன் ஆசைக்கு பயன்படுத்தி விட்டு விலகி சென்று விடுகிறான். அது அவனுக்கு பொழுது போக்கு. பெண்ணுக்கு வாழ்க்கைப் பிரச்சனை.

3. 3.    ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கக் கூடிய காலம். பெண்கள் தான் விழிப்புணாவுடன் இருக்க வேண்டும். நட்புடன் இருவரும் இருக்கலாம் தவறில்லை. எல்லை மீறும் போது பெண் அந்த பையனின் நட்பைத் துண்டித்து விட வேண்டும்.

4.    தேர்வு சமயத்தில் பிட் கொண்டு வந்து தேர்வு  எழுதுவது அதிகமாகி விட்டது. பிட் எழுதும் நேரத்தில் மாணவர்கள் படித்து விட்டு வந்து தேர்வு எழுதலாம்.

5. ஆசிரியர்களின் கண்டிப்பான போக்கு தங்களின் நன்மைக்கே என்பது பிற்காலங்களிலேயே உணரப்படுகிறது……. அதாவது தாங்களும் பெற்றோர் ஆகும் காலங்களில் மட்டுமே!

6. வாகனங்கள் ஓட்டும் போது அதி வேகமாக ஓட்டத்தெரிந்தால் மட்டுமே தாங்கள் கதாநாயகர்களாக பார்க்கப்படுவோம் என்ற தவறான எண்ணம்!

7.    மாணவிகள் ஸ்டைலுக்காக சாப்பிடாமல் தங்கள் உடல் நலத்துக்குத் தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் அவாகள் மற்ற மாணவிகளிடம் எனக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது என்று சொல்வது, கல்லூரிக்குக்  குறைந்த அளவு உணவு கொண்டு வந்து இவ்வளவு தான் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்வது போன்றவை அவாகள் உடல் நலத்தைக் கெடுத்து விடும்.

8.    எந்த வேலையும் செய்யாமல் படிப்பது. டீவி பார்ப்பது என்று மட்டும் இருக்கக் கூடாது. வீட்டைக் கூட்டுவது. சுத்தப் படுத்துவது கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். வெளி நாடுகளில் எல்லாம் மாணவாகள்  வீட்டைச் சுத்தமாக வைப்பது , தங்கள்  தேவைகளைத்  தாங்களே கவனித்துக் கொள்வது என்று எளிதாக பழகிக் கொள்கிறார்கள்!  நம் நாட்டில்தான் பெற்றோர்களே தம் குழந்தைகளுக்கு  பழக்காமல் விட்டு விடுகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பதின்மத்தின் பரிதவிப்பில்………..(2)

Leave a Reply

Your email address will not be published.